என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery"

    • சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஷேர்லின்பெல்மா (வயது 44). இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆசிரியை தனது தாயார் மேரியுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி ஷேர்லின்பெல்மா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

    இதனால் மேரி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும், போலீசார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் நெல்லை டவுன் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் (34), கார்த்திக் (25), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த துர்காநம்பி (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஷேர்லின்பெல்மா வீட்டில் 100 பவுன் நகை, பணத்தை திருடியதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும், 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, கார், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
    • கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் பகுதியில் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கல்லூரிக்கு அய்ய ந்தோப்பு பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவரும், அம்மணம்பாக்கம் ஏழுமலை என்பவரும் காவலாளியாக இருந்து ள்ளனர்.

    இந்நிலையில் கணினி அறிவியல் துறை துணைத்தலைவர் பிரசன்னா, விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கணினி அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த கணினி பொருட்கள் மற்றும் இரண்டு சிஸ்டம் பேட்டரி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரோசணை காவல்து றையினர் அரசு கல்லூரி அறையின் பூட்டை உடைத்து கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை தனிப்படை ஆய்வு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கீழ் குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ராமன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    மகனை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யா வீட்டை பூட்டிக் கொண்டு குடும்ப த்துடன் சென்னைக்குச் சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்க ப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ‌.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை யடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வித்யா அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் ஏ எஸ் பி யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் போலீசார் கொள்ளை போன வீட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    இதே போல அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மனைவி நிர்மலா வயது (49). இவர் சம்ப வத்தன்று அரக்கோணம் கணேஷ் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் இரவு தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது கணேஷ் நகர் பகுதி அருகே வரும்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் நிர்மலாவின் கழுத்தில் இருந்த தாலி செயின் உள்பட 10 பவுன் நகைகளை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா கூச்சலிடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் நகைகளை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.

    இது சம்பந்தமாக அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் இந்த 2 சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மநபர்களை தேடி வருகிறர்கள்.
    • பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கோவை

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது ராமகிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 6½ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராமகிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே உள்ள கார்மல் நகரை சேர்ந்தவர் காணிக்கைமேரி ( 62). இவர் சிட்கோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 1¼ பவுன் மோதிரம், வெள்ளி செயின், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து காணிக்கை மேரி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறர்கள். 

    • வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • சி.சி.டி.வி. ேகமராவில் கொள்ளையர்களின் உருவம் சிக்கியது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த சராதிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(வயது65). குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ஆதிலட்சுமி (வயது50). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

    இவர்களின் ஒரே மகன் மோகன்ராஜ். மாற்று திறனாளியான இவர் கரடிகுடி பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார்.

    மனோகர் மற்றும் அவரது மனைவி மகன் என 3 பேரும் தினமும் காலை 7.30 மணிக்குள்ளாக பணிக்கு சென்று விட்டு, இரவு தான் வீடு திரும்புவார்களாம்.

    ேநற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு மோகன்ராஜ் தனது கடையிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டி இருந்த கேட் திறந்து உள்ளே போன மோகன்ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிய டைந்துள்ளார்.

    மேலும், உள்ளே சென்று அறையில் இருந்த 2 பீரோக்களில் பார்த்தபோது அதில் இருந்த துணிகள், பொருட்கள் எல்லாம் அறை முழுவதும் சிதறிக்கிடந்துள்ளது.

    மேலும் பீரோவில் வைத்து இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக மோகன்ராஜ தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். தொடர்ந்து பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, வீட்டின் வெளிப்புற பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் 2 பேர் வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது. ஆனால் மறுபடியும் வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உறவுகாரர் போல் பேசி மர்ம நபர் கைவரிசை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சுரேஷ் குமார் தத்தனூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர், ஆசிரியர் வீட்டிற்கு வந்து, ஆசிரியர் மனைவி எழிலரசியிடம் , உறவுக்காரர் போல் பேசியுள்ளார்.

    மேலும் புதுமனை விழாவிற்க்கு மா இலை வேண்டும் கொஞ்சம் ஒடித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆசிரியர் மனைவி எழிலரசி எதிர் வீட்டில் மா இலை பறித்து வந்து கொடுத்த நிலையில் மர்ம நபர் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

    சிறிது நேரம் சென்ற எழிலரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த சுமார் 1.60 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகையை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.
    • போலீசார் வழக்குபதிவு செய்து சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி காலனி போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் கோவையில் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராம்கமலா(41) என்ற மனைவியும், விக்ரமன்(20) என்ற மகனும் உள்ளனர்.

    சதீஸ்குமார் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவது வழக்கம். ராம்கமலா சுயஉதவிக்குழு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இடைவிடாது பெய்த மழையினால் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ராம்கமலா பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.14ஆயிரம் ரொக்கம் மற்றும் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் கொள்ளைபோயிருந்தன.

    சுயஉதவிக்குழு பெண்களிடம் வசூல் செய்த பணத்தை தான் கட்டுவதற்காக வைத்திருந்ததாகவும், அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டதாகவும் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மலைச்சாமி, தலைமையிலான போலிசார் வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா என்றும், அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர்.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவை வழக்கம்போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை யில் கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த கொள்ளையர்கள் முகமூடி கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் மற்றும் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கோவிலில் ஏற்கனவே 2 தடவை இது போன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பகுதிக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ.8.50 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.
    • பணத்தையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்கள்

    திருச்சி:

    மணப்பாறையில் போட்டோ கடையின் பூட்டை உடைத்து 8.50 லட்சம் மதிப்பிலான கேமரா கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை

    திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 25). இவர் திருச்சி சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன் கூடிய கேமராவுடன் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கண்ணாடி கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ.8.40 லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    போலீசார் விசாரணை

    இதையடுத்து கொள்ளை பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பிரதான சாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்ைக எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை 

    • மதுரை அருகே விவசாயி வீட்டில் 45 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    மதுரை

    மதுரை பெருங்குடி அருகே வலையப்பட்டியை அடுத்துள்ள ஓ.ஆலங்கு ளத்தைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 42). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 45 பவுன் நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பாண்டி கதவு உடை க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பெருங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்க ப்பட்டன. இந்த துணிகர கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×