என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள்"
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தலைமைத் தேர்தல் ஆணையம் சென்று, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுகளுக்கும் முரண்பாடு இருப்பது தெரிய வந்தால்கூட, அந்த தொகுதியில் முழுமையாக ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.
ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்க முடியவில்லை.
குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி அமைத்துள்ளன. இங்கு காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
இதேபோன்று பல மாநிலங்களில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
ஆனால், சமாஜ்வாடி கட்சி தனது பிரதிநிதி யாரையும் விருந்துக்கு அனுப்பவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ்சந்திரமிஸ்ரா அனுப்பப்பட்டு இருந்தார். அவர் சில நிமிடங்கள் மட்டும்தான் விருந்து நிகழ்ச்சியில் இருந்தார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் முழுமை பெறாததையே உணர்த்தும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சி அமைந்தது.
விருந்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, டெல்லியிலேயே தங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்.
இது சம்பந்தமாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சில கட்சிகள் (சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை குறிப்பிட்டு) தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் சேர தயங்கலாம். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் அரசியல் கட்டாயம் அப்படி இருக்கலாம்.
கம்யூனிஸ்டு கட்சிகள் எங்களுடன் இருப்பார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.
பா.ஜனதா தேசிய தலைவர்களை மேற்கு வங்காள கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பதாக பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்.
அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் அவரால் பேரணிக்கு வர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மேற்கு வங்காள நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #MamataBanerjee #ParliamentElection
மொழிப்போர் தியாகிகளின் நினைவாக கடைபிடிக்கப்படும் வீர வணக்க நாள் முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழனை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்துள்ளோம்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார், இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு எந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கனிவோடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.
இந்தியாவில் எந்த மாநிலமும் பெறாத வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு 68 நிறுவனங்கள் இன்று தொழில் தொடங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும்.
அந்த வகையில் எடப்பாடி தலைமையில் 2-வது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த அரசையும், இந்த மாநாட்டையும் குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் இதை வரவேற்று உள்ளன.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, கலைச் செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #SellurRaju #Jactogeo
சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்ட அரசின் மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும், செல்போன் இணைப்பு போன்றவற்றுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் அறிவித்தது. ஆதார் அட்டையில் தனிநபர்கள் பற்றிய விவரம் அடங்கி இருப்பதால், அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் என்றும், அரசின் சலுகைகளை பெற ஆதார் அவசியம் என்றும், ஆனால் செல்போன் இணைப்பு, நீட் தேர்வு, வங்கி கணக்குக்கு ஆதார் எண் கட்டாயம் அல்ல என்றும், கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆதார் சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். தனிநபர்கள் தாங்களாக விரும்பி செல்போன் இணைப்பு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசுகையில், இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்பதால் உடனே வாபஸ் பெறவேண்டும் என்றார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயும், இந்த சட்ட திருத்த மசோதா சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார்.
உறுப்பினர் என்.கே.பிரேமசந்திரன் (புரட்சி சோசலிஸ்டு) பேசுகையில், இந்த மசோதா தனிநபர்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில், இந்த மசோதா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு விரோதமானது அல்ல என்றும், தனிநபர்களின் உரிமை பறிக்கவில்லை என்றும் கூறினார்.
அரசின் நேரடி மானிய திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதால் ரூ.90 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை ஆதார் அட்டை திட்டத்தை வரவேற்று இருப்பதாகவும் அவர் அப்போது அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே மாநிலங்களவையில் உள்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி நிலவரப்படி இந்தியாவில் 122 கோடியே 90 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களில் 6 கோடியே 71 லட்சம் பேர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றும், 29 கோடியே 2 லட்சம் பேர் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அப்போது அவர் கூறினார். #Aadhaar #AmendmentBill #LokSabha
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விவகாரம் 2-வது நாளாக நேற்றும் சட்டசபையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. காலையில் சட்டசபை கூடியதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றவாறே, கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களில் சிலர் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் மேடைக்கு முன்னே கருப்பு துணியால் உருவாக்கப்பட்ட பேனர் ஒன்றை வைத்தனர். அதில், ‘சபரிமலையில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தையும் முற்றிலும் நீக்க வேண்டும்’ என எழுதப்பட்டு இருந்தது.
இதைப்போல சில எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதியில் நின்றவாறே ‘சபரிமலையை பாதுகாப்போம்’ என கோஷமிட்டனர். சிலர் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதால் சபையில் கடும் அமளி நிலவியது.
சபரிமலையில் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், இதனால் பக்தர்கள் ஏராளமான துயர்களை அனுபவித்து வருவதாகவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, இது தொடர்பாக தாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதற்கு சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறே இருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவரிடமும் அமைதியாக சபையை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அவரது வேண்டுகோளை எதிர்க்கட்சியினர் மதிக்கவில்லை. இதனால் சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். இதனால் சட்டசபையில் 2-வது நாளாக அலுவல்கள் பாதிக்கப்பட்டன. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
சேலம்:
சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பாலை மெயின்ரோடு பிரிவில் சேகோசர்வ் எதிரில் ரூ. 22 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-
8 வழிச்சாலை அமைப்பதற்கு நாம் முயற்சித்தோம். அது இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பல பேர் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய வழக்கு முடிந்த பிறகு அந்த பணிகள் தொடங்கும்.சில பேர் 8 வழிச்சாலை சேலத்திற்கு தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கின்றனர். சேலம் வழியாகத்தான் இந்த சாலை செல்கிறது அவ்வளவு தான்.
இன்றைக்கு கோவையாக இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, கரூர், திண்டுக்கல், நாமக்கல்லாக இருந்தாலும் சரி சென்னைக்கு போக வேண்டும் என்றால் சேலம் வழியாகத்தான் போக வேண்டும். சேலத்துக்கு மட்டும் தான் 8 வழிச்சாலை என்று தவறான கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் சேலத்தில் இருக்கிறார். அதனால் தான் சேலத்திற்கு 8 வழிச்சாலை கொடுத்தார் என்று சொல்கிறார்கள். எனக்கென்ன 10 தொழிற்சாலையா? சேலத்தில் ஓடிக் கொண்டி ருக்கிறது. 8 வழிச்சாலை போடுவதற்கு. ஒரு தவறான கருத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தவறான விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறது.
நாளுக்கு நாள் வாகனத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. கனரக வாகனம் அதிகமாக போயிக் கொண்டு இருக்கின்றது. இதனால் சாலையின் தேவையும் அதிகரிக்கின்றது. புதிய சாலைகள் அமைக்க வேண்டும். சாலைகள் விரிவுபடுத்த வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்த 8 வழிச்சாலை அமைக்கின்றபோது கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் மிச்சமாகும். இதனால் எரிபொருள் மிச்சமாகும். மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். நேரமும் குறைகிறது. பயண நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமல்ல அந்த சாலைகள் விபத்து இல்லாத சாலையாக தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும்.
இப்படிப்பட்ட சாலையை அமைக்கப்படும்போது தான் புதிய புதிய தொழிற்சாலைகள் வரும். இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும். வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு தேவையான பொருளாதார வசதி கிடைக்கும்.
இப்படிப்பட்ட ஒரு நலத்திட்டங்கள் வருகின்றபோது பொதுமக்கள் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்றால் தான் நம்முடைய நாடு முன்னுக்கு வர முடியும். வெளி நாடுகள் விரைவு சாலைகளால் தொழில் வளம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #cmedappadipalanisamy #chennai salemgreenexpressway
புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பதற்றத்தோடு உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சுதந்திரமாக செயல்படக் கூடிய சி.பி.ஐ., வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு முரண்பாடுகள் அதில் ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பா.ஜ. க.வை எதிர்ப்பதற்கும், 2019 தேர்தலுக்காகவும் ஒன்று கூடி வருகிறோம். 2019 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.
பாலியல் வன்முறைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையே அதற்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் தொடர்ந்து ஜனநாயகப் படுகொலை நடந்து வருகிறது. தமிழர்களுக்கு அங்கு ஒருபோதும் பாதுகாப்பு கிடையாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு மவுனத்தை கலைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #BJP
வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்கவும், விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜ.க.வின் ஆதரவு கட்சியான சிவசேனா தனது பத்திரிகையில் விமர்சனம் செய்துள்ளது. அதில், பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிக்கான பொறுப்புகளை தாம் சுமந்து வந்ததாகவும், தற்போது விழித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள் பொதுமக்களின் நலனில் எவ்வாறு பங்காற்றும் என் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், எதிர்க்கட்சிகள் அதன் பணியை முறையாக செய்யும்போது, மக்களின் விருப்பம் பாதுகாக்கப்படுவதாகவும் சாமனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிவசேனா கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அதன் தலைவர் உத்தவ் தாக்ரே, எதிர்க்கட்சிகளின் பலம் அறியவே வேண்டி பங்கேற்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார் என சாமனாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்