search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
    • ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    சுழற்பந்துக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நாதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தது.

    முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.

    இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, புஜாரா ஆகியோரும் திணறும் நிலையில், ரோகித் சர்மா ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடி முதல் டெஸ்ட்டில் சதமடித்து 120 ரன்களை குவித்தார்.

    சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்று வளர்ந்துவரும் வீரர்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார்.



    இதுகுறித்து பேசிய முகமது கைஃப்:-

    ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். நிறைய ரன்களை அடித்துவருகிறார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்பதை ஆடியே காட்டுகிறார். லாங் ஆனில் ஃபீல்டரே நின்றாலும் கூட, அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கிறார் ரோகித்.

    லாங் ஆனில் ஃபீல்டர் நின்றாலும் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிக்சர் அடிக்கிறார். வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

    ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.

    என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    • என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார்.
    • வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 - 0 (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி உருவாக்கிய அணியை வைத்து விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தி தான் வெற்றிகரமாக செயல்படுவதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை உறுதியாக நம்புகிறேன். இருப்பினும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருடைய கேப்டன்ஷிப் இடையே குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வித்தியாசமில்லை. ஏனெனில் விராட் கோலி தான் இந்த டெம்ப்ளேட்டை உருவாக்கினார்.

    என்னை கேட்டால் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்தியாவை அபாரமாக வழி நடத்தினார். ரோகித் சர்மா அவருடைய டெம்ப்ளேட்டை மட்டுமே பின்பற்றி வருகிறார். அந்த வகையில் உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா தனது ஸ்டைலில் தனக்காக எந்த ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் உருவாக்கவில்லை. குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி எப்படி பயன்படுத்தினாரோ அதே நிலைமை தான் தற்போதும் நீடிக்கிறது.

    எனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஆனால் அங்கே விராட் கோலி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய இந்த அணியை விராட் கோலி தான் உருவாக்கினார்.

    என்று கவுதம் கம்பீர் கூறினார்.

    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

    இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் குடும்ப பொறுப்புகள் காரணமாக ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • டோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின் அபாரமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 113 ரன்னில் சுருண்டது. இருவரும் இணைந்து (ஜடேஜா 7 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்) 10 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தனர்.

    115 ரன் இலக்கை இந்திய அணி 4 விக்கெட் இழந்து எடுத்தது. இந்தியா 26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 4 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்டில் 4-வது வெற்றியை பெற்றது. அவரது கேப்டன் பொறுப்பில் இந்தியா விளையாடிய முதல் 4 டெஸ்டிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. தோல்வியை தழுவவில்லை.

    இதன் மூலம் அவர் டோனியின் சாதனையை சமன் செய்தார். டோனி தலைமையில் முதல் 4 டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்தது. டோனி, ரோகிசர்மா, பாபர் அசாம் ஆகிய 3 கேப்டன்கள் மட்டுமே முதல் 4 டெஸ்டில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    • ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.
    • இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது.

    நாக்பூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.

    இந்தியா தற்போது 115 புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (111), இங்கிலாந்து (106) உள்ளன.

    இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணியாக மாறியது.

    ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை. இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் போது நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை முறியடித்த முதல் இந்திய கேப்டன் ரோகித் ஆவார்.

    கடந்த மாதம் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. இலங்கையை 3-0 என்ற கணக்கில் கிளீன் ஸ்வீப் செய்த பிறகு இந்த வெற்றி கிடைத்தது.

    முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும் இந்தியா அடுத்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். ரோகித் சர்மா தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தால், தொடரில் மிகப்பெரிய முன்னிலை பெறும்.

    • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் அடித்தார் ரோகித் சர்மா.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 9-வது சதம் ஆகும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட் ,அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் கேப்டனாக விராட் கோலி, டோனியால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக 4 வீரராக ரோகித் உள்ளார்.

    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்

    1. தில்சன் (இலங்கை)

    2. ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா)

    3. பாபர் அசாம் (பாகிஸ்தான்)

    4. ரோகித் சர்மா (இந்தியா)

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.
    • 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடைசியாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்தது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா.

    சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இளம் வீரர்களை உருவாக்கும் வகையில் இவர்களை ஓரம் கட்ட கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி கூட விளையாட வாய்ப்பு இருக்கு ஆனால் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது. 20 ஓவர் போட்டியில் அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும். விராட் கோலி விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு இல்லை. அவர் 36 வயதை தொட்டு விட்டார் என நினைக்கிறேன். மேலும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இளம் அணி உருவாக்கப்படும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும். அந்த அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி கடைசியாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

    அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2024-ம் ஆண்டு அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் அணியை உருவாக்கும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

    இதன் காரணமாகவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு 20 ஓவரில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருக்கிறார். 20 ஓவருக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக உள்ளார்.

    20 ஓவர் போட்டியில் விராட் கோலி 4008 ரன்னும் (114 போட்டி), ரோகித் சர்மா 3853 ரன்னும் (148 ஆட்டம்) எடுத்து சர்வதேச அளவில் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.

    விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நால்வரும் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். பாபர் அசாமும் இந்த லிஸ்ட்டில் உள்ளார். இவர்கள் தவிர ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர் ஆகிய அதிரடி வீரர்களும் தலைசிறந்த வீரர்களே. ஆனால் அந்த டாப் 4-ல் இவர்கள் பெயர் இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதங்கள், டெஸ்ட்டில் 27 சதங்கள் மற்றும் டி20-யில் ஒரு சதம் என மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் 4 சதங்கள் அடித்தால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக உள்ளது.

    இந்திய அணியில் விராட் கோலிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோகித் சர்மா. சொல்லப்போனால் அவரைவிட மாபெரும் இன்னிங்ஸ்களை ஆடி அசத்தியவர் ரோகித். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.

    இருவருமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல. ஆனால் விராட் கோலி தான் தலைசிறந்த வீரர் என்று கொண்டாடப்படும் நிலையில், விராட் கோலியை விட ரோகித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொஹைல் கான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ரோகித் சர்மா அவரை விட சிறந்த பேட்ஸ்மேன். டெக்னிக்கின் அடிப்படையில் கோலியை விட ரோகித்தே சிறந்த வீரர். ரோகித் பந்தை வரவிட்டு தாமதமாக ஆடுவதால் அவருக்கு ஷாட் ஆட கூடுதல் நேரம் கிடைக்கிறது. கடந்த 10-12 ஆண்டுகளாக ரோகித் சர்மா தான் சர்வதேச கிரிக்கெட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு சொஹைல் கான் தெரிவித்துள்ளார்.

    • ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
    • ரோகித்சர்மா ஒருநாள் போட்டியில் தனது 30-வது சதத்தை பதிவு செய்தார்.

    இந்தூர்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    அதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

    இதனையடுத்து சுப்மன் கில்லும் 72 பந்துகளில் சதத்தை சுவைத்தார். தனது 21-வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4-வது சதமாகும். ஒரு நாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 10-வது நிகழ்வாகும்.

    இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதையும், சுப்மன் கில் (3 ஆட்டத்தில் 360 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 101 ரன்கள் எடுத்து தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (46) ஆகியோருக்கு அடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குடன் (30 சதம்) 3-வது இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.

    இவர்களுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (28 சதம்) இருக்கிறார். 

    • துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.
    • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் திக்னர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இந்தூர்:

    இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்த இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

    இஷான் கிஷன் 17 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 54 ரன்கள் விளாசினார். ஷர்துல் தாகூர் 25 ரன்கள், குல்தீப் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது.

    நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, பிளேர் திக்னர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.

    • இந்தியா 3 போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ராய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சால் 34.3 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது.

    பிலிப்ஸ் அதிகபட்சமாக 36 ரன்னும், சாண்ட்னெர் 27 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 18 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ரோகித் சர்மா 50 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 40 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    கடந்த 5 ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். உள்நாட்டில் சாதிக்கும் அளவுக்கு அவர்களின் பந்து வீச்சு திறன் இருக்கிறது.

    நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன். அதிக அளவில் ரன்கள் குவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியம் நான் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்று எனக்கு தெரியும்.

    ஆனால் அதுகுறித்து நான் அதிகமாக கவலைப்படுவதில்லை. நான் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான பேட்டிங் திறனையே வெளிப்படுத்துகிறேன். பெரிய அளவில் ரன்களை விரைவில் குவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்ற ரோகித் சர்மா கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. 

    • ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
    • இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.

    விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்றார் ரோகித் சர்மா. கேப்டனான பிறகு ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறிய அவர் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அடிக்கடி ஓய்வெடுத்ததால் 2022-ம் ஆண்டு வரலாற்றிலேயே 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

    இதனையடுத்து ரோகித் சர்மா, ராகுல் போன்ற வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. மேலும் கடைசி வாய்ப்பாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடும் என்றும் நம்பப்படுகிறது.

    இருப்பினும் ரோகித் சர்மா 35 வயதை கடந்து விட்டதால் 2023 உலகக் கோப்பை வென்றாலும் இல்லையென்றாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அத்தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் இளம் வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் தவறில்லை ஆனால் ஒரு சில தோல்விகளுக்காக அவரை அவசரப்பட்டு கேப்டன் பதவியிலிருந்து நீக்க கூடாது என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    முதலில் கேப்டன் பொறுப்பு வழங்கும் நீங்கள் உலகம் என்ன சொல்லும் என்பதை பார்க்காமல் அணியை பார்த்து அவர் எப்படி சிந்திக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா அங்கே கேப்டனாக இருந்தால் நீங்கள் ஒரு தொடரில் தோற்றால் உங்களை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவோம் என்று யாரும் அவரிடம் சொல்ல கூடாது.

    ஏனெனில் நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் அவரால் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியும். பாண்டியா உட்பட யாராக இருந்தாலும் தவறுகள் செய்வார்கள். ஆனால் அதற்காக அந்த தவறை பார்க்காமல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் எந்தளவுக்கு அணியை எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க வேண்டும். .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×