search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து அவரது கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது.
    • இது மாதிரி குற்றம் சாட்டுவதை விட்டு அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்.

    மும்பை:

    ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று அளித்த பேட்டியில், 'ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து கொஞ்சம் அதிகமாக விமர்சிக்கிறார்கள். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு. தனிநபரால் அணியை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நன்றாக ஆடவில்லை என்பது உண்மை தான். நீங்கள் அணியின் செயல்பாடு குறித்து பேசிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட வேண்டும்.

    ஆனால் ரோகித் சர்மாவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது நேர்மையற்றது. உண்மையில் அவர் ஒரு அற்புதமான கேப்டன். அவருடன் நான் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவரை நெருக்கமாக கவனித்து இருக்கிறேன். அவரது தலைமைத்துவத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓய்வறையில் மட்டுமல்ல, இந்திய வீரர்களின் ஓய்வறையிலும் நிறைய மதிப்பு, மரியாதை உண்டு.

    சமீபத்திய சில ஆட்டங்களின் முடிவை வைத்து அவரது கேப்டன்ஷிப்பை மதிப்பிடுவது நியாயமற்றது. இது மாதிரி குற்றம் சாட்டுவதை விட்டு அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம்.

    அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பக்கபலமாக இருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது போன்ற ஆதரவு தான் அவர் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க உதவிகரமாக இருக்கும்' என்றார்.

    • ரோகித் சர்மாவிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன்
    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும்...

    விராட் கோலிக்கு பிறகு 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெற்றுக் கொடுத்த அவரால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் சாதிக்க இயலவில்லை.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை. அரைஇறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இதேபோல் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் தோல்வியை தழுவியது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. 2 டெஸ்ட் கொண்ட தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து முன்னாள் கேப்டனும் டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கோப்பையை 5 முறை கைப்பற்றிய ரோகித் சர்மா. இந்திய அணியில் தனது பெயரை நிலை நிறுத்தவில்லை. அவரிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன். இந்தியாவில் விளையாடுவதும், வெளிநாட்டில் ஆடுவதும் மாறுபட்டதாகும்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீரர்கள் தேர்வு, அணியை நடத்திய விதமும் ஏமாற்றத்தை கொடுத்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    • ஹர்திக் பாண்ட்யா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார்.

    இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை ரோகித் சர்மா வழிநடத்துவார். டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார்.

    டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும், வேறொருவர் தற்காலிகமாக பொறுப்பேற்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோகித் சர்மா இந்த சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். மேலும் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயத்தில் இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. எனவே, புஜாரா தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள உள்ளார்.

    புஜாரா இருந்தபோதிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு சர்பராஸ் கான் போன்ற ஒருவரை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இடம் இருக்காது. ஹர்திக் பாண்டியா ஒரு புதிய தோற்றம் கொண்ட டி20 அணிக்கு தலைமை தாங்குவார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இதில் இடம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

    • அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு பிடிக்கும்.
    • அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

    அண்மையில் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

    இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து பலரும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சரியில்லை என கருத்துக்களை பதிவு செய்தனர்.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் எனக்கு பிடிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது என்பதாலயே ரோகித் சர்மா இந்திய அணியை தலைமை தாங்க சரியான ஆள் இல்லை என கூற முடியாது.

    ரோகித் சர்மா ஒரு நல்ல கேப்டன். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு பிடிக்கும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
    • முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதனால் இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி தொடங்க உள்ளது. இதற்காக வரும் ஜூலை 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

    இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஜூலை 27, 29, ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் (டெஸ்ட் தொடர் அல்லது வெள்ளைப்பந்து தொடர்) இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் அவர் ஓய்வு எடுக்க அறிவுத்தப்படலாம் எனவும் தகவல்கல் வெளியாகி உள்ளன.

    • உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் எனவும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று நிறைய வதந்திகள் பரவின.

    இருப்பினும், கேப்டன் பதவியில் இருந்து விலகுவது அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த விடுமுறையை ரோகித் சர்மா அவரது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார். கடற்கரையில் அவரது மனைவி ரித்திகா மகள் சமிரா ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    இதில் சுவாரஸ்யமாக நிகழ்வை ரோகித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோயில் பகிர்ந்துள்ளார். அதில் தனது கைப்பேசி கடலில் விழுந்ததாகவும் அதனை ரோகித் கடலில் குதித்து எடுத்துக் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

    • ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
    • கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.

    புதுடெல்லி:

    லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியால் ஐ.சி.சி. போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

    11 பேர் கொண்ட அணியில் அஸ்வினை சேர்க்காதது மற்றும் இந்திய வீரர்கள் செயல்பாடு போன்றவற்றால் அவரும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து கேப்டன் பதவியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

    இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது. ஐ.சி.சி.யின் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டில் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயதாகிவிடும். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருட சுழற்சி முழுவதிலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் நீடிப்பாரா? என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது.

    வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங் நிலையை தேர்வுக் குழு பார்க்கும் என்று நம்புகிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும். அதன் பிறகு டிசம்பர் இறுதி வரை டெஸ்ட் இல்லை. எனவே தேர்வுக்குழுவினர் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் உள்ளது.

    இவ்வாறு அந்த நிர்வாகி கூறியுள்ளார்.

    ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.

    36 வயதாகும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூா் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. கேப்டன் பதவியில் 7 டெஸ்டில் 390 ரன்கள் எடுத்துள்ளார்.

    சராசரி 35.45 ஆகும். கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.

    • டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை.
    • விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

    மும்பை:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 68 போட்டியில் தலைமையேற்று 40 வெற்றி, 11 டிராவுடன் 4-வது சிறந்த கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் திடீரென கேப்டன்சியை விலகியது ஏன் என்றும், பிசிசிஐ தலைவர் கங்குலி உடனான மோதலால் மட்டுமே விராட் கோலி பதவி விலகினார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும். அதேபோல் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.

    அந்த நேரத்தில் இந்திய அணிக்கு உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு இருந்தது. அதனால் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
    • அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் வரவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் வித்தியாசமாக விளையாட முயற்சி செய்வோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அக்டோபரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை தொடரில் முற்றிலும் மாறுபட்ட மனநிலையுடனும் அணுகுமுறையுடன் களமிறங்குவோம். நாங்கள் வித்தியாசமான முறையில் விளையாட முயற்சி செய்வோம். வீரர்கள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்துடன் விளையாட வேண்டாம். வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என முயற்சிப்போம்.

    இந்த போட்டி முக்கியம். இந்த தொடர் முக்கியம் என நினைத்து விளையாடுகிறோம். ஆனால் எதுவும் சரியாக நடக்கவில்லை.

    எனவே இந்த உலக கோப்பை தொடரில் நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுடுவோம். எங்களின் முழு கவனமும் வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிப்பதில் இருக்கும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று ரோகித் தெரிவித்து இருந்தார்.
    • ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தொடர் என்று வரும்போது அதில் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாம்பியன்ஷிப் என்றால் அதில் ஒரே ஒரு இறுதி ஆட்டம் இருந்தால் தான் சரியாக இருக்கும்.

    ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது. இந்த ஒரு வெற்றிக்காக பல்வேறு நாடுகளில் சென்று டெஸ்ட் ஆட்டங்களில் வெல்ல வேண்டியிருந்தது. சில ஆட்டங்களில் தோற்று இருந்தாலும் அதில் இருந்து மீண்டும் வந்து இருக்கிறோம்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.

    • டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து நன்றாக விளையாடியது எங்களை காக்க வைத்தது.
    • ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மைதான சூழ்நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது எங்கள் சிறப்பான தொடக்கம் என நான் நினைத்தேன்.

    முதல் அமர்வில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். டிராவிஸ் ஹெட் வந்து ஸ்டீவன் ஸ்மித்துடன் நன்றாக விளையாடினார். அதுதான் எங்களைக் கொஞ்சம் காக்க வைத்தது.

    திரும்பி வருவது எப்போதுமே கடினம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் ஒரு நல்ல நிகழ்ச்சியை வெளிப்படுத்தினோம். இறுதிவரை போராடினோம்.

    அந்த நான்கு வருடங்களும் கடுமையாக உழைத்தோம். இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல சாதனை. ஆனால் நாங்களும் ஒரு மைல் முன்னால் செல்ல விரும்புகிறோம்.

    இங்கு வந்து கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் செய்ததை நீங்கள் பெறமுடியாது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை.

    ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு ரன்னுக்கும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆரவாரம் செய்தார்கள் என தெரிவித்தார்.

    • இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

    ×