என் மலர்
நீங்கள் தேடியது "Renovation"
- சேத்தியாத்தோப்பு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் கூளாப் பாடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பள்ளிக்கூட சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் சேரும் சகயுதிகமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 2009 ஆண்டுகளில் போடப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை சீர் செய்யப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
- இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை.
- தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட உடன்குடி பஸ் நிலையத்தில் ஒரு வாரமாக உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத காரணத்தினால், பஸ்நிலையம் வரும் பயணிகள்அவதிபட்டனர்.
இதுபற்றி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார் கூறினர். தற்காலிகமாக 3- எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டு, உயர் கோபுர மின்விளக்கு சரி செய்து எரியவிடப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப்கல்லாசி, செயல் அலுவலர் பாபு, வார்டு கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், அன்புராணி, சரஸ்வதிபங்காளன், மற்றும் சிவா, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த தலைவர், செயல் அலுவலர், கவுன்சிலர்கள் ஆகியோரை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டினர்.
- அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
- தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு 2013-ம் ஆண்டுபேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தற்போதுதஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
அதை சீரமைத்து அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்படுவது குறித்து எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நிருபர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், சீரமைக்க நிதி எவ்வளவு குறித்து ஆலோசனை நடத்தபட்டது. உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.
அதேபோல், தஞ்சையில் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.
அப்போது, தஞ்சை விமான படை தளத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு இடமா ற்றம் செய்வது குறித்து பிரச்சினை இருந்தது. தற்போது இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்தி ராவிடம் ஆலோசனை நடத்தினோம்.
அவர் நில மாற்றம் குறித்து இரண்டு அமைச்சகமும், ஏற்றுக்கொண்டால் விரைவில் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடங்கப்படும் என்றார்.
மேலும், தஞ்சை பெரிய கோவில் முகப்பு பகுதிகளை அழகுப்படுத்தவும், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியா ளர் கார்த்திகேயன், மண்டல குழுத்தலைவர் நீலகண்டன், மாநகர நல அலுவலர் (பொ) அசோகன் ஆகியோர் உடன் உள்ளனர்.
- சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
- கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது.
இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் பொதுமக்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். சேதமடைந்த தளிர்தலை தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் கோரவலசை பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
- முடுவார்பட்டி ஊராட்சி மயானம் சீரமைப்பு பணி நடந்தது.
- மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சி மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியானது. அதன் பேரில் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் மயானத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் முன்னிலையில் முடுவார்பட்டி மயானத்தின் முன்பகுதி, புதர் மண்டி காட்சியளித்த நிலையில் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.
மயானத்தின் உட்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்யப்பட்டது.
- பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
சோழவந்தான்
சோழவந்தானில் நகரி சாலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டெலிபோன் மற்றும் இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வந்தது. 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துவந்தனர். ஆனால் தற்போது இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்போது ஒரே ஒரு பணியாளர் வாரம் ஒருமுறை மட்டும் வந்து செல்லும் நிலை உள்ளது. மற்ற நேரங்களில் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பிஎஸ்என்எல் சிம்கார்டு மற்றும் இணைய இணைப்புகளை பெறுவது இப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதனால் இந்த அலுவலகத்தை மீண்டும் முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற தொலைதொடர்பு துறை பணியாளர் மகாராஜன் கூறுகையில், ஆரம்பகாலங்களில் லேண்ட்லைனுக்குரிய எக்ஸ்சேன்ச் மட்டுமே செயல்பட்டு வந்தநிலையில், பின்னர் 2ஜி மற்றும் 3ஜி அலைகற்றை கூடுதல் வசதிகள் பெற்று டவர் மூலம் தொலைதொடர்பு சேவையை அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பயனீட்டாளர்கள் என பலர் பெற்று வந்தனர். இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை உரிமம் கிடைக்காத நிலை தொடர்வதால் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்கி சோழவந்தான் பி.எஸ்.என்.எல். அலுவலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
- ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஹிர் வேண்டுகோளை ஏற்று, நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை சார்பில் ரூ.15,000 மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து முடித்தனர்.
- ஏற்காட்டில் கடந்த 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பழுத டைந்து காணப்பட்டது.
- இந்த போலீஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய போலீஸ் நிலையம் கட்ட, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப் பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 1894-ம் ஆண்டு கட்டப்பட்ட போலீஸ் நிலையம் பழுத டைந்து காணப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய போலீஸ் நிலையம் கட்ட, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப் பட்டது.
இந்த நிலையில், உள்ளூர் சமூக ஆர்வலர்கள், வர லாற்று சின்னமாக கருதப்ப டும் இந்த கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த கட்டிடம் இடிக்காமல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாழ டைந்த நிலையில் காணப் பட்ட பழைய போலீஸ் நிலைய கட்டிடம், ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் முயற்சியால் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இதனால் 129 வரு டத்திற்கு முன்பு கட்டப்பட்டு பழைய போலீஸ் நிலைய கட்டிடம், தற்போது மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள் ளது. இந்த கட்டிடத்தை மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார். மேலும் இந்த போலீஸ் நிலையத்தை சுற்றுலா பயணிகளின் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போலீஸ் நிலையத்தின் உள்ளே 2 கைதிகள் அறை, ஒரு துப்பாக்கி பாதுகாப்பு அறை, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறை உள்ளது. வரலாற்று சின்ன மாக கருதப்படும் இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. இந்த நிகழ்சசியில் சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல் நாயகி, ஏற்காடு போலீசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- மரக்கன்றுநடுதல், புல்தரை, பாதுகாப்பு வேலி அமைத்தல் என ரூ.90 லட்சத்தில் பணிகள் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை கருவடிகுப்பம் ஜெயராம் கார்டனில் வில்லிமேடுகுளம் என்ற பாரதி குட்டை சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரம் சீர்கெட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் உழவர்கரை நகராட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த குளத்தை புனரமைக்க ரோட்டரி கிளப் புதுவை காஸ்மோஸ் முன்வந்தது.
இதன்மூலம் குளத்தை தூர்வாருதல், பூங்காவாக மேம்படுத்துதல், சோலார் விளக்கு, நடைபாதை, அமரும் இருக்கை, மழைநீர் செல்ல வழித்தடங்கள், மரக்கன்றுநடுதல், புல்தரை, பாதுகாப்பு வேலி அமைத்தல் என ரூ.90 லட்சத்தில் பணிகள் நடத்தப்பட உள்ளது.
இந்த மேம்பாட்டு பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், ரோட்டரி கிளப் காஸ்மோஸ் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.
- சீரமைப்பு பணிகள் நடந்து வருவது பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலை பிரிவில் இருந்து தும்பூர் வரை செல்லும் வகையில் ரோடு உள்ளது. இந்த சாலையின் பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.
தும்பூர் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான செய்தி மாலைமலர் பத்திரிகையிலும் வெளியானது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலையின் பிரிவில் இருந்து தும்பூர் வரையிலான போக்குவரத்து ரோட்டில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரூ.24.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புகள் சுமார் 10 வருடமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக இருந்த வந்தது.
இந்நிலையில் இந்த குடியிருப்புகளை சீரமைக்க ரூ.24.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. சேதராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, செயற்பொறியாளர் வள்ளவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி, பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் தியாக ராஜன், துணைத்தலைவர் சதாசிவம், கிளை தலைவர்கள் தேவா, பிரதீப், நரேஷ், மதன், கட்சி நிர்வாகிகள் புருஷோத்த ம்மன், ஏழுமலை, பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.