என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "save plum and pear farming"
- கொடைக்கானலில் பெரும்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
- விளைச்சல் குறைந்து வருவதால் இதனை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளின் அதிக இடங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். பெரு–ம்பாலான தோட்டங்களில் அதிகப்படியான ஊடுபயிராக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளைவிக்கப்படும் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளம்ஸ் பழங்களை கொடைக்கானல் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்பி வாங்கி செல்வதுண்டு. இதேபோல மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்கள் ஜாம் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளைச்சல் கைகொடுத்தபோதும் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காத நிலைேய உள்ளது.
கடந்த சில வருடங்களாக பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விளைச்சல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இந்த வகையான பழங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பி வாங்கி உண்ணும் பழங்களாக இவை இருந்து வருகிறது. எனவே பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் பழங்களின் விளைச்சலை மீட்டெடுக்க தோட்டக்க–லைத்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கிடைக்கும் பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் பழங்கள் அதிக உற்பத்தி செய்யும் இடமாக கொடைக்கானல் உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் விளைச்சல் குறைந்து வருவதால் இதனை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.