search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Same-sex marriage case"

    • ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
    • இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது என மூன்று நீதிபதிகள் தீர்ப்பு

    ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது 3 நீதிபதிகள் (பெரும்பாலான நீதிபதிகள்) ''ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவ செய்ய வேண்டும்.

    இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. எனவே ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை'' எனத் தீர்ப்பு அளித்தனர்.

    இதனால் இந்தியாவில் ஒரே பாலினத்தினர் திருமணம் செல்லத்தக்கது அல்ல நிலை அப்படியே தொடர்கிறது. இந்த தீர்ப்பை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையும், அதிவேக ஓட்டப் பந்தய வீராங்கனையுமான டூட்டி சந்த், ஒரே பாலின திருமணம் குறித்து கூறியதாவது:-

    ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழ்வதை உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. அரசியல் சட்டம் அதற்காக இல்லை. இதனால் உச்சநீதிமன்றம் அதில் தலையிடவில்லை. எதிர்காலத்தில் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்யும் வகையில், முறையான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசும், பாராளுமன்றமும் உறுதியாக ஆலோசனை செய்யும் என நாங்கள் நம்புகிறோம்.

    இது மனித குலத்தின் பிரச்சினை. வாழ்வில் அனைவருக்கும் சரியான உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்தியாவில் விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக ஏதும் வழங்கப்பட்டதா?. ஒரே பாலின திருமணம் ஒருநாள் நம் நாட்டில் அனுமதிக்கப்படும்'' என்றார்.

    கடந்த ஐந்து வருடங்களாக ஒரே பாலின வாழ்க்கை வாழ்ந்து வரும் டூட்டி சந்த், நானும் எனது பார்ட்னரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம். இணைந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம் என்பது தயக்கமின்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    • ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளது.
    • திருமணம் என்ற பாரம்பரிய அமைப்பை பாதுகாப்பதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், 'ஒரே பாலின திருமணம் மற்றும் அதுதொடர்புடைய விஷயங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். அதன் முடிவில் எங்களின் விரிவான கருத்தை வெளியிடுவோம்.

    அதேநேரம், குடிமக்களின் சுதந்திரம், விருப்பங்கள், உரிமைகளுக்கு ஆதரவாக எப்போது காங்கிரஸ் நிற்கும்.

    அனைவரையும் உள்ளடக்கும் கட்சியாக, சட்டரீதியாக, சமூகரீதியாக, அரசியல்ரீதியாக பாகுபாடற்ற நடைமுறையில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

    ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளது.

    அதன் அகில பாரதிய பிரசார பிரமுகரான சுனில் அம்பேத்கர் வெளியிட்ட 'எக்ஸ்' பதிவில், 'ஒரே பாலின திருமணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. இதுகுறித்த அனைத்து விஷயங்களையும் நமது ஜனநாயக பாராளுமன்ற அமைப்பு தீவிரமாக விவாதிக்கலாம், அதன் முடிவில் சரியான முடிவுகளை எடுக்கலாம்' என்று கூறியுள்ளார்.

    ஒரே பாலின திருமணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஜமாத் உலமா இ ஹிந்த் (மவுலானா மக்மூத் மதானி பிரிவு) ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரே பாலின திருமணம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. பல்வேறு சமூக, அரசு மற்றும் மத அமைப்புகளின் வாதங்களை கவனமாக ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்துள்ளது.

    திருமணம் என்ற பாரம்பரிய அமைப்பை பாதுகாப்பதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

    • ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
    • 200 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இப்போது ஏற்கக் கூடியதாக மாறி இருக்கிறது.

    புதுடெல்லி:

    ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இயற்கைக்கு மாறாக திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களுக்கான உரிமைகள் தொடர்பாகவும் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தை இந்தியாவில் வெறுப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆனாலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் உறவுகள் தவறு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த நிலையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க கோரி நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டே இனி விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்குகள் கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

    அப்போது ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன" என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்குகள் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஏப்ரல் 18-ந்தேதி முதல் 10 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (17-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹூமா கோக்லி, நரசிம்மா ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள். இதில் 3 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினார்கள்.

    "ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. எனவே ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை" என்று 3 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

    மற்ற 2 நீதிபதிகளும் வேறு விதமான தீர்ப்பை வழங்கினார்கள். இதையடுத்து 3:2 என்ற விகிதத்தில் சட்ட அங்கீகாரம் இல்லை என்பது இறுதி தீர்ப்பாக வெளியானது. ஒவ்வொரு நீதிபதியும் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

    தலைமை நீதிபதி சந்திர சூட் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

    நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் ஷரத்துக்களை கையாள முடியும். 200 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இப்போது ஏற்கக் கூடியதாக மாறி இருக்கிறது.

    சதி, குழந்தை திருமணங்கள் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள். இன்று மறுக்கப்படுகின்றன. ஒரே பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது.

    ஒரே பாலின விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது.

    திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க பாராளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.

    சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால் நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்.

    வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பது போன்றது. அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது.

    ஒரே பாலின ஜோடிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை. குழந்தை தத்தெடுப்பு ஒழுங்கு முறை தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையில் ஒரே பாலினத்தவரை தவிர்த்தது அரசியலமைப்புக்கு எதிரானது.

    ஒரே பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒரே பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் பாகுபாடு காட்டக் கூடாது. ஒரே பாலின நபர்களை, பிறந்த குடும்பத்துக்கு திரும்புமாறு போலீசார் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரே பாலின ஜோடிகள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.

    திருமணம் செய்யாத ஜோடிகள், ஒரே பாலின ஜோடிகள் குழந்தையை தத்தெடுக்க முடியும்.

    ஒரே பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அளித்த தீர்ப்பில், "வழக்கமான திருமண முறை, ஒரே பாலின திருமண முறையை நாணயத்தின் இரு பக்கங்களாக பார்க்க வேண்டும். ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பது என்பது ஒரு முன்னோக்கிய நகர்வாகும்" என்றார்.

    தொடர்ந்து ஒவ்வொரு நீதிபதிகளும் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள்.

    • தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.
    • இந்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    புதுடெல்லி:

    தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

    இதன்பின் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது. எனவே இந்த வழக்கிற்கான விசாரணை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பிற்கு எதிரானது என்று தொடர்ந்து கூறி வருகின்றது. மேலும், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டும் நடைபெறுவது என்று வாதிட்டது.

    தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சய் கிஷன், ரவீந்திர பட் , ஹமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

    இந்நிலையில், தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த விவகாரத்தில் பார்லிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியது.

    இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

    இந்த வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் வந்துள்ளன.

    திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க பாராளுமன்றத்தையோ, சட்டசபையையோ கட்டாயப்படுத்த முடியாது.

    நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், சட்டத்தின் ஷரத்துகளை கையாள முடியும்.

    சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

    தன்பாலின திருமணம் என்பது வசதி படைத்தவர்கள் இடையே மட்டும் காணப்படுவது அல்ல.

    சிறப்பு திருமணச் சட்டத்தை ரத்து செய்தால் நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்.

    தன்பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை.

    தன்பாலின திருமணங்களுக்கு சட்ட உரிமையை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழங்க முடியாது என தெரிவித்தார்.

    ×