search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103912"

    விநாயகர் சிலை முன் கல்லூரி மாணவிக்கு காதலன் தாலி கட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு கருவம்பாளையம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று கல்லூரி மாணவி ஒருவரும், வாலிபரும் அங்கு வந்தனர். அவர்கள் விநாயகரை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் கொண்டு வந்த தாலி கயிற்றை மாணவி கழுத்தில் கட்டினார்.

    இதனால் பரபரப்பு உருவானது. பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் கல்லூரி மாணவி மற்றும் வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பெற்றோரும் அழைத்து வரப்பட்டனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் ராஜூ (24) மாணவி பெயர் ஜோதி (18) என்பதும் தெரிவந்தது. ஜோதி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர் ஏற்காததால் விநாயகர் சிலை முன் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். #tamilnews
    கரூர் போலீஸ் நிலையத்தில் காதலியுடன் சேர்த்து வைக்க கோரி வாலிபர் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபிநாத் (வயது 24), சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கல்லூரி மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், திருச்சியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சம டைந்தனர்.

    அதனை தொடர்ந்து இருவரின் வீட்டில் இருந்தும் பெற்றோர்களை அழைத்து கரூர் டி.எஸ்.பி கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த கோபிநாத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வெளியேறினார்.

    பின்னர் திடீரென கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து எங்களை வாழவிடவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்தார். மேலும் தனது கழுத்தின் பின்பகுதியை கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    இதனை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவர் மேலும் கழுத்தை அறுக்காமல் கத்தியை பறித்தனர். மேலும் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரூர் நகர காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த வாலிபர் ஒருவர் விடுதலையாக நாய் ஒன்று காரணமாக இருந்தது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

    ஜோசுவா ஹார்னர்

    ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.

    வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews
    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 25). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் கடையில் வேலை பார்க்கும் சூலூரை சேர்ந்த ராஜேஷ்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தென்னம்பாளையம் நோக்கி சென்றார்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இளவரசனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராஜேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவலின் பேரில் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பச்சாத்தி(27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூருக்கு வேலை தேடி வந்த வாலிபர் ரெயில் மோதி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் மலைராஜா (வயது 26). இவர் வேலை தேடி நேற்று ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்தபோது மற்றொரு ரெயில் வேமாக வந்தது.

    ரெயில்பாதை நடுவே மலைராஜா நிற்பதை பார்த்த என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பினார். ரெயில் சைரன் சத்தம்கேட்ட மலைராஜா தடுமாற்றம் அடைந்தார். எந்த புறம் செல்வது என்று குழப்பம் அடைந்தார்.

    அப்போது வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மலைராஜா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானர்.

    இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமண் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று நண்பருடன் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்தார்.

    பொருட்கள் வாங்கி விட்டு திருப்பூர்- ஊத்துக்குளி ரோடு 2-வது பாலம் என்ற இடத்தில் உள்ள இருவழி ரெயில் தண்டவாளத்தை ஹெட்போனில் பாட்டுக்கேட்டவாறு கடக்க முயன்றார்.

    அப்போது ரெயில் வருவதை பார்த்து அவருடன் வந்த நண்பர் லட்சுமணனை எச்சரித்தார். ஆனால் லட்சுமண் ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விட்டார்.

    அடுத்த தண்டவாளத்தை கடந்தபோது கோவை- ஈரோடு வந்த ரெயில் லட்சுமண் மீது மோதியது. இதில் உடல் சிதறி லட்சுமண் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோட்டயம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். தினசரி அவர் கல்லூரிக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்தார்.

    இந்தநிலையில் கல்லூரி மாணவி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மாணவி மறுக்கவே கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.இது குறித்து கல்லூரி மாணவி காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜே.எம். 3 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேலுசாமி கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரேவதி ஆஜராகி வாதாடினார்.

    மாஜிஸ்திரேட் அளித்த தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெண்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியவில்லை. இது போன்ற தண்டனை பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். #tamilnews
    நாகை மாவட்டம் அருகே காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் பரணிதரன்(வயது 21). இவர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது பரணிதரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இந்த காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை மீறி பரணிதரன் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என அந்த பெண்ணின் பெற்றோர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் பெற்றோருக்கு பயந்து நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதல் ஜோடியினர் வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் இருவரும் நாகை காடம்பாடியில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நர்சிங் மாணவியை கேலி செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள சிக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், நர்சிங் படித்து வந்தார். இவர் கல்லூரி சென்று வந்தபோது, களத்தாவூரைச் சேர்ந்த முனியசாமி மகன் பிரதாப் (24) அடிக்கடி கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார்.

    மேலும் அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனை மாணவி ஏற்கவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை தேடி வருகிறார்.
    கோயம்பேட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்களை மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்று இருவரையும் மடக்கி பிடித்தார்.
    போரூர்:

    சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் குற்றச் சம்பவங்கள் குறையவில்லை.

    இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே 100 அடி ரோட்டில் செல்போன் பறித்துவிட்டு தப்பிய 2 பேரை வாலிபர் ஒருவர் மடக்கி பிடித்தார்.

    சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் நேற்று இரவு 10.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 100 அடி ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் வெங்கடேஸ்வரனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் ‘லிப்ட்’ கேட்டு அதில் ஏறினார்.

    பின்னர் வண்டியை வேகமாக ஓட்டச் சொல்லி விரட்டிச் சென்றார். செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவரும் கோயம்பேடு பஸ்நிலைய சிக்னல் அருகில் வேகமாக செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

    உடனே சிக்னலில் இறங்கி ஓடிய வெங்கடேஸ்வரன் கொள்ளையர்கள் இருவரையும் மடக்கி பிடித்தார். பின்னர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து தர்ம அடி கொடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கொள்ளையர்கள் கோயம்பேட்டை சேர்ந்த சுதன், சூளைமேடு கார்த்திக் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவங்களில் இருவரும் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    இதேபோல தேனாம்பேட்டையிலும் வாலிபர் ஒருவரிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்ற வாலிபர் சினிமா பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் நண்பர்கள் 5 பேரும் சென்றனர். 2 மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஸ்ரீதரை கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இருந்து பேசுவதாக கூறி வாலிபரிடம் ரூ. 75 ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை புது விளாங்குடி சத்குருநாத் நகரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் கூடல்புதூர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பேசியதாக கூறிய மர்ம நபர், பழங்காநத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் கிரேடு-1 பணியிடம் காலியாக உள்ளது.

    இந்த பணியிடத்திற்காக உங்களது வேலை வாய்ப்பு பதிவைஅனுப்ப ரூ.12 ஆயிரம் தர வேண்டும் என கூறினார்.

    மேலும் அந்த பணத்தை அழகுராஜா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தும்படி தெரிவித்தார். அதன்படி நான் ரூ.12 ஆயிரத்தை செலுத்தினேன். அதன் பிறகு பல தவணைகளில் மொத்தமாக ரூ.75 ஆயிரத்து 600 வாங்கி விட்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.

    இதனைத்தொடர்ந்து பழங்காநத்தம் சென்று விசாரித்த போது அப்படி ஒரு அலுவலகமே அங்கு இல்லை என தெரியவந்தது.

    மேலும் என்னிடம் போனில் பேசியவர் சரவணன் என்பதும் தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணன், அழகுராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    எண்ணூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
    எண்ணூரில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்ம அடி  
    தாமிரபரணி ஆற்று பாலத்தின் மீது நின்று வாலிபர் ஒருவர் தண்ணீரில் குதிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெல்லை:

    நெல்லை பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களின் செல்போன்களுக்கு இன்று ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞர் அரை டவுசர், பனியன் அணிந்து கொண்டு நெல்லை சந்திப்பு ஆற்றுப் பாலத்தில் நடந்து வந்து கைப்பிடி சுவர் அருகே நிற்கிறார். திடீரென்று அவர் கைப்பிடி சுவரில் ஏறி ஆற்றுக்குள் குதித்து தண்ணீரில் நீந்தி செல்கிறார்.

    இந்த வீடியோ காட்சி பெரும்பாலான செல்போன்களுக்கு வைரலாக பரவி வருகிறது. வீடியோ காட்சியில் அந்த இளைஞர்கள் பேசுவதும் பதிவாகி உள்ளது. இளைஞர் குதித்த ஆற்றுப் பகுதியின் அருகே தான் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் பிழைத்து நீந்தி சென்றுவிட்டார். அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் பெரிய பிரச்சினையாகி இருக்கும்.

    இளைஞர்கள் இது போல் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளார்கள்.

    தற்போது நெல்லை சந்திப்பு போலீசார் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் யாரும் குதித்து விடாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×