என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிதம்பரம்"
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில்தான் முறையின்றி வங்கிகடன்கள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு தனது ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், 2014-ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட வங்கிகடன்களில் வாராக்கடன்கள் எத்தனை? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு மோடி பதலளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
முந்தைய ஆட்சியில்தான் முறையற்ற வங்கிக்கடன்கள் அளிக்கப்பட்டதாக கூறும் மோடி, அவற்றை திரும்ப பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #Chidambaram #Modi
ஏர்செல் மாக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் சில விவரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.
அவரது மனுவில், சிபிஐ குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்புவதாகவும், நீதி விசாரணையை விடுத்து ஊடகங்கள் மூலம் வெற்றி பெற சிபிஐ நினைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சிபிஐ குற்றப்பத்திரிகையை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கு வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.
ப.சிதம்பரத்தின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, வழக்கு குறித்து அக்டோபர் 8-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AircelMaxisCase #CBI #Chidambaram
திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்துவந்த கருணாநிதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து கட்சியின் தலைவர் பதவிக்கு முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க மூத்த நிர்வாகிகள் முடிவெடுத்தனர்.
இதையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட திமுகவின் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மாலை 4 மணி வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், போட்டி இன்றி திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், புதிய பொருளாளர் துரைமுருகனுக்கும் தனது வாழ்த்துக்களை ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Chidambaram
கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்தடைந்தது. கீழணை நிரம்பியதால் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் அதிகநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர பகுதியான சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்பட 7 கிராமங்களில் முதலில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த கிராமங்களில் வசித்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
இந்த நிலையில் கீழணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு, புதிய கொள்ளிடம் ஆறுகளின் பல இடங்களில் கரைகள் உடைந்து கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. எருக்கன் காட்டுபடுகை, அகரநல்லூர், பழைய நல்லூர், வேளக்குடி, வீரன்கோவில் திட்டு, பெரிய காரைமேடு, இளந்திரை, அம்பிகாபுரம், மடத்தான் தோப்பு, கீழகுண்டலபாடி உள்பட 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கிராமங்களில் 8 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோவில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து கீழ் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் முதல் குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறைவாக இருந்தாலும் கிராமங்களில் சுற்றி தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி 7 நாட்கள் ஆகியும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. வீடுகளை சுற்றி தேங்கியுள்ள தண்ணீர் வெளியே செல்ல வழி ஏதும் இல்லாததால் தண்ணீர் அப்படியே நிற்கிறது.
திட்டுக்காட்டூர், பெரம்பாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், வேளக்குடி போன்ற கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் தீவுபோல் காட்சியளிக்கிறது.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் முகாமில் தங்கி உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. தெருக்களில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பேர் தவித்து வருகிறார்கள். சிலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மொட்டைமாடியில் தஞ்சடைந்து கடந்த 3 நாட்களாக சமையல் செய்து அங்கேயே தங்கி உள்ளனர். பலர் போதுமான குடிநீரும், உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் அதில் கொசுக்கள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் பொது மக்கள் பலர் தங்கள் வீட்டுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
பல கிராமங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் நிற்பதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வேளக்குடி, பெரும்பட்டு, கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. இவைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிதம்பரம் அருகே உள்ள பல்வேறு அமைப்பினர் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவைகள் படகுகள் மூலம் கொண்டு செல்லப் படுகிறது. அதுபோல் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் உள்ளிட்ட தீவினங்களும் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
புதுடெல்லி:
டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், காலணி உள்ளிட்ட பல பொருட்களின் மீதான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் வரி குறைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
ஜி.எஸ்.டி. கவுன்சில் 100 விதமான பொருட்களின் விலையை குறைத்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது, பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடை பெறுவது நல்லது. நாங்கள் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சொன்ன அறிவுரையை அரசு பின் பற்றாமல் தற்போது வரிகளை குறைத்துள்ளது. தற்போதைய ஜி.எஸ்.டி. இன்னும் மறு சீரமைப்பு செய்யப்படவில்லை.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram #GST
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப,சிதம்பரம், சிபிஐ-க்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே என் மீதும், மதிப்புமிக்க அரசு அதிகாரிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். #AircelMaxisCase #Chidambaram #CBI
மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்துவரும் சுஷ்மா சுவராஜ் குறித்து முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 2014-ம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி, அதில் தோல்வியையே கண்டனர் என்றும் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பணிகளை சிறப்பாக செய்து வருவதாகவும், உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள் தேவை எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
சென்னை:
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிகாலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை தனி அதிகாரிகளே போதும் என்றால், தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்?
அ.தி.மு.க.விற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும்?
தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் (ஜனாதிபதி ஆட்சி) ஆட்சியை ஒப்படைக்கலாமே?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Chidambaram
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவான நிலையில், கைது செய்வதில் இருந்து தடை விதிக்ககோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் விசாரணையின்போது சிதம்பரம் அளிக்கும் வாக்குமூலத்தை பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, சற்றே மாறுபட்ட கோணத்தில் ப.சிதம்பரத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது. #Chidambaram #AircelMaxiscase
அங்குள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சந்திரசேகர் தீட்சிதர் கொடியேற்றினார். பின்பு கொடி மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மொத்தம் 10 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலையிலும், இரவு வேளையிலும் தங்க, வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. வருகிற 20-ந் தேதி முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் தேரில் எழுந்தருளுகிறார். இதனைத் தொடர்ந்து தனித்தனி தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது.
21-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.
22-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
மானாமதுரை:
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது போன்ற நட வடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்தும் மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மகளிர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி செந்தாமரை, பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மாவட்ட நிர்வாகி ரமேஷ்கண்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் ஆரோக்கிய தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரேம சந்திரன், நிர்வாகிகள் புருஷோத்தம்மன், காசி மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் மேனகப்பிரியா நன்றி கூறினார்
இவற்றில் மார்கழி மற்றும் ஆனி மாதம் நடைபெறும் மகா அபிஷேகமும், தரிசனமும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில் மேற்கண்ட 2 தரிசனத்தின் போது மூலவராகிய நடராஜர், உற்சவராக புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். எனவே இந்த காட்சியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
அப்படி சிறப்பு வாய்ந்த நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, கோவிலில் 10-ந் தேதி இரவு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மறுநாள் 11-ந் தேதி ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பின்னர் 12-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. விழாவில் 16-ந் தேதி இரவு தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான வருகிற 20-ந்தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் மூலவராகிய ஆனந்தநடராஜரே எழுந்தருளி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அன்று இரவு ராஜசபை என்கிற ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமிக்கு லட்சார்ச்சனையும், 21-ந் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் நடராஜர் ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்வும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து 22-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்