என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shoriful Islam"
- பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது.
- அந்த தொடரில் இடம் பெற்ற வீரர்களில் சொரிபுல் மட்டும் விலகி உள்ளார்.
சென்னை:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை வங்கதேசம் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய அதே அணிதான் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக சொரிபுல் இஸ்லாம் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான வங்கதேசம் அணி விவரம்:-
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்.
- இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம்.
- அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானைப் போன்று இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்கதேச அணி வீரர் சோரிபுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். அப்படிப்பட்ட பலம் பொருந்திய அணியை நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டால் மொத்த உலகமும் எங்களை திரும்பிப் பார்க்கும். எனவே இந்தியாவில் எங்களது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இதற்காக நாங்கள் கடினமாக பயிற்சி செய்து வருகிறோம்.
மேலும், பாகிஸ்தானில் எங்களுக்கு நல்ல தொடராக அமைந்தது. இதனால் நாங்கள் இந்தியாவிலும் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.
என்று சோரிபுல் கூறினார்.
- ஷோரிபுல் இஸ்லாம் வங்காளதேசத்திற்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- ஷோரிபுல் இஸ்லாம் 2021 ஏப்ரலில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காள தேச அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 24-ந் தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத வங்காள தேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் உடல் தகுதியுடன் இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் செல்கிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் வங்காளதேசத்திற்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2021 ஏப்ரலில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்