search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101386"

    தா.பேட்டையில் முன்விரோத தகராறில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தா.பேட்டை:

    சேலம் மாவட்டம்,கெங்கவல்லி தாலுகா உலிபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (38) கூலிே வலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மகேஷ் (35) என்பவருடன் தா.பேட்டை முத்துராஜபாளையம் கிராமத்தில் உள்ள மாமியார் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் சரவணனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந் நிலையில் முத்துராஜ பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சரவணன், அவரது மனைவி மகேஷ் மாமியார் ஆகியோரை சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசியும் 3 பேரையும் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதில் காயம் அடைந்த சரவணன், மகேஷ்,முத்து லட்சுமி ஆகியோர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை (21), அழகர் (32), மெய்யன் (53), சிவராஜ்(22), கிஷோர் (23) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் தங்கதுரை, அழகர், மெய்யன், சிவராஜ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் கிஷோரை தேடி வருகின்றனர்.

    திட்டக்குடி அருகே முன்விரோத தகராறில் விவசாயியை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40), விவசாயி. இவருக்கும் இவரது தம்பி பாலுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு தனது மனைவி வாசுகியுடன் சேர்ந்து கொண்டு ராஜ்குமாரை தாக்கினார். 

    இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகியை கைது செய்தனர். பாலுவை தேடி வருகின்றனர்.
    மரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.

    கம்பம் அருகே வாலிபரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் நெல்லுகுத்தி புளியமரத் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது19). அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் பாண்டியனின் மகளை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

    இதனை பாண்டியனும், கார்த்திகேயனும் தட்டி கேட்டனர். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கார்த்திகேயன் கம்பம் இ.பி.ஆபீஸ் அருகே சென்றார்.

    அப்போது அங்கிருந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வாலிபரை தாக்கிய அரவிந்த், மணிகண்டன், சுரேஷ், காடையன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

    ×