search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னூர்"

    அன்னூர் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    அன்னூர் அருகே உள்ள சானாம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (50). பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 20-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த நாகராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து நாகராஜன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    அன்னூர், பெரியநாயக்கன் பாளையத்தில் மின்வாரிய ஊழியர் வீடு உள்பட 2 இடங்களில் 31 பவுன் நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையம் தாமு நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இரவது மனைவி சிவகாமி (வயது 45). மின்சார வாரிய ஊழியர்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சிவகாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அறையில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த கம்மல், வளையல், மோதிரம் உள்பட 11¼ பவுன் தங்க நகைகளை கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சிவகாமி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே உள்ள ஒட்ரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் தவமூர்த்தி (வயது 55). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. மேலாளர்.

    கடந்த 7-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சுற்றுலா சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    அதிர்ச்சியடைந்த தவமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், வளையல், கம்மல், மோதிரம் உள்பட 19½ பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தவமூர்த்தி அன்னூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்து செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்:

    அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி (53) கூலித் தொழிலாளி. இவர் வேலையை முடித்து விட்டு இரவு 9 மணியளவில் தனது மொபட்டில் அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயிமாபுதூர் பிரிவு அருகே சென்ற போது மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதனால் துரைசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிட்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணப்பன் மகன் பழனிச்சாமி (43) என்பவர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

    அன்னூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த வட மாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுனில்ராம் (வயது 35). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாரதி நகரில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தார். அறைக்கு திரும்பிய அவர் திடீரென வாந்தி எடுத்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ. மேட்டுப்பாளையம் அய்யப்ப ரெட்டி புதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு பிரனேஷ் (4), விகாஷ் (1½) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

    ரமேசும், அவரது மனைவி ராதாமணியும் கஞ்சப்பள்ளியில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். நேற்று அவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். மாலை குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் விகாஷ் அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தான்.

    இதில் மூச்சு திணறி இறந்தான். ரமேசும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது மூத்த மகன் பிரனேஷ் மட்டும் தான் வீட்டில் இருந்தான். விகாசை தேடிய போது குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கதறி அழுதனர்.இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே புளியமரத்தில் வேன் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

    அன்னூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 12 பேர் ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். வேனை டிரைவர் ராமதாஸ் ஓட்டி வந்தார்.இந்த வேன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜெ.ஜெ.நகரில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த சீனு என்கிற சீனிவாசன் (24), ரிஷி (11) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

    ராமதாஸ் (டிரைவர்)சாந்தி (60), பாஸ்கரன் (45), அவரது மனைவி நித்யா (33), லயா என்கிற தேவி (13), வினோத் குமார் (30), காவியா (12), கமல் (8), பிரவின் (29), மகாலட்சுமி (26), பெரியசாமி (31).

    விபத்தில் பலியான ரிஷி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள பாஸ்கரன்- நித்யாவின் மகன் ஆவார்.

    டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது அன்னூர் அருகே புளியமரத்தில் வேன் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    அன்னூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 12 பேர் ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். வேனை டிரைவர் ராமதாஸ் ஓட்டி வந்தார்.இந்த வேன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜெ.ஜெ.நகரில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த சீனு என்கிற சீனிவாசன் (24), ரிஷி (11) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.

    11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

    ராமதாஸ் (டிரைவர்)சாந்தி (60), பாஸ்கரன் (45), அவரது மனைவி நித்யா (33), லயா என்கிற தேவி (13), வினோத் குமார் (30), காவியா (12), கமல் (8), பிரவின் (29), மகாலட்சுமி (26), பெரியசாமி (31).

    விபத்தில் பலியான ரிஷி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள பாஸ்கரன்- நித்யாவின் மகன் ஆவார்.

    டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    ×