என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "riyan parag"
- இலங்கை அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் குவித்தார்.
- இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - பெர்னாண்டோ களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தது. நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்னாண்டோ சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் அசலங்கா 10, சதீரா 0, ஜனித் லியனகே 8, துனித் வெல்லலகே 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் பொறுப்புடன் விளையாடிய குசல் மெண்டீஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
- இந்த போட்டியில் ரியான் பராக் அறிமுகமானார்.
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ரியான் பராக், ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.
இந்த போட்டியில் அறிமுக வீரராக ரியான் பராக் களமிறங்குகிறார். இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 256 வீரர் ஆவார். அவருக்கி நட்சத்திர வீரர் விராட் கோலி தொப்பி வழங்கினார்.
இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வான முதல் அசாம் மாநில வீரர் ரியான் பராக் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
- இந்திய அணி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.
மும்பை:
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வேயில் இருக்கும் ஹராரே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
அப்போது, மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங் செய்யும்போது, எனது பாஸ்போர்ட்டை காணவில்லை என இந்திய வீரர் ரியான் பராக் கூறியுள்ளார். அவரது பையில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்போர்ட் கிடைத்ததால் பராக் ஹராரேவுக்கு பறந்தார்.
இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இணையதளத்திற்கு பேட்டி அளித்த பராக், மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங்கில் எனது பாஸ்போர்ட்டை காணவில்லை. நல்லவேளை, அதே பையில் தான் இருந்திருக்கிறது. இது கவனக்குறைவு கிடையாது. இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தபின் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன். இந்திய அணிக்கு ஆடப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இந்த தவறு நடந்தது என தெரிவித்தார்.
- தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் பார்க்க மாட்டேன் என்று பராக் கூறியிருந்தார்.
- அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.
ஐபிஎல் தொடரில் பெரிய அளவிள் விளையாடாத ரியான் பராக். 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று பராக் தெரிவித்திருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஃபைனலில் மட்டும் எந்த அணி வெல்லப் போகிறது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் ரியான் பராக் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ள அவர் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
என ஸ்ரீசாந்த் கூறினார்.
- உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை.
- நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்தியா தங்களுடைய பயிற்சிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய முதல் போட்டியில் களமிறங்கும் இந்தியா 2-வது போட்டியில் பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையை தமக்கு இடம் கிடைக்காததால் தாம் பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அரையிறுதியில் விளையாடப் போகும் டாப் 4 அணிகளை பற்றி கணித்தால் நான் ஒருதலைபட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக் கோப்பையில் விளையாடும் போது தான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்.
ஏதோ ஒரு தருணத்தில் என்னை நீங்கள் இந்திய அணியில் எடுப்பீர்கள் அல்லவா? எனவே நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பதை பற்றி கவலைப்படவில்லை என்று கூறினார்.
அவருடைய இந்த கருத்து இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுவரை இந்தியாவுக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரிலும் 2024 சீசன் தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டுள்ள ரியான் பராக் சுயநலமாக நாட்டுப்பற்று இல்லாமல் பேசியுள்ளார். அதனால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
- ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார்.
- அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை அவர் தேடியது அம்பலமானது.
சென்னை:
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 3-வது இடத்தை பிடித்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிற்கு சிறந்த சீசனாக அமைந்தது. 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் ரியான் பராக் நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இளம் வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் யூடியூபில் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்துள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். இதில் தான் ரியான் பராக் பிரச்சனையில் சிக்கினார்.
யூடியூப் தலத்தில், இலவச மியூசிக் தேட அவர் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே தேடியிருந்த சில விஷயங்கள் அப்பட்டமாக அந்த லைவ் ஸ்ட்ரீமில் தெரியவந்துள்ளது. அதில் அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை தேடியது அம்பலமானது.
ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் ரியான் பராக் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி ரியான் பராக் பார்த்துள்ளதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும்.
- எனது அம்மா இன்று என்னை நினைத்து பெருமைப்படுவார்.
ஜெய்ப்பூர்:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் குவித்தார். பின்னர் சேசிங் செய்த டெல்லி முடித்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை போன்ற சமீபத்திய உள்ளூர் தொடரில் விளையாடி பெரிய ரன்கள் அடித்ததுதான் பார்முக்கு வர உதவியதாக ரியான் பராக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அம்மா இங்கே இருக்கிறார். அவர் 3 - 4 வருடங்களாக என்னுடைய தடுமாற்றங்களை பார்த்தவர். இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார். என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும். அது நான் 0 ரன்கள் எடுக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி எப்போதும் மாறாது.
இந்த வருடம் எனக்கு உள்ளூர் தொடர் அபாரமானதாக அமைந்தது. அது தற்போது உதவுகிறது. சில நேரங்களில் டாப் 4 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்களும் விளையாட வேண்டும். பிட்ச்சில் பந்து மெதுவாக நின்று வந்தது. கடந்த போட்டியில் சஞ்சு பையா அப்படி விளையாடினார். நான் கடினமாக வேலை செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
என்று கூறினார்.
- முதல் இன்னிங்சில் ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் அவர் 155 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 5ஆம் தேதி துவங்கிய 5-வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சட்டீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் போராடி 327 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும் சாசங் சிங் 82 ரன்களும் எடுத்தனர். அசாம் தரப்பில் ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் அணி சட்டீஸ்கர் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.
அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் 4-வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதிரடியாக விளையாடிய அவர் 56 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் 11 பவுண்டரி 12 சிக்சருடன் 155 (87) ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அசாம் அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மீண்டும் சுருட்டிய சட்டீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சட்டீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31*, ரிசப் திவாரி 48* ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் கேப்டனாக விளையாடிய ரியான் பராக் தன்னுடைய ஐபிஎல் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மாநில அணியை குறைந்தபட்சம் தனி ஒருவனாக இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
- சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக பராக் விளையாடினார்.
- 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நவம்பர் 19-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக ரியான் பராக் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக விளையாடினார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்டாக் அலி டிராபியில் நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் (182.79) பராக் அதிக ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
- இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம்.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ரவி பிஷ்னோய் அருமையாக பந்து வீசினார். அவரது பந்தை மூன்று, நான்கு சிக்ஸர் விளாச நாங்கள் கமிட் ஆகவில்லை. இந்த ஆடுகளம் சவாலானதாக இருந்தது. அவர்களது பந்து வீச்சும் ஸ்மார்ட்டாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் அடித்து ஆட தவறினோம்.
இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம். துரதிர்ஷ்டவசமாக அவர் நல்ல ஃபார்மில் இல்லை. வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட் செய்கிறார். அவரது சிக்கலை அடையாளம் கண்டு, அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். எங்கள் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.
என சங்ககாரா கூறினார்.
- ஏப்ரல் 2-ந் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
- ரியான் பராக் கங்னம் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின்னர் கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது.
எனவே இந்த சீசனில் கோப்பையை வென்றே தீரும் உறுதியுடன் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.
அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோவையும் ஜாலியான வீடியோவையும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் இடம் பெற்றுள்ள ரியான் பராக் கங்னம் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த வீடியோ அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. ஏப்ரல் 2-ந் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
- பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.
- இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனியை பயிற்சி ஆட்டத்தின்போது இமிடேட் செய்துள்ளார். அதை இந்திய கிரிக்கெட் உலகம் ரசித்துப் பாராட்டி வருகிறது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், "ரியான் பராக் எம்எஸ் டோனியை நேசிக்கிறார்!" என்று தலைப்பிட்டுள்ளது.
21 வயதான பராக் கையுறைகளை அணிந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று பயிற்சியாளரிடம் இருந்து குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார். பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து டோனி செய்வது போல் பராக் தோள்களை அசைக்கிறார். இதனை அனைவரும் ரசிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்