என் மலர்
நீங்கள் தேடியது "Sandalwood"
- ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.
- இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 849-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா மே 21-ந்தேதி மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது.
இந்த விழாவில் தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அனைத்து சமுதாய மக்களுக்கும் நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.
தொடரந்து கடலோர பகுதிகளில் வாழும் 9 கிராம மக்களுக்கு தேர்ச்சி வழங்கினர். மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக கடலாடி வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தக்பீர் முழக்கத்துடன் தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பி னர்கள், தர்கா ஹக்தார்கள் கொடி இறக்கினர். இறக்கப் பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப் பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் (நெய்சோறு) பெற்று சென்றனர்.
கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ராமநாதபுரம் எஸ்.பி. தங்கவேலு உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், துணை தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்யது இப்ராகிம், சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை, ஹாஜி செய்யது ஹூசைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹசன், முர்சல் இப்ராஹிம் ஆலீம், அமீர் ஹம்சா, சுல்தான் செய்யது இப்ராஹிம், அப்துல்கனி, கலீல் ரஹ்மான், செய்யது இப்ராகிம், அமின், சித்திக் லெவ்வை, அப்துல் ரஹிம் அம்ஜத் ஹுஸைன், லெவ்வைக்கனி, செய்யது அபுதாஹிர் ஆலிம், செய்யது இஸ்காக் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்தனர்.
- இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
- ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.
மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-
நல்லெண்ணை:-
இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.
மஞ்சள் தூள்:-
மங்களகரமான வாழ்க்கை தருகிறது.
அரிசி மாவு:-
நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.
பஞ்சாமிர்தம்:-
இது உடல் நலம் தருகிறது.
தயிர்:-
மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.
பழ வகைகள்
முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.
இளநீர்:-
மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
விபூதியும் சந்தனமும்:-
மக்களுக்கு அருள் தருகிறது.
கலசாபிஷேகம்:-
அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.
மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
திருவிழாக்கள்
மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.
ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.
தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
- கோவிலில் உள்ள அனைத்து சன்னதியிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அக்னிஸ்வர சுவாமி கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அக்னிஸ்வரசாமி, சவுந்தரநாயகி அம்பாள், விநாயகர் முருகன் மற்றும் துர்க்கை அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதியிலும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேப்போல் திருக்காட்டு ப்பள்ளி தண்டாயு தபாணி சுவாமி கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், ஒன்பத்து வேலி வன்மீகராதர் சாமி கோயிலில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வடக்கு பூதலூர் நாச்சியார் அம்மன் கோவிலில் நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- மாரியம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
- அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை சேந்தங்குடியில் படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக் கடை ஞாயிற்று கிழமையை முன்னிட்டு பால் குடம் விழா நடைபெற்றது. கருவரையில் உள்ள மாரி யம்மன் திருவுருவத்துக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் அம்பாள் விதி உலாவும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்துக் கொன்டு அம்மன் சன்னதிக்கு வந்து தங்களது நேர்த்ததிக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார அர்ச்சனை செய்து தீபாரத னையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.மாலை சந்தன காப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தார்கள். விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தொழிலதிபர்ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஆன்மீகத் தொண்டர் எஸ். குருமூர்த்தி, சாமி, செல்வம், ரவி உட்பட பலர் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்து சந்தன கட்டை கடத்தப்படுவதாக ஏற்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனவர்கள் சக்திவேல், ஷஷாங் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
12 கிலோ சந்தன கட்டை
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ஏற்காடு பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி கையில் பையுடன் ஒருவர் நின்றிருந்தார். அவரது பையை சோதனை செய்ததில் அதில் சுமார் 12 கிலோ எடையுள்ள சந்தனகட்டை சிராய்ப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை ஏற்காடு வனச்சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது அவர் ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (59) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை விசாரித்ததில் ஏற்காடு குண்டூர் பகுதியை சேர்ந்த வெள்ளையன் (42), மாரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி சிராய்புகளாய் தயார் செய்து கொடுத்ததாக தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் வெள்ளையன், வெங்கடேசன் ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இதில் கடந்த 16-ந் தேதி வெள்ளையனை வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வெங்கடேசனுடன் சேர்ந்து சந்தனமரங்களை வெட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரங்கராஜ், வெள்ளையன் ஆகியோருக்கு சந்தன மரம் வெட்டி கடத்தியதற்காக மாவட்ட வன அலுவலர் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மேலும் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை வாழவந்தி பிரிவு வனவர் சஞ்சய் தலைமையிலான குழுவினர் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரும் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில் வெங்கடேசன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டிற்கு சென்று ஒரு சந்தன மரத்தை 15 துண்டுகளாக வெட்டி சுமார் 7 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளாக்கி அதை ரங்கராஜூக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேசனுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்தார். இதுகுறித்து வனச்சரகர் முருகன் கூறுகையில் வனகுற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தர்கா சந்தனக்கூடு விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
- சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி- சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டது.தர்ஹா வின் நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி மலர்களால் அலங்கரிக் கப்பட்ட சந்தன குடத்தை, அலங்கார மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூட்டில் வைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந் தாட்டம் சுற்றி கொண்டே சென்றனர். இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வ லம் அதிகாலை தர்ஹாவை வந்தடைந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
- கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது.
- பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளில் இருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.
கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.
- சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
- சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.
சரும வறட்சி அனைத்து வயதினரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். வறட்சியை தவிர்த்து சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் அழகு குறிப்புகள் பற்றி பார்ப்போம்...

மஞ்சள் சாமந்திப்பூ:
சாமந்திப்பூவில் இயற்கையான பிளேவனாய்டுகள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எண்ணெய்கள் உள்ளன. சாமந்திப்பூவின் இதழ்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல அரைத்துக்கொள்ளவும். அதை சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

சீமை சாமந்திப்பூ:
சீமை சாமந்திப்பூ இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பல்வேறு சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கின்றன. சீமை சாமந்திப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். சீமை சாமந்திப்பூ உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.

பப்பாளி:
பப்பாளியில் வைட்டமின் 'ஏ' சத்து அதிக அளவில் உள்ளது. இது சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை ஸ்கிரப்பராக சருமத்துக்கு பயன்படுத்தலாம். பப்பாளிப் பழத்தை கூழாக அரைத்து சருமத்தில் பூசி வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

கற்றாழை:
சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும். இதில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சரும வறட்சியைத் தடுத்து இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும். தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசிக்கொள்வது சருமப் பொலிவை மேம்படுத்தும்.

வாழைப்பழம் மற்றும் தேன்:
வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து பசை போல கலந்து சருமத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணில் கழுவவும். இந்த சிகிச்சை முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

பார்லி:
பார்லி மாவுடன் மஞ்சள்தூள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து சருமத்தில் பூசவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சியை நீக்கி சருமத்தை பொலிவோடும், மென்மையாகவும் மாற்றும்.

சந்தனம்:
சந்தனம் இயற்கையாகவே எண்ணெய்ப்பசை கொண்டது. இதை ரோஜா பன்னீருடன் சேர்த்து பசை போல தயாரித்து சருமத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கும். சருமம் பளபளப்பாகும்.

மூலிகைத் தேநீர்:
சீரகம், தனியா விதைகள் மற்றும் சோம்பு இவை மூன்றையும் சமஅளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஆறவைத்து அந்த தண்ணீரை சருமத்தில் பூசவும். இது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
- உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும்.
- இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது.
நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருக்கின்றன. பொதுவாக சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் என்பது இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அணிவது அல்லது பூசுவது ஆகியவற்றின் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதை ஆன்றோர்கள் அறிந்துள்ளார்கள்.

சந்தனம்:-
பொதுவாக, சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் `ஹிப்போகேம்பஸ்' என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்பவும் உதவுகிறது.
நெற்றியில் உள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டு, சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக உள்ளது. அந்த இடத்தை மெதுவாக தொட்டு சந்தனம் பூசும்போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும்.
தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக இருப்பதால் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
சந்தனம் இடுவதன் மூலம் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதால், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.
குங்குமம்:-
பெண்களால் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் பெரும்பாலும் அணியப்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அணிவது வழக்கம். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதியாக செயல்படு வது நெற்றிக்கண். அதாவது, புருவ மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளையும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்க முடியும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகளும் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
பெண்களின் முன் வகிடு பகுதி, மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டின் குங்குமம் இடுவதன் மூலம் மங்கலம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்கள் சொல்கின்றனர்.
- சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
- சந்தனக்கூடு நிறைவடைந்த பிறகு தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனமிட்ட கொடிமர திருவிழா நடந்தது. இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
மேளதாளம் முழங்க அய்யூர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அலங்காநல்லூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ஜமாத் தலைவர் அப்பாஸ், செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொருளாளர் கமர்தீன், துணைத் தலைவர் முகமது சலீம், துணைச் செயலாளர் அபுதாஹீர் அசன், ஊராட்சி மன்ற தலைவர் அபுதாஹிர், ஊர் நாட்டாமை கதிரேசன் மற்றும் ஊர் பெரியவர்கள், கிராம மக்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். சந்தனக்கூடு நிறைவடைந்த பிறகு தர்காவுக்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.
- சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் குண்டூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (35), வீரையன்(எ) காளிமுத்து, ஆனந்தகுமார் (42), சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்சித் (21) ஆகிய 4 பேரும் 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வீரையன்(எ) காளிமுத்து, சஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து சந்தன மரத்தையும் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
- ஆடி மாதம் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், சந்தனம், திருநீறு உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவாடி பூரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு சாத்தப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.