என் மலர்
நீங்கள் தேடியது "robbery"
- பாளை கக்கன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
நெல்லை:
பாளை கக்கன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.
பூட்டு உடைப்பு
இவர் கடந்த 13-ந் தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினர்.
அப்போது அவரது வீட்டின் பின் பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேச்சிமுத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர்.
- புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40).கடலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில வரி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே அலுவலகத்தில் 30 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நட்பாக பழகி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பெண்ணின் தந்தை குணசேகரன்2 பேரையும் பலமுறை கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று குணசேகரன் மற்றும் 3பேர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். அப்போது குணசேகரனுக்கும், அரவிந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. . இதில் குணசேகரன் மற்றும் 3 பேர் திடீரென்று மாநில வரி அலுவலர் அரவிந்தை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் செயின் மற்றும் அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 ஐபோன் ஆகியவற்றை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அரவிந்த் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் பட்டப்பகலில் வணிகவரித்துறை அலுவலகம் அருகே மாநில வரி அலுவலர் அரவிந்தை தாக்கி நகை மற்றும் ஐபோன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முன்பக்கம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
- மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவஸ்தாசா வடியை சேர்ந்தவர்அசார் முகமது.
இவர் வெளிநா ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நஷியாபேகம் (வயது 28).
சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்கம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
மேலும் வீட்டினுள் இருந்த ஹோம் தியேட்டர், தையல் எந்திரம், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வியாபாரி வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டப்பகலில் துணிகரம்
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் நகர் 5-வது கிராஸ் சேர்ந்தவர் சத்யநாராயணன்(வயது 57). இவர் தனது வீட்டில் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது மனைவி ஆனந்தியை(53) கடையை பார்க்க சொல்லிவிட்டு, காந்தி மார்க்கெட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
அப்போது கடைக்கு வந்த மர்மநபர் , சில பொருட்களை வாங்கி விட்டு தனக்குத் தாகம் எடுப்பதாகவும் தண்ணீர் வேண்டும் என்று ஆனந்திடம் கேட்டுள்ளார். ஆனந்தி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் ஒன்பதாவது கிராசில் இருக்கும் தனது தோழியின் வீட்டிற்கு கடையை பூட்டாமல் சென்று விட்டார்.
அவர் சென்றதை அறிந்த மர்ம நபர் கடையின் வழியாக வீட்டினுள் புகுந்து, பூட்டாமல் இருந்த பீரோவில் இருந்து 2 பவுன் ஆரம் மற்றும் 2 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலி ஆகியவற்றை திருடி சென்று விட்டார். தோழியின் வீட்டிற்கு சென்று திரும்பி ஆனந்தி, வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை சோதித்துப் பார்த்தபோது உள்ளே வைத்திருந்த நகைகள் காணவில்லை. இதுகுறித்து சோமரசம்பட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடி கேமராவை வைத்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தலைமை ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனை எதிரே குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது65), இவர் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சித்ரா. இவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.
கள்ளிக்குடி அருகே உள்ள தென்னமநல்லூரில் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சித்ரா இறந்துவிட்டார். இதனால் ராமநாதன் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்ைத பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருமங்க லத்தில் உள்ள ராமநாதன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய ராமநாதன் நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
- மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அழகு நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது
- 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
திருச்சி
திருச்சி மேலப்புதூர் பகுதியில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தின் மேனேஜராக பழனி நரிகல்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(வயது32) பணியாற்றி வருகிறார். இந்த நிலையத்திற்குள் திடீரென உள்ளே புகுந்த 5 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
மேனேஜர் தர மறுக்கவே அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டிய நிலையில் அவரிடம் இருந்த 5 ஆயிரம் பணம், நிலையத்தில் இருந்த 8 செல்போன்களை எடுத்துக் கொண்ட மர்ம நபர்கள், அதன் பின்னர் அங்கு பணியாற்றும் ரம்யா என்பவர் அணிந்திருந்த 2 கிராம் தோடு, ரெண்டரை பவுன் தாலிச் செயின் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து செல்வகுமார் பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். பாலக்கரை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து ஆள் இருக்கும்பொழுதே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடையில் பணம் கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம், மளிகை பொருட்கள் கொள்ளை–யடிக்கப்பட்டிருந்தது.
புகார்
இது குறித்து சரவணன் எலச்சிபாளையம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- கோவில் பூட்டை உடைத்து மாரியம்மன் கழுத்தில் நகைகள்-உண்டியல் கொள்ளையடித்துள்ளனர்.
- நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிகரம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் இந்திரா நகரில் பிரசித்தி பெற்ற பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈச்சம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பலர் குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா (வயது 43) என்பவர் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியில் கோவிலில் மின் விளக்கை எரிய விட்டு விட்டு பின்னர் கோவிலை பூட்டிவிட்டு இளையராஜா வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலையில் 5.30 மணி அளவில் அந்த வழியாக கோவிந்தராஜ் (46) சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இதுபற்றி அவர் தர்மகர்த்தா இளையராஜாவுக்கு தகவல் தெரிவித்தார்.
தர்மகர்த்தா இளையராஜா வந்து பார்த்தபோது கோவிலின் கிரில் கேட்ைட மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்ததை அறிந்தார். மேலும் மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமி சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தாலி, பொட்டு, செயின் உள்ளிட்ட 2 பவுன் நகைகள் மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து இளையராஜா பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துள்ளார்.
- மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து சென்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தொண்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 55). இவர் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து கொண்டு அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிக்கு சென்றார். அவர் வங்கிக்குள் சென்ற பிறகு அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து செல்கிறார்.
இளவரசன் அருகில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளின் வீட்டிற்கு சென்று பெட்டி யை திறந்து பார்த்தார். ஆனால் அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து இளவரசன் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், எஸ்ஐ கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். பின்னர் இளையராஜாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மோட்டார் சை்ககிள் பெட்டியின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்ச்சியில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து வேப்பூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.
- கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகுகிறது.
- கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
- கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு தாம்பரம் அருகே சேலையூர்- வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் என்கிற பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நேற்று நள்ளிரவில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் இருந்து லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து கைவரிசையில் ஈடுபட்டனர்.
இதில், கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளன. லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் சோதனை செய்தனர்.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கொள்ளையன் அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.