search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101697"

    விருதுநகர் அருகே கல்லூரி மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 19 வயது மகள் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவார்.

    அப்போது மடத்துப்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் அந்த மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். மாணவி கண்டித்தும் கார்த்திக் திருந்துவதாக இல்லை.

    இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த மாணவியின் கையைப்பிடித்து கார்த்திக் ரகளையில் ஈடுபட்டார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகிறார்கள். #tamilnews
    சங்கரன்கோவில் அருகே வீட்டின் அருகில் கட்டி போட்ட நாயை தாக்கிய சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர், தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரது தாய் வெள்ளத்தாய் நாய் வளர்த்து வருகிறார். இதை வீட்டின் அருகில் கட்டி போட்டு இருப்பாராம்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி பரமசிவம் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளத்தாயின் வீட்டின் முன்பு கட்டியிருந்த நாய் அவரை பார்த்து குரைத்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம் அருகில் கிடந்த கம்பை எடுத்து நாயை அடித்துள்ளார். இது பற்றி வெள்ளத்தாய் தங்கத்துரையிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தங்கத்துரை, பரமசிவத்திடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றவே ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக தங்கத்துரை கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் மீதும், பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் தங்கத்துரை மீதும் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    போடி பஸ் நிலையத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி சிலமலை அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவர் போடியில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கான பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்லையாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கூறினார்.

    ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த அந்த நபர் செல்லையாவை கத்தியால் கையில் குத்தினார். இதில் வேதனையால் செல்லையா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

    உடனே அந்த நபர் தப்பி ஓட முயன்றார். உ‌ஷரான பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வடிவேல் என்கிற தீக்கொளுத்தி (வயது29), பிரபல ரவுடி என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    திருவேங்கடத்தில் போலீஸ் நிலையத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்ற தொழிலாளியை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 36). இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு வழக்கு விசாரணைக்காக திருவேங்கடம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வெகு நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்த போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் வைத்து தன்னை போலீசார் தாக்கியதாக கூறி ஜெயராஜ் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    நாகை கூலித்தொழிலாழி ஒருவர் போதை ஏறாததால் மறுகரையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு செல்ல காவிரி ஆற்றை கடந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து சித்தர்காடு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றின் இருகரைகளிலும் தலா ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

    தற்போது கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

    காவிரி ஆற்றில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்

    இந்த நிலையில் மறையூர் அக்ரஹார தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பழனிசாமி (வயது 52) என்பவர் நேற்றுமாலை சித்தர்காடு காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அவர் மதுகுடித்தார். ஆனால் அவருக்கு போதை ஏறாததால் ஆத்திரம் அடைந்தார். இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

    பின்னர் இந்த கடை சரக்கு சரியில்லை. நான் அக்கரையில் உள்ள கடைக்கு மது குடிக்க போகிறேன் என்று கூறினார். இதைகேட்டு மற்றவர்கள் ‘வேண்டாம்.. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது,’’ என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் காதில் வாங்கி கொள்ளாமல் காவிரி ஆற்றில் குதித்து நீந்த தொடங்கினார்.

    அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் நீந்த முடியாமல் தத்தளித்தார். பிறகு சில நிமிடங்களில் பழனிசாமி ஆற்று தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டார்.

    இதைபார்த்து கரையில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையிலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் இளைஞர்கள் காவிரி ஆற்றில் பழனிசாமி உடலை தேடி பார்த்து வருகின்றனர்.

    டாஸ்மாக் கடைக்கு சுற்றி செல்லாமல் காவிரி ஆற்றில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருதுநகரில் குடும்ப தகராறு காரணமாக மனைவி புகார் கொடுக்க சென்றதால் போலீஸ் சூப்பிரண்டு ஆபீஸ் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருதுநகர்:

    விருதுநகர் பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தினிக்கும் (23), முகமது ரியாசுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

    கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் போதைக்கு அடிமையான முகமது ரியாஸ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து நந்தினியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.

    இதனால் மனம் நொந்து போன நந்தினி, கணவர் மீது புகார் கொடுக்க விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார்.

    இதையறிந்த முகமது ரியாஸ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சென்றார். புகார் கொடுக்காதே என்று மனைவியிடம் வாக்குவாதம் செய்தார்.

    திடீரென்று அவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats
    ஆமதாபாத்:

    குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.

    இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த சிங்கங்களை விரட்ட முயன்றார். அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் பவேஷ் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டை போட்டார். இதில் அவரது கைகளிலும், உடலிலும் சிங்கத்தின் நகக்கீறல்கள் விழுந்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.

    எனினும் விடாமல் அவற்றுடன் சண்டையிட்ட பவேஷ், இடையிடையே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கும் அழைத்தார். இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு சிங்கங்களை விரட்டினர். பின்னர் காயமடைந்த பவேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Shepherd #Lion #Goats  #tamilnews 
    பெருமாநல்லூர் அருகே வீட்டில் உள்ள மின் வயரை தெரியாமல் மிதித்ததில் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் அம்பாள் நகரில் வசித்து வந்தவர் வடிவேல்(வயது 35). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா(30). இவர்களுக்கு நவநீதன்(5) என்ற மகன் உள்ளான். இவர் குடியிருக்கும் வீட்டில் கீழ் மட்ட தொட்டியில் உள்ள தண்ணீரை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு மோட்டார் மூலம் தினமும் ஏற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை வீட்டின் மேல் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக வடிவேல் மின்மோட்டாரை இயக்கினார். அப்போது, கீழே கிடந்த மின் வயரை அவர் தெரியாமல் மிதித்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மின்மோட்டார் முறையாக பொருத்தப்படாமல் இருந்ததும், மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்பட்ட மின் வயர் டேப் சுற்றாமல் இருந்ததும், மின்மோட்டாரை இயக்கிவிட்டு, திரும்பிய போது மின்வயரை வடிவேல் மிதித்ததால், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

    மேலும் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. 
    கொடுமுடி அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் அருகே ஒரு சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமி அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஆவார்.

    துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள் அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரை சேர்ந்த சரவணன் (வயது 42) என்ற விவசாய கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.

    அவர் பாலியல் பலாத் காரம் செய்ய முயன்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியை சரவணன் ஏமாற்றி காலிங்கராயன் வாய்க்கால் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

    மேலும் சரவணன் ஏற்கனவே ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 16 வயது, 12 வயது, 11 வயது மதிக்கத்தக்க சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சரவணனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு துரத்தியடித்தனர்.

    இதையடுத்து சரவணன் கேரளாவிற்கு தப்பி சென்று அங்கு தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தில் தனது தாயார் வீட்டுக்கு சரவணன் வந்திருந்தார்.

    அப்போதுதான் மீண்டும் 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்று பொதுமக்களிடம் சிக்கியுள்ளான். கொடுமுடி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ச்சியாக 4 சிறுமிகளை ஏமாற்றி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதால் சரவணனை கைது செய்து உரிய தண்டணை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆவணங்கள் மாய மானதால் தேவை யில்லாமல் 10 ஆண்டுகள் தொழிலாளி ஒருவர் சிறையில் இருந்துள்ளார். இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஜெயபால் என்பவர் கடந்த 1989-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 மாதங்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீனில் விடுவிக்கப் பட்டார். விசாரணைக்கு பின்பு அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில், ஜெயபால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்திருந்த போதிலும் அவரை சிறைத்துறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. விசாரித்தபோது, ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயபால் 15 மாதங்கள் சிறையில் இருந்த ஆவணங்கள் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தின் போது மாயமானது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஜெயபாலின் மகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஜெயபாலை சிறையில் இருந்து விடுவிக்க 22.11.2017 அன்று உத்தரவிட்டது. இருந்த போதிலும் சிறைத்துறை அதிகாரிகள் அவரை விடுவிக்கவில்லை. கடுமையான போராட்டத்துக்கு பின்பு சமீபத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தவர்கள் விடுவிக்கப்பட்டபோது ஜெயபாலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    ஜெயபால் 15 மாதங்கள் சிறையில் இருந்தது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் அவர் தேவையில்லாமல் 10 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

    இந்த செய்தியை சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்தது. பின்னர், இதுதொடர்பாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 
    திருச்சி அருகே கள்ளக்காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தச்சமலை வனப்பகுதியில் கடந்த மே மாதம் 30-ந்தேதி முகம் சிதைந்த நிலையில் ஒரு இளம்பெண் பிணம் கிடந்தது. காட்டுப்பகுதிக்குள் யாரோ மர்ம மனிதர் அவரை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு கொலை செய்து தப்பி சென்றது தெரிய வந்தது.

    கொலை செய்யப்பட்ட பெண் யார் என கண்டுபிடிக்கப்பட்டால் குற்றவாளியை மடக்கி விடலாம் என்பதால் அவர் யார் என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல் ஹக் உத்தரவின் படி மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ஆசைதம்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர் மற்றும் தனிப்படை திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டங்களுக்கு கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி விசாரணை நடத்தினர்.

    8 நாட்கள் தீவிர விசாரணைக்கு பிறகு கொலை செய்யப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள நந்த வனம்பட்டியைச் சேர்ந்த மலர்கொடி (வயது 38) என்பது தெரிய வந்தது.

    அவரை கொலை செய்தது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த முருகன் (48) என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட மலர்கொடிக்கு முதலில் ராமன் என்பவருடன் திருமணம் நடந்தது. பிறகு மேலும் 2 பேரை திருமணம் செய்துள்ளார். இதில் முதல் கணவருக்கு ஒரு மகனும், 2-வது கணவருக்கு 2 பெண் குழந்தைகளும் பிறந்த நிலையில் அவர்களை பிரிந்து விட்டார்.

    பிறகு வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய மலர்கொடி திண்டுக்கல்லுக்கு மீண்டும் திரும்பினார். நத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த போது அதன் அருகில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்த முருகன் என்பவர் பழக்கமானார். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் கணவன், மனைவி போல் தனியாக குடித்தனம் நடத்தினர்.

    இந்த நிலையில் மலர்கொடி மற்ற ஆண்களுடனும் பழக தொடங்கினார். இதை தட்டிக் கேட்ட முருகனை எதிர்த்து பேசினார். மேலும் முருகனிடம் பணமும் கேட்டு மிரட்டியுள்ளார்.

    ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள முருகன் மலர்கொடி பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கடந்த மே மாதம் 27-ந்தேதி மலர்கொடியை ஜாலியாக வெளியே சென்று வரலாம் என கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தச்சமலை காட்டு பகுதிக்கு சென்றதும் மலர்கொடிக்கு போதை தரும் மாத்திரைகளை கொடுத்துள்ளார். பிறகு இருவரும் அங்கு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மலர்கொடியை கொலை செய்த முருகன் முகத்தையும் சிதைத்து விட்டு தப்பியுள்ளார்.

    கடைசியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். மலர் கொடி கொலை செய்யப்பட்டது தெரிந்து அவருடன் பழகியவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மலர்கொடி திண்டுக்கல் நத்தத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார்.

    பலரிடம் பழகி சேர்ந்து வாழ்ந்து பிறகு பணம் கேட்டு மிரட்டுவது என இருந்த மலர்கொடியின் வாழ்க்கை கடைசியில் முருகன் மூலம் பரிதாப முடிவிற்கு தள்ளப்பட்டு விட்டது.

    வழி தவறிய அவரது வாழ்க்கை கடைசியில் காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. முருகனை நேற்று கைது செய்த துவரங்குறிச்சி போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    கோபி ஜெயிலில் அடைக்கப்பட்ட தொழிலாளி இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உள்ளார்.
    கோபி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 55). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி நாகம்மா.

    இவரின் நடத்தையில் பசுவண்ணாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. கடந்த 14-1-2017 அன்று இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சென்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசுவண்ணா அருகே கிடந்த கல்லை தூக்கி நாகம்மாவின் தலையில் போட்டார். இதில் நாகம்மா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுவண்ணாவை கைது செய்தார்கள்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பசுவண்ணா ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கோர்ட்டு பசுவண்ணாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

    அதன்பேரில் போலீசார் பசுவண்ணாவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் அவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கடந்த 6-ந் தேதி கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு, பசுவண்ணாவை 15 நாட்கள் கோபியில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பசுவண்ணாவுக்கு நேற்று மதியம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை ஜெயிலில் இருந்த போலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி பசுவண்ணா பரிதாபமாக இறந்தார்.

    கைதியான பசுவண்ணா இறந்தது தொடர்பாக விசாரிக்க ஈரோடு 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு ரங்கராஜன் இன்று கோபிக்கு வருகிறார்.

    பசுவண்ணாவுக்கு எப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது? எப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்? எப்போது இறந்தார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் யார்? என்பது தொடர்பாக அவர் விசாரணை நடத்த இருக்கிறார். #tamilnews
    ×