என் மலர்
நீங்கள் தேடியது "scheme"
- பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.396-ல், ரூ10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக ரூ.10லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகளில் உள்நோயாளி செலவு களுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரையும், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவா தம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், விபத்தினால் மருத்துவமனையில் அனும திக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கும், விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரையும், விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5,000 வரையும் காப்பீடு வழங்கப்படுகிறது.
பொது மக்கள் அனை வரும் பரமத்தி வேலூர், பொத்தனூர், பரமத்தி, ஜேடர்பாளையம், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த குழு விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதாம கிஷ்சான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பு முகாம் நடந்தது.
- இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவல கத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்பிச்சிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பிரதாம கிஷ்சான் திட்டத்தில் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைப்பது மற்றும் இ.கே.ஒய்.சி ஆதார் எண்ணுடன் இணைக்க குப்பிச்சி பாளையம் அஞ்சல் அலுவல கத்தில் நாளை முகாம் நடைபெற உள்ளது. பிரதாம கிஷ்சான் திட்டத்தில் இணைக்காத விவசாயி
கள் இவ்வா ய்ப்பை பய ன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்து ள்ளார்.
- விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
- அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்த பயிற்சி வேளாண்மை-உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் குப்பிரிக்காபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து வட்டார வேளாண்மை மானிய திட்டங்கள், உழவன் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்வது, பயிர் சாகுபடி தொடர்பான தொழில்நுட்ப தகவல்கள் குறித்து விளக்கினார்.
வேளாண்மை அலுவலர் அன்புசெல்வி சொட்டுநீர் பாசன திட்டங்களின் பயன்கள் மற்றும் மானிய விபரங்கள் குறித்து எடுத்துக்கூறினார். சொட்டுநீர் உழவியல் நிபுணர் கிருஷ்ணா வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்தும், அதன் தேவையையும், அதற்கான அரசின் மானிய உதவிகள், மரக்கன்றுகளை பராமரிப்பது, மர வளர்ப்புக்கு உதவிடும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பயிற்சியில் உழவன் செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்து பயன்ப டுத்தாத விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திர சேகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கோகுல் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.
- இன மொழி உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
- அமைச்சராக இருந்து மக்களுக்கான திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில்,
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவைப் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவத் தலைமையாக தன் வாழ்நாள் முழுவதும் கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர், இன உணர்வும், மொழி உணர்வும், பண்பாட்டுப் பெருமையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அவருடைய எழுத்தாற்றலில் விளைந்த படைப்புகள் அனைத்துமே திராவிட இயக்கத்தின் கருவூலங்கள் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.
சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர்.
பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப கழகத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கொள்கை வகுப்பு போல உரைகளை வழங்கி, இனஉணர்வையும் மொழி உணர்வையும் விதைத்து வளர்த்தவர்.
தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு 'பெரியப்பா' எனும் கொள்கை உறவாக இருந்து, அவர்தம் பொதுவாழ்வுப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லாசிரியராக வழிகாட்டி, நல்ல மதிப்பெண் அளித்துப் பாராட்டியவர் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார்.
கூட்டத்தில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. தலைமை கழக பேச்சாளர் அரங்கநாதன் மாவட்ட அவைத் தலைவர் நசீர் முகம்மது மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வம் கணேசன் சுதாகர் கோ.க அண்ணாதுரை கூகுர் அம்பிகாபதி உதயச்சந்திரன் தாமரைச்செல்வன் நாசர் தியாக சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தஞ்சாவூர்:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை ப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தஞ்சை ரெயிலடியில் இருந்து புதுஆற்றுப்பாலம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இதற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, சத்யசீலன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
- பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் நடந்த ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண வரவேற்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசும்போது, மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.
ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரை காமராஜ் திறந்து வைத்துள்ளார்.
காவிரி டெல்டா விவசாயி களின் கோரிக்கைகள் அனைத்தையும் தான் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
இது போல் அவர் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.
காமராஜ் மீது எடப்பாடி பழனிச்சாமி அன்பும் பாசமும் அதிகம் கொண்டவர் என்றார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு.
வேதாரண்யம்:
வேதாரண்யத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. விடம் நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தலிங்கம், புயல் குமார், திருமாவளவன், ரவி, திருமுருகன், ராமமூர்த்தி, செந்தில் நாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்தியஅரசு அறிவிக்கும் அகவி லைப்படிக்கு இணையான தொகையை மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொ ண்ட ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்து பேச வைக்கப்படும் என்றார்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணிகள் சீரமைத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் உபகரணங்கள் வழங்கி வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து பயன்பெறும் திட்டம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் ஒரு பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பொழுது மழைக்காலங்களில் பெறக்கூடிய தண்ணீர் சேமிப்பதன் மூலம் வறட்சி காலங்களில் விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி பண்ணை குட்டைகள் அமைப்பது விவசாயி களுக்கு இணை தொழிலாக மீன் வளர்க்க, கறவை மாடுகளுக்கு தீவனப்புல் வளர்க்க பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், பாசிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் உம்மூர் சலீமா நூர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.
- இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் மானி யத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந் துரை செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனை வோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.
வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத் தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 18 முதல் 55 வயது குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மை யாக கொண்டு செயல் படுத்தக்கூடிய தொழிழ்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக் லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்பு லன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கு வோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
சுயமுத லீட்டில் தொழில் தொடங்கி னாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். மேலும், கடலூர் மாவட் டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரில் வந்து அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங் களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்திடவும், பயிர் சாகுபடி முறையில் அதிக பட்ச உற்பத்திக்கான நுட்பங் களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டர், நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடைய வராக இருக்க வேண்டும்.
மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் கால் நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக் கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்ற வற்றை திட்ட வழிகாட்டு தலின்படி அமைக்க வேண் டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பிதல் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பினனேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்
சிறுகுறு சான்று வைத்துள்ள ஆதிதிராவிட மற்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியம் எக்டருக்கு ரூ.12 ஆயிரத்து டன் சேர்த்து மொத்தம் எக்டருக்கு ரூ.42 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது.
- சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக்கான பூர்வாங்க நடவ டிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம்:
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக் கான பூர்வாங்க நடவ டிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதியில் 188 ரேசன் கடைகளும், கிராம ஊராட்சிகளில் 1,093 ரேசன் கடைகளும், பேரூராட்சிகளில் 126 ரேசன் கடைகளும் மற்றும் நகராட்சிகளில் 134 ரேசன் கடைகளும் என மொத்தம் 1,541 ரேசன் கடைகள் உள்ளன.
500 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு ஒரு பதிவு மையம், 600 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 2 பதிவு மையம், 1000 முதல் 1500 ரேசன் கார்டு உள்ள கடைகளில் 3 பதிவு மையம், 1500-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 4 பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை, 3-வது கட்ட முகாம் ஆகஸ்டு 17-ந்தேதி தொடங்கும். ரேசன் கார்டு தாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பப்பதிவு அரசின் சார்பில் மேற்ெகாள்ளப்படு வதால் கட்டணம் ஏதும் கிடை யாது. இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்.
நாளொன்றுக்கு 30 முதல் 50 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. வருவாய்த்துறை, கூட்டு றவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
- இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் , கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் , உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடன் மானிய வழங்கும் திட்டம் , அனைத்து வகை திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் , கைப்பேசிஎண், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் இணைய சேவையில் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.