search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Chennai Green Road"

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத கிராம சபை கூட்டங்களில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது.

    இந்த திட்டத்துக்காக விவசாய நிலங்களில் குறியீடு கல் பதிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நில அளவீடு பணிகளை முடித்துவிட்டனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களும் விவசாய சங்கங்களும் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினை ஏற்படக்கூடிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், கோரிக்கை தொடர்பாக மனுவாக அளித்தால் கலெக்டரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். நீண்ட நேரமாகியும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.நம்மியந்தல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதனை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். 3 மணி நேரம் பொதுமக்கள் அதிகாரிகளை சிறை வைத்திருந்தனர்.

    நரசிங்கநல்லூர், தொரப்பாடி, சி.நம்மியந்தல், ஓரந்தவாடி, அந்தனூர், நயம்பாடி, சிறுகலாம் பாடி, மேல்ராவந்தவாடி உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை மட்டும் அதிகாரிகள் வாங்கி சென்றனர்.

    மேல்வணக்கம்பாடி, பெலாத்தூர், தென்னகரம், தென்பள்ளிப்பட்டு, ராந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர். அதன் நகலையும் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்க்கான நகலை எரித்து போராடிய 63 பேர் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #greenwayroad
    சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர்அலுவலகம் அருகே சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் அரசாணை நகலை எரிக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைதான பெண் ஒருவரை மட்டும் போலீசார் விடுவித்தனர். மற்ற 44 பேரை போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #greenwayroad
    சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் அதிகாரிகள் அளவீடு பணிகளை நடத்தி வருவதால் அசாம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #greenwayroad
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியே இச்சாலை செல்கிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என மொத்தம் 277 கிலோ மீட்டருக்கு புதிய 8 வழி சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக 5 மாவட்டங்களிலும் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. பல வீடுகளும் இடிக்கப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது. தென்னை, மாமரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது.

    சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் மாமரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் அடுத்த ஆண்டு 10 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    8 வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. மரங்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட உள்ளது.

    ஆனாலும் விவசாயிகள் பல இடங்களில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தாலும் பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணி நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 18-ந்தேதி முதல் நேற்று முன்தினம்(23-ந்தேதி) வரை 27 கிலோ மீட்டருக்கு நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர்.

    சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாயில் தொடங்கி நாழிக்கல்பட்டி வரை (27 கி.மீ. தூரம்) இப்பணியை முடித்துள்ளனர். இவ்விடங்களில் நிலம் அளவீடும் செய்யும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் தங்களது நிலம் பறிபோகிறது என கதறி அழுதனர். ஆனாலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு மீறி நில அளவீடு பணி தொடர்ந்து நடந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் நில அளவீடு பணி நடைபெறவில்லை. இன்று மீண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை தொடங்கினார்கள்.

    சேலம் அருகே உள்ள பாரப்பட்டியில் தொடங்கி பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரையிலான 2.86 கிலோ மீட்டர் தூரத்திற்கான நில அளவீடு பணி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

    இந்த பகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜய லட்சுமி பழனிசாமி, அவரது சகோதரியும் ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ.வுமான சாந்தா, முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தற்போது தினகரன் அணி சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எஸ்.கே.செல்வம் ஆகியோரின் நிலங்கள் உள்ளன.

    இவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று நில அளவீடு பணி நடந்து வருகிறது. இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் வருண் வஜ்ரா வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பூலாவரியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்றுடன் சேலம் மாவட்டத்தில் நில அளவீடு பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. அந்த சமயத்தில் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தீக்குளிப்பு, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபடலாம் என தகவல் வெளியானது.

    இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வருபவர்களிடம் தீவிர சோதனைக்குப்பிறகே மனு கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களை அளவிடும்பணி நடந்தது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருளப்பட்டி யில் தொடங்கி கோபிநாதம் பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, சாமியாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், பெரியமஞ்சவாடி ஆகிய பகுதிகளில் இந்த பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.

    விவசாயிகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பதட்டம் ஏற்பட்டது. 100-க் கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று நிலத்தை அளந்தாலும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்த நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை சம்மதிக்க வைத்தனர்.

    நில அளவிடும் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது. இனி அடுத்தக்கட்டமான சர்வே எண்களை வைத்து சரி பார்ப்பார்கள். அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு திட்டப் பணிகள் தொடங்கும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்று நீர்ப்பந்துறை, சட்ட மடுவூர், வணக்கம்பாடி, மண்மலை ஆகிய 4 ஊர்களில் நிலத்தை அளவீடு செய்து கல் நட்டினார்கள்.

    8 வழி சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 123 கி.மீ. தொலைவுக்கு நிலம் எடுக்கிறார்கள். ஆனால் சேலம், தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தது போல திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தும் நிலங்களில் 90 சதவீதம் தரிசு நிலம்தான் என்பதால் விவசாயிகள், அதிக இழப் பீடு தொகையை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பொண்ணாத்தூர் பகுதியில் நிலம் எடுக்கும் போது மட்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள நிலங்கள் நன்கு விளைச்சல் உள்ள விளை நிலங்களாகும்.

    இந்த நிலையில் 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பதை கண்டித்து இன்று திருவண்ணாமலையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.
    சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் குழு அமைத்திட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #ChennaiSalemHighway
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச்சாலை” அமைக்கும் திட்டத்தை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயிகள், பாரம்பரியமாகத் தங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளை நிலங்கள் பறிபோகின்றனவே என்று மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    இந்த திட்டத்தை, “எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன?.

    நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு புறந்தள்ளிவிட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன்?.

    தி.மு.க. சார்பில் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்துங்கள் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த பிறகு, ஆங்காங்கே நீர்த்துப்போன வெற்றுக் கருத்துக்கேட்பு என்ற கண்துடைப்பு நாடகம் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஏனோதானோவென நடத்திவிட்டு, விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றுவதைத் தொடருவது ஏன்?.

    திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்?. அ.தி.மு.க. அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும்.

    சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது, அவர் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் மக்களின் வீரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #ChennaiSalemHighway
    ×