என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தென்னாப்பிரிக்கா"
- லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
- டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளான்.
- பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
தென்னாப்பிரிக்காவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 2012 முதல் 2021க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் இவன் ஈடுபட்டுள்ளான்.
பகாதியால் (Nkosinathi Phakathi) பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் (NPA) தெரிவித்துள்ளது.
பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் (Electrician) போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
- இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.
9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
- மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
- இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.
கேப்டவுன்:
தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைந்து வந்தனர்.
இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.
அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.
இந்நிலையில், இன்று டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார். இந்த பகுதியில் தான் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கினார். காந்தியின் நினைவாக அங்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்