என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shooting"

    • கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ் தான் எல்லையில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தளபதி அப்துல் ஜபா ஷா கொல்லப்பட்டார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர். மேலும் சட்ட அமலாக்க முகவர் மதக்குழுக்களை மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மெக்சிகோவின் சென் வென்சிட்டி பகுதியில் கார் பந்தயம் நடைபெற்றது.
    • அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

    இந்நிலையில், கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடித்தனர்.
    • பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி :

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று அதிகாலை டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கொள்ளையர்கள் காவலர்களை கத்தியால் வெட்டியதால் போலீசார் சுட்டு பிடித்தனர்.

    சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • என்.ஐ.டி. வளாகத்தில், மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது.
    • மாணவர்கள் 60 பேர், மாணவிகள் 42 என, 102 பேரும் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியில் இயங்கி வரும் என்.ஐ.டி. வளாகத்தில், மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமை, முகாம் கமாண்டர் லலித் குமார் ஜோஷி துவக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இம்முகாமில், பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் 118 பேரும், மாணவிகள் 30பேரும், என 148 பேரும், கல்லூரிகளை ச்சேர்ந்த மாணவர்கள் 60 பேர், மாணவிகள் 42 என, 102 பேரும் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், ஒரு முதுநிலை என்.சி.சி. அதிகாரி, ஒரு பெண் பயிற்றுனர் உட்பட 6 ராணுவ பயிற்றுனர்கள் மற்றும் நான்கு என்.சி.சி. அதிகாரிகள் இந்த முகாமை வழி நடத்து கின்றனர். பயிற்சி முகாமில், ராணுவம் சம்பந்தப்பட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். குறிப்பாக, துப்பாக்கிகளை கையாளுதல், துப்பாக்கிச் சுடுதல், நில வரைபடங்கள் வரைபடத்தில் இருக்கக் கூடிய பொருள்களின் தூரங்களை கணக்கிட்டு நகர்தல், இராணுவ நடை பயிற்சி, ராணுவக் கட்டளைகள் போன்ற முக்கியமான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பொது அறிவு வகுப்புகள், சுய சுத்தம் மற்றும் ஒழுக்கம், சாலை விழிப்புணர்வு, சமூக சேவை மற்றும் பங்களிப்பு, இந்திய அரசியலமைப்பு போன்ற விழிப்புணர்வு வகுப்புகளும், மாலையில் விளையாட்டு பயிற்சியும் இரவில் கலை நிகழ்ச்சி களும் இந்த 10 நாள் பயிற்சி முகாமில் நடைபெறும் என்று என்.சி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 8 மாத கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனால் தற்செயலாக சுடப்பட்டார்.
    • படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க் (31). 8 மாத கர்ப்பிணியும் கூட.

    இந்நிலையில், லாரா இல்க் திடீரென தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகனால் சுடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் லாராவின் வீட்டிற்கு சென்று பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். மகனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட லாரா, சிறுவன் தற்செயலாக சுட்டு விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும், 8 மாத கருவும் பரிதாபமாக இறந்தது.

    விசாரணையில், லாரா வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தபோது பெற்றோரின் படுக்கையறைக்குச் சென்ற சிறுவன் துப்பாக்கியை எடுத்து விளையாடும்போது துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவம் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எப்போதுமே இதமான காலநிலை காணப்படும்.

    இந்த கால நிலையை அனுபவிக்கவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த மே மாதம் நடந்த கோடை கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டும். அப்போது சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருக்கும். தற்போது பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் சுற்றுலாபயணிகள் வருகையானது தொடர்கிறது.

    தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்து குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்ததுடன், அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்டத்தின் நுழைவு வாயிலான கூடலூர், குஞ்சபனை, பர்லியார் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது கூடலூர் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.

    நீலகிரியில் கோடை சீசன் காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    தற்போது கோடைசீசன் முடிவடைந்தையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சீசன் முடிந்த பின்னரும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாலைகளில் உலா வருகின்றனர்.

    சிலர் வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அத்துமீறுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    • அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகினர்.
    • துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தலைமறைவாக உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் என ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஹென்றி கவுண்டி அதிகாரிகளின் அறிக்கையின்படி, அட்லாண்டாவிற்கு தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ப்டனில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

    துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்துவிட்டார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என மாவட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர் மெலிசா ராபின்சன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    • பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சுரால்கோட் சித்தார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    • ஒரு கட்டிடத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் உயிரிழப்பு
    • பிரபலமான ஓட்டல்கள், மால்கள் அந்த பகுதியில் இருந்ததால் பரபரப்பு

    நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு முக்கியமான ரெயில்நிலையம் அருகே கட்டுமான வேலை நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பிரபலான ஓட்டல்கள், மால்கள் உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இன்று தொடங்கும். நாங்கள் பிஃபா உடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை'' என்றார்.

    • ஏலக்காய் தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் சன்னி தாமஸ். இவர் அங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தபோது அவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தாக்குதல்
    • தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

    அமேசான் நிறுவனத்தில் மானேஜராக வேலைப்பார்த்து வந்தவர் 36 வயதான ஹர்ப்ரீத் கில். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பஜன்புரா பகுதி சுபாஷ் விஹார் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பேர் மோட்டார் சைக்களில் வந்து, ஹர்ப்ரீத் கில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் ஹர்ப்ரீத் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கோவிந்த் சிங்கின் வலது காது பக்கம் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நேற்றிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×