search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.20 thousand"

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.20 ஆயிரத்து 431-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,118 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய் 16 காசுக்கும், அதிகபட்ச விலையாக 21 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 19 ரூபாய் 89 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,080 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.20 ஆயிரத்து 431-க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
    • விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 55 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 904 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 20 ஆயிரத்து 706 ரூபாய்க்கு விற்பனையானது.

    • மதுரை அருகே விவசாயியை தாக்கி ரூ.20 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வாகைகுளம், கணக்கன் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42), விவசாயி. இந்த நிலையில் பாலமுருகன் இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவரை ஒரு வாகனம் பின் தொடர்ந்து வந்தது. அதில் 3 பேர் இருந்தனர்.

    காண்டை ரைஸ் மில் அருகே பாலமுருகன் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பாலமுருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேரும் இரும்பு கம்பியால் தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாலமுருகனை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிந்துபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயியை தாக்கி பணம் பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×