என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருணாஸ்"
தென்னிந்திய நாடக சங்க கட்டிடம் கட்ட நிதி வழங்குவதற்காக இன்று நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நான் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவைப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்படும்.
கருத்து கணிப்பு மீதான நம்பகத்தன்மை போய் விட்டது. தனியார் நிறுவனம் நடத்தும் கணிப்புகள் பொய் கணிப்புகளாக உள்ளன.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என எந்த கருத்து கணிப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் நான் வெற்றி பெற்றேன்.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை சசிகலா தான் பொதுச்செயலாளர். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் அந்த கட்சியின் நிலைப்பாடு தெரியவரும்.
அ.தி.மு.க. பிளவுபட்டு நிற்பது பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இது தான் என் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 20-ந்தேதி ஜெனீவா ஐநா சபையில் இலங்கை இனப் படுகொலை குறித்து உரையாற்ற உள்ளேன். ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மத்திய அரசு அந்த கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை, எனவே தமிழர் நலனுக்காக தமிழர்களுக்காக அந்த கருத்துக்களை முன்மொழிய நான் செல்கிறேன்.
விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது கடற்கரைகள் பாதுகாப்பாக இருந்தது. இன்று அப்படி இல்லை. சிங்களவர்களின் அட்டூழியங்களை மறைக்கவே காலதாமதம் செய்து வருகிறார்கள். அரசுகளை குறைசொல்ல விரும்பவில்லை. எம் இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
மற்ற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு இங்கே வாக்கு உரிமை வரை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இருந்து வந்த எம் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.
மோடி அரசால் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். வட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற முக்கிய காரணம் மோடி எதிர்ப்பே. எந்த கட்சியும் எனது சமூக மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.
ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணி, இது அவரின் ஆத்மாவிற்கு விரோதமான செயல். நான் இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்றிருக்கிறேன். வேறு கட்சிக்கு வாக்கு கேட்டால் என் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம் தொகுதி கொடுத்தால் எந்த கூட்டணியில் இருந்தாலும் நான் வெற்றி பெறுவேன். என்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. தனியரசும் அழைக்கப்படவில்லை.
ஜெனீவாவில் இருந்து திரும்பியவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன்.
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் செய்வதைவிட ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது. அது தவறான அணுகுமுறை. இந்த வழக்கை நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அரசாணையில் வெளியிடுவது தவறு. அது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, அரபு நாட்டில் உள்ளது போன்று கடுமையான தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன். கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நர்மதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த 20-ந்தேதி நான் மதுரை சென்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தேன்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மறிக்கப்பட்டு இருந்தது
கடைகள் மீது கல் எரிந்து பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுபற்றி விசாரித்தபோது முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
அவர் ஏற்கனவே சென்னையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காக கைதாகி சிறை சென்றவர். எனவே மதுரை சம்பவத்துக்கு காரணமான கருணாஸ் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Karunas
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.
புயலில் சேதமான மரங்கள், மின்கம்பங்கள், உள்ளிட்டவை சரி செய்வதற்காக மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இருந்த போதிலும் கிராமங்களில் முழுமையாக மின்விநியோம் சென்றடையவில்லை.
மின்கம்பங்களை சரிசெய்வதற்காக மாவட்டங்களில் உள்ள மின் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் உள்ள ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதியை பார்வையிட இன்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வந்திருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தார். பின்னர் மின் கம்பங்களை சரிசெய்வதற்காக திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, பேராவூரணியில் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கருணாஸ் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இன்று குருவிக்கரம்பை முனுமாக்காடு அரசு பள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் உள்ள மக்களுக்கு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசனை செய்து வருகிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றேன். ஆனால் அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கமிஷன் பெற்றுக்கொண்டு தான் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்ற விதி தமிழகத்தில் உள்ளதால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழக அரசை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Karunas #tamilnadugovt #Centralgovt
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.
தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை.
தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே... ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமல்ஹாசன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார்.
புராண கதைகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்து ராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை.
தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர் மகன்-2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார். #Karunas #Krishnasamy #Thevarmagan2
மதுரை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் மதுரையில் 2 தினங்களாக தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தினகரனை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்றிரவு சந்தித்து பேசினார்.
அப்போது தினகரனுக்கான ஆதரவு நிலைப்பாடு, இதற்காக அ.தி.மு.க. நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.
பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரது அங்கீகாரம் போதும்.
கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தை ஒன்றாக இணைக்கவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தொடங்கினேன். இதற்கான வாய்ப்பாக சட்டசபையில் நுழைந்தேன். அது நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. அணி, அணியாகத்தான் உள்ளது. அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை.
சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விளக்க நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீசு வந்தால் அதை நான் சந்திக்க தயார்.
எனக்கு எதிராக செயல்படுவதற்காக பல்வேறு அமைப்பினருக்கும் அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் பணம் கொடுத்து தூண்டி விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Karunas #TTVDhinakaran
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.
இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டி.டி.வி.திகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் ஏற்கனவே கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன. நேற்று 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு விட்டதால் மொத்தம் 20 தொகுதிகள் காலி இடங்களாக உள்ளன.
இந்த 20 தொகுதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த 20 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
குறிப்பாக 20 தொகுதி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் கருணாஸ் ஆகியோரே அந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவராக உள்ளார். எனவே அவர் மீது கட்சி விதி மீறல்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டி.டி.வி.தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே அ.தி.மு.க. அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.
அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அ.தி.மு.க. தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கட்சி விதிகளை நடிகர் கருணாஸ் மீறியதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே இரட்டை இலை தயவால் வெற்றி பெற்ற கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகரால் மிக, மிக எளிதாக பறிக்க முடியும்.
கருணாஸ், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 4 பேர் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2 வாரங்களுக்கு முன்பு சூசகமாக தெரிவித்தார். எனவே டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
4 எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு..க. கட்சி விதிகளை முழுமையாக மீறியுள்ளனர். அரசை தொடர்ந்து அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
எனவே “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது. அதன் பிறகு 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கூறினார்.
இந்த நிலையில் கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி மூவரும் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்கள் கூறி வருகிறார்கள். கலைச்செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. துரோகிகளை நீக்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.
பிரபு எம்.எல்.ஏ. கூறுகையில், “என் மீது நடவடிக்கை எடுத்தால் சட்ட ரீதியாக சந்திக்க தயார்” என்று கூறியுள்ளார். டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 4 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து விமர்சித்து வருவதால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க.வில் வலுத்து வருகிறது.
இதற்கிடையே நடிகர் கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்தால் அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமான அம்சமாக மாறும் என்று தெரிய வந்துள்ளது. சட்டசபையில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம்.
தற்போது சட்டசபையில் 214 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்களின் உறுதியான ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை.
என்றாலும் சட்டசபையில் கூடுதல் பலமுடன் இருக்க வேண்டும் என்பதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதன்படி கருணாஸ் உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 210 ஆக குறையும்.
அந்த நிலையில் அ.தி.மு.க., தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட 106 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமியை 110 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதால் சற்று அதிக பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியை நடத்த முடியும். எனவே நடிகர் கருணாஸ் உள்பட 4 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
அந்த 4 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்கு தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்