என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sivanthi Academy"
- பயிற்சி வகுப்புகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது.
- அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கி தேர்வு
ஒவ்வொரு ஆண்டும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) தேர்வினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சுமார் 8,773 காலிப்பணியிடங்களை நிரப்ப நேரடி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு வருகிற 7-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://sbi.co.in/web/careers என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 28 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வின் வினாக்கள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடம்பெறும்.
இணையவழி பயிற்சி வகுப்பு
பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) தேர்வுக்கான எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,500 ஆகும். பயிற்சிக்கான குறிப்பேடுகள் சாப்ட் காப்பியாக (soft copy) வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை
பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ரூ.7,500-க்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி/ இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம்' என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.
அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (http://sivanthiacademy.org) மூலமாகவும், இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,500-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொலைபேசி எண்க ளில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.
- கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 28 வயது வரை யிலும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.
- வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்துகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
வங்கி அதிகாரி, கிளார்க் தேர்வு
இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சானல் செலக்ஷன் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ள்ளது. வங்கி அதிகாரி பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 33 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயது வரையிலும் எழுதலாம்.
கிளார்க் பணிக்கான தேர்வை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் 28 வயது வரை யிலும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் எழுதலாம்.
நேரடி பயிற்சி வகுப்புகள்
இந்த வங்கி அதிகாரி மற்றும் கிளார்க் பணிகளு க்கான தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் நேரடி பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்து கிறது. இப்பயிற்சி வகுப்பு கள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, மொத்தம் 25 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பயிற்சியின்போது மாதிரித்தேர்வுகளும் நடத்த ப்படும். இப்பயிற்சி வகுப்பு கள் அனுபவமிக்க வல்லு னர்களால் நடத்தப் படுகிறது.
பயிற்சி வகுப்புகள் தின மும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ. 7,000 ஆகும்.
தங்கும் விடுதி வசதி
பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ. 7,700-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூ. 7,000-க்கான வங்கி வரைவோலை (கனரா வங்கி அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச் செந்தூர்-628216, தூத்துக்குடி மாவ ட்டம்' என்ற முகவரிக்கு தங்களது புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்க ளுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாகவும் இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம்.
அதன்பின்னர் பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ. 7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் விவரங்கள் பெற 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொsலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.
- வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.
- பயிற்சியின் போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வை நடத்துகிறது. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் (ஓ.சி.) 18 வயது முதல் 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் 18 முதல் 42 வயது வரையிலும் எழுதலாம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்த அனைத்து பிரிவினரும் இந்த தேர்வை 60 வயது வரையிலும் எழுதலாம்.
பயிற்சி வகுப்புகள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 எழுத்துத்தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் வருகிற 18-ந்தேதி முதல் தொடங்கி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி வரை நேரடியாக நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். பயிற்சியின் போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். அனுபவமிக்க வல்லுனர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,000 ஆகும்.
விடுதிகள்
பயிற்சியில் சேரும் ஆண்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. விடுதியில் தங்கிப்படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.7,700 பயிற்சி வகுப்பின் முதல் நாளன்று நேரில் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ரூ.7,000-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி அல்லது ஐ.ஓ.பி.-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும். அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (https://sivanthiacademy.org/) மூலமாக பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ் அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,000-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது.
தொலைபேசி எண்கள்
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரான்சிஸ் ரெஜீ லா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்