search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை"

    புதுவை அருகே உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

    சேதராப்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் சித்திரைபாக்கம் கிராமம் கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலித்தொழிலாளி.

    இவர், நேற்று புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்கரையில் நடை பெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு (கரும காரியம்) மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ஆலங்குப்பம் என்ற இடத்தில் வந்த போது சாலையில் மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதையடுத்து மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரது மகனுக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து முருகனின் மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை அருகே ஆடு ஏற்றி வந்த ஆம்னி வேன் மோதியதில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டயர்களை பஞ்சராக்கினர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த திருச்சிற்றம்பலம் பட்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). தச்சு தொழிலாளி. இன்று காலை தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் அகஸ்டின், ருத்ரன், வரதன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மெயின் ரோட்டில் உள்ள பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.

    பூத்துறை சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது செஞ்சி ஆட்டு சந்தையில் இருந்து ஆடுகளை ஏற்றிக் கொண்டு சுல்தான் பேட்டைக்கு வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அருள்தாஸ், அவரது மனைவி ஐஸ்வர்யா மற்றும் 3 குழந்தைகள் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதனை பார்த்ததும் ஆம்னி வேனை ஓட்டி வந்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ரகமத்துல்லா பயந்து வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன் வேன் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய ஆம்னி வேனின் 4 டயர்களையும் கத்தியால் குத்தி பஞ்சராக்கினர்.

    இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் மன உளச்சலில் இருக்கிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வை தொடர்ந்து புதுவை மாநில அரசு சார்பில் எதிர்த்து வருகிறோம்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது காரணமாக கடந்த ஆண்டு அனிதா என்ற மாணவி இறந்துவிட்டார்.

    இந்த ஆண்டு பிரதீபா என்ற மாணவி இறந்த சம்பவம் மிகவும் வருந்தகூடியது.

    ஜதராபாத் மற்றும் டெல்லியில் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு வைக்க வேண்டிய அவசியமில்லை. நீட் தேர்வில் புதுவை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


    இதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்பு தூங்கி கொண்டு இருக்கிறது.

    நீட் தேர்வினால் மாணவ-மாணவிகள் மன உளச்சலில் இருக்கிறார்கள். மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவத்தில் இடம் கிடைக்கும். ஆனால் நீட் தேர்வு என்ற போர்வையில் மருத்துவம் படிக்க கூடிய வாய்ப்பு தடுக்கப்படுவதால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    தற்கொலை செய்வதை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்க பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநில முதல்வர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு அணியை உருவாக்கி உள்ளார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

    புதுவை மாநிலத்தில் அரசு இடத்தை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடங்களை பெற்று வந்தனர். ஸ்டாலின் கோரிக்கை ஏற்று உச்சநீதிமன்றம் செல்வதாக இருந்தாலும் பிரதமரை சந்திக்க இருந்தாலும் தயாராக இருக்கிறேன்.

    நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்துவோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் கவனத்தோடு தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியை நாராயணசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. வாரியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள், 4 மாநில பிரதிநிதிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இது பல ஆண்டாக தமிழகமும், புதுவையும் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.

    உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும்கூட கர்நாடக தேர்தலைமையமாக வைத்து பா.ஜனதா மேலாண்மை வாரியம் அமைப்பதை காலதாமதம் செய்து வந்தது. அதோடு வாரியத்திற்கு அதிகாரம் இல்லாமல் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் வாரியம் அமைப்பதற்கான வரைவு திட்டத்தையும் வெளியிட்டது. இதை புதுவை அரசு கடுமையாக எதிர்த்தது. புதுவைக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் நம்பியார் முழு அதிகாரம் கொண்ட வாரியத்தை அமைக்க வேண்டும் என வாதிட்டார். இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. வாரியம் அமைத்ததால் காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்கும். எப்போது திறந்துவிட வேண்டும் என்பதை வாரியம் முடிவு செய்யும்.

    2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 சட்ட மன்ற தொகுதி, 2 எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்தால் பா.ஜனதா வீழ்ச்சி உறுதி என்பது தெளிவாகியுள்ளது. மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.

    ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்துள்ளனர். தமிழக காவல்துறை அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தேசவிரோத சக்திகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியதாக கருத்து கூறியுள்ளார். இந்த கருத்து அப்பகுதி மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த கருத்து ஏற்புடையதல்ல. இதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் பெருந்தன்மையானவர் என்றால்அவர் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. ஆதாரமில்லாமல் ரஜினி பேசுவது யாரோ அவரை பின்புறம் இருந்து இயக்குகிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். இது கவர்னரின் தனிப்பட்ட கருத்து. புதுவை அரசின் கருத்து அல்ல. மத்திய அரசில் பல பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. இதில் பல நஷ்டத்தில்தான் இயங்குகிறது. அதுபோல வங்கிகளும் நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்காக இவற்றை இழுத்து மூடி விட முடியுமா? பதவி, பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்தோடு தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். புதுவையில் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன்படி நிறுவனங்களை புனரமைப்பு செய்வது குறித்து அரசு முடிவெடுக்கும்.


    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசே பெட்ரோல் விலையை நிர்ணயித்தது. பா.ஜனதா பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்க வழி செய்தது. இதனால் நாள்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, கியாஸ் ஆகியவற்றுக்கு மானியம் அளித்தோம். சமீபத்தில் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.46 உயர்ந்துள்ளது. 4 ஆண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. இது மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்கு சமம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மத்திய பா.ஜனதா அரசு மீது கோபத்தில் உள்ளனர். நாட்டில் புதுவையில்தான் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது.

    கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழி சாலையாக மாற்றும் பணி மகாபலிபுரம் வரை நிறைவடைந்துள்ளது. மகாபலிபுரத்திலிருந்து விழுப்புரம் வரை அடுத்தகட்டமாக 4 வழி சாலை விரிவடையவுள்ளது. இந்த சாலை பல்கலைக்கழகத்தின் பின்புறம் ஊசுடு, உளவாய்க்கால், நவமால்காப்போர் வழியாக விழுப்புரத்திற்கு செல்லும். நாகையிலிருந்து விழுப்புரம் வரும் சாலையுடன் அது இணையும். இதனால் சென்னைக்கு தற்போது இரண்டரை மணி நேர பயணம் ஒன்றரைமணி நேரமாக குறையும். இந்த சாலை பல்கலைக்கழகத்திற்கு முன்புறம் வந்தால் குடியிருப்புகள் பாதிப்படையும் என்பதால் பின்புறம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின்போது துணை சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர். #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு 28-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள பட்டமேற்படிப்பு, தொழில்கல்வி பிரிவு, தொழில்கல்வி அல்லாத பாடப்பிரிவு, ஓட்டல் மேலாண்மை, பட்டயப் படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு தற்போது மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து கால்நடைமருத்துவம், பி.எஸ்.சி. செவிலியர், எம்.எம்.டி., என்ஜினீயரிங், பி.காம்., பி.ஏ, எல்எல்பி, பி.எஸ்.சி. விவசாயம், தோட்டக்கலை ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை பட்டியல் வருகிற 20-ந்தேதி வெளியிடப்படும்.

    இதில் ஆட்சேபனை இருந்தால் திருத்தம் செய்ய 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம். 22-ந்தேதி இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு 28-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வில் இடம்பெற்றவர்கள் ஜூலை 15-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ந் தேதி தொடங்கும். இதில் இடம் பெற்றவர்கள் ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    ஏ.டி.எம். மோசடி வழக்கில் எனது கணவரை போலீசார் கைது செய்ததால் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் லாஸ்பேட்டை காந்தி நகர் டேனியல் சுந்தர்சிங் இன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டேனியல் சுந்தர்சிங் மனைவிஆனந்தி உருளையன் பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது கணவர் அப்பாவி, அவரை விடுவிக்க வேண்டும், இல்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்வேன் என்று கூறினார்.

    பின்னர் ஆனந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு டேனியல் சுந்தர்சிங் புதுவை கொசக்கடை வீதியில் துணிக் கடை வைத்துள்ளார்.

    எனக்கும், அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறது. துணிக்கடையில் கிடைக்கும் வருமானமே போதுமானது.

    கடந்த 2014-ம் ஆண்டு சந்துருஜி எனது கணவருடன் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு பொருட்கள் வாங்க ஸ்வைப்பிங் மி‌ஷன் தேவைப்படுகிறது. அதற்கான கமி‌ஷன் தொகையை நான் செலுத்தி விடுகிறேன் என்று கூறினார்.

    பின்னர் நண்பர்கள் 2 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஸ்வைப்பிங் மிஷினை கேட்டு வந்தனர். அவர்கள் முகவரியை வாங்கி வைத்து விட்டு ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்து அனுப்பினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக ரூ.58 லட்சம் வரை ஸ்வைப் பிங் செய்துள்ளனர். இதனால் எனது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனது கணவர் கணக்கில் வந்த ரூ. 58 லட்சத்தையும் சந்துருஜியிடம் கொடுத்து விட்டார்.

    அப்போது அவர்கள் 8 சதவீதம் கமி‌ஷன் கொடுப்பதாக கூறினார்கள். அதை அவர் ஏற்கவில்லை. நீங்கள சட்ட விரோதமாக ஏதோ செய்கிறீர்கள். அதனால் எனது ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு சந்துருஜியும்,அவரது ஆட்களும் எனது கணவரை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர்.

    சில நாட்கள் கழித்து ஸ்வைப்பிங் மிஷின் கொரியரில் எங்கள் வீட்டுக்கு வந்தது. அதனை எனது கணவர் சம்பந்தப்பட்ட வங்கியில் சரண்டர் செய்துள்ளார். அப்போது உங்கள் ரூ. 58 லட்சம் வரை ஸ்வைப்பிங் செய்யப்பட்டதால் அதற்கான வரி ரூ. 12 லட்சம் செலுத்தி உள்ளோம். அதற்கான ரசீது எங்களிடம் இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உங்கள் கணவர் ஏ.டி.எம். பண மோசடியில் சிக்கி உள்ளார். அவரை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும்.

    இதையடுத்து நானும், எனது உறவினர்களும் சேர்ந்து நகைகளை அடகு வைத்து ரூ. 95 ஆயிரம் கொடுத்தோம். அதற்கான ரசீது எங்களிடம் இருக்கிறது. ஆனால், இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் எனது கணவரை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். நாங்கள் கொடுத்த ரூ. 95 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 75 ஆயிரம் மீட்டதாக கூறி இருந்தனர்.

    இது திட்டமிட்ட சதி. ஏடி.எம். மோசடிக்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. முக்கிய குற்றவாளியான சந்துருஜியை கைது செய்யாமல் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவரை கைது செய்து இருக்கிறார்கள்.

    இதனால் எனது கணவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் எனது கணவருடன் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தகராறில் மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் செண்பக ராமன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). ஆசாரி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (47).

    இவர்களுக்கு மகாலட்சுமி, தமிழ்செல்வி என்ற மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனி இடங்களில் வசித்து வருகிறார்கள்.

    ஆறுமுகம்- சரஸ்வதி மட்டும் இந்த வீட்டில் வசித்து வந்தனர். சமீப காலமாக ஆறுமுகம் வேலைக்கு செல்வதில்லை. சரஸ்வதி லாஸ்பேட்டையில் உள்ள கல்வித்துறை சமையல் கூடத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டு வேலைகளுக்கும் சென்று வருவார்.

    ஆறுமுகம் வேலைக்கு செல்லாத அதே நேரத்தில் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

    நேற்று இரவு கணவன் - மனைவி இருவரும் வீட்டில் தூங்கினார்கள். நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் உருட்டுக்கட்டையால் மனைவி சரஸ்வதியை கடுமையாக தாக்கினார்.

    தலையின் பின்பக்கம் சரமாரியாக அடி விழுந்தது. இதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த இடத்திலேயே மயங்கி விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.

    மனைவி இறந்து விட்டதை அறிந்த ஆறுமுகம் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இந்த கொலை நடந்தது யாருக்கும் தெரியாது.

    இன்று காலை சரஸ்வதியின் மகள் தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சரஸ்வதி பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் ஆகியோர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தலைமறைவாகி விட்ட ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுவையில் வடமாநில பெண்ணிடம் நூதன முறையில் ரூ.12 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்தவர் பிங்கி மசூந்தா (வயது 40). இவர் வைத்திக்குப்பம் பகுதியில் அரவிந்தர் அவென்யூ நிவாசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரிடம் பேஸ்-புக் மூலம் மிக்கேல் ஆண்டனி என்பவர் பழக்கம் ஆனார். இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதாக பிங்கி மசூந்தாவிடம் கூறியதின் அடிப்படையில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரத்து 800-ஐ மிக்கேல் ஆண்டனியின் வங்கி கணக்கில் பிங்கி மசூந்தா செலுத்தினார்.

    ஆனால், பல நாட்கள் ஆகியும் பொருட்களை மிக்கேல் ஆண்டனி டெலி வரி செய்யவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த பிங்கி மசூந்தா இதுகுறித்து சோலைநகர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நூதன மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கவர்னர் கிரண்பேடியின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். #congress #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 4 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சி தவறி உள்ளது. விலைவாசி உயர்ந்து பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

    அதோடு பொது மக்களுக்கு பாதுகாப்பின்மையும் உருவாகி உள்ளது. இதனை கண்டித்து புதுவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

    பெட்ரோல்- டீசல் விலையில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் விளைவாக உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை நாட்டில் உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு மக்களுக்கு பெரிய துரோகத்தை இழைத்துள்ளது.

    புதுவை மாகி பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது இது கண்டிக்கத்தக்கது.

    பதவியில் இருக்கும் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டு காலம் முடிகிறது. 2 ஆண்டு காலம் பணி முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் என கிரண்பேடி ஏற்கனவே கூறியுள்ளார்.


    எனவே, அக்கூற்றை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கிரண்பேடியின் பங்கு 1 சதவீதம் கூட இல்லை.

    புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் சிறிய மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுவை 5-வது இடம் பிடித்துள்ளது.

    சுகாதாரத்துறையில் அனைவருக்கும் மருத்துவம் என புதிய திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக தொடங்கி உள்ளோம். புதுவை மாநில வளர்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய குழு அமைத்துள்ளோம். இந்த குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆட்சியின் ரூ.500 கோடி கடனை அடைத்துள்ளோம். இதுவரை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாகவே இருந்துள்ளார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின் போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். #congress #Narayanasamy #Kiranbedi
    புதுவையில் பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.

    அதே போல் புதுவையிலும் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

    அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதுவையில் கடைகள் நிறைந்து காணப்படும் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மி‌ஷன் வீதி, சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, பாரதி வீதி, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, எஸ்.பி. பட்டேல் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, விழுப்புரம் சாலை, வழுதாவூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    அதேபோல் பெரிய மார்க்கெட், முத்தியால் பேட்டை மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், முதலியார் பேட்டை மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன.

    ஒரு சில இடங்களில் மட்டும் பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. அனைத்து கடைகளையும் மூடும்படி வற்புறுத்தி தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்றனர். இதனால் திறந்து இருந்த ஒன்றிரண்டு சிறு, சிறு கடைகளும் மூடப்பட்டன.

    காமராஜர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இதை பார்த்த தி.மு.க.வினர் பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதன் பிறகு அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

    இதே போல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.

    புதுவையில் இன்று முற்றிலும் பஸ்கள் ஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவே நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து புதுவை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படும். இன்று அவையும் நிறுத்தப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் எதுவுமே புதுவைக்கு வரவில்லை.

    அதே போல் புதுவையில் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியாம் மிகவும் சிரமப்பட்டனர். முழு அடைப்பையொட்டி அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பினால் புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையிலும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையில் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் வன்மையாக கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து புதுவையிலும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவை சுதேசி மில் அருகே நாளை அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசையும் இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

    * தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) புதுவை சுதேசி மில் அருகே காலை 10 மணிக்கு அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. #ThoothukudiFiring
    ×