search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SB Office"

    • வேலை வாங்கி தருவதாக மோசடி
    • வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. கோடீஸ்வரன் ஆகியோர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக் கொள்ள முயன்றார்.

    அருகில் இருந்த போலீசார் இளம் பெண்ணிடம் இருந்த பிளேடை பறித்தனர். பின்னர் இளம் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பேரணாம்பட்டு சேர்ந்த ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகன் உள்ளார்.

    திருமணம் நடந்த 3 ஆண்டுகளில் கணவர் என்னை விட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    2-வது மனைவியின் வீட்டார் எனது மகனை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக இளம் பெண் தெரிவித்தார்.

    பேரணாம்பட்டை சேர்ந்த 2 இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளம் பெண் ஏன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாய். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவரது தோழியை மாடியில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க 2 இளம் பெண்களின் வீட்டாரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 24). மாற்றுத்தி றனாளி. பி எஸ் சி பி எட் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

    இவர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு பத்தாம் மாதம் மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக செய்தித்தாளில் விளம்பரம் வந்தது. விளம்பரத்தை கண்ட மகாலட்சுமி வேலைக்காக விண்ணப்பித்தேன்.

    இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.25 லட்சம் வாங்கினார். மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி மையத்தில் கேட்டபோது அந்த வேலை வேறு ஒருவருக்கு வழங்கி விட்டதாக தெரிவித்தனர்.

    வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றவர் வேலையை வாங்கி தரவில்லை பணத்தையும் திரும்ப தரவில்லை.

    தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் எனவே பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-

    தினம்தோறும் வரும் புகார்கள் குறித்து அன்றே விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. இதனால் தற்போது குறைவு தீர்வு கூட்டத்தில் 25 முதல் 30 மனுக்கள் மட்டுமே வருகின்றன.

    அடிதடி சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் தாத்தா புகார்
    • போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் இன்று நடந்தது.

    குடியாத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.

    அதில் என்னுடைய மனைவி அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறார் இதனை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

    எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல் தொரப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணி கொடுத்த மனுவில் எனது மகன் வழி பேத்திக்கு 26 வயது ஆகிறது.

    அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டை சேர்ந்த ரவி என்பவர் கொடுத்த மனுவில் தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் மரங்களை வெட்டி போட்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். உடனடியாக போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தில் தன்னை ஏமாற்றி கற்பழித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நர்சு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை தடுத்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காதலன் கற்பழித்து ஏமாற்றியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    அந்த பெண் தக்கலை குமாரகோவில் அருகே உள்ள பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 21 வயது ஆகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார். இவருடன் அருமநல்லூர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நர்சாக பணியாற்றினார். அவரை பார்க்க அவரது சகோதரர் வினித் (24) அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார்.

    அப்போது பிரம்மபுரத்தைச் சேர்ந்த நர்சுக்கும், வினித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினித், நர்சை காதலிப்பதாக கூறினார். அதை நம்பி நர்சு, அவருடன் செல்போனில் பேசி மகிழ்ந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினித், காதலியான நர்சை அங்கு வரவழைத்தார். நர்சை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வினித் அவரை கற்பழித்தார். இதேபோல பலமுறை வினித், நர்சை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தார்.

    சமீபகாலமாக வினித், நர்சை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் நர்சை திருமணம் செய்து கொள்ளவும் அவர் மறுத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த நர்சு, போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரை போலீசார் ஏற்காததால் மனம் உடைந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து நர்சின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் விசாரணை நடத்தி நர்சை ஏமாற்றி கற்பழித்த வினித் மீது வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 417, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் வினித்தை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ×