search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கப்பட்டது.
    • கணித செயல்பாடுகள் உள்பட பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி இணைந்து நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கப்பட்டது.

    பயிற்சியில் திருத்து றைப்பூண்டி வட்டார வள மைய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை தாங்கினார்.

    பயிற்சியில் ஆசிரியர் பாஸ்கர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் காகித மடிப்புகள், கணித செயல்பாடுகள் உள்பட பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

    விழாவில் கருத்தாளர்களாக வானவில் மன்றத்தை சேர்ந்த நித்யா, தமிழ் மொழி ஆகியோர் செயல்பட்டனர். இதில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் தேசிங்கு ராஜபுரம் ரேவதி, பாமணி பாலசுந்தரி, குணசீலி அருள்மணி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர்.

    • ஊர்வலத்தில் காளி வேடமணிந்து 5 அடி வேல் குத்தி வந்தது அனைவரையும் கவர்ந்த்து.
    • நிறைவாக மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நடைபெற்றது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பாக்கிய நகர் மாரியம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் பறவை காவடி பூங்குண்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் அக்கினி சட்டி, பால் குடத்துடன் ஊர்வலம் நடத்தி அழகு குத்தி பறவை காவடியுடன் கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் காளி வேடமணிந்து 5 அடி வேல் குத்தி வந்தது அனைவரையும் கவர்ந்த்து.

    மாலையில் பொது மேடையில் உள்ளூர் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நடைபெற்றது.

    • 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு ஊர்வலமாக சென்றனர்.
    • கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் சாட்டை வேப்பிலை எடுத்தும் சென்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

    இக்கோவில் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு ஊர்வலம், பூங்கரம் எடுத்தலும் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் அம்மனுக்கு ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் சாட்டை வேப்பிலை எடுத்தும் சென்றனர்.மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்ன தானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் விழா.
    • இரு தரப்பும் இணைந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இன்றி விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர்.

    இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.

    கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

    அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    • சித்திரா பவுர்ணமி திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    மதுைர மாவட்டம் சோழவந்தானி உள்ள பிரசித்தி பெற்ற ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரா பவுர்ணமி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜெனக நாராயண பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் அலங்காரத்தில் இறங்குவார்.

    அதன்படி கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 2-ம் நாள் சோழவந்தான் இரட்டை அக்கிர காரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பு உள்ள மண்டபடியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது.

    3-ம் நாள் (7-ந்தேதி) சோழவந்தான் முதலியார்கோட்டை கிராமத்து சார்பாக பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு பால், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த நாணல்திடல் மாரியம்மன் கோயிலில் கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது.

    நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு, பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவையொட்டி காருடையான்பள்ளம் வீரசோழன் ஆற்றங்கரை யிலிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் மற்றும் காவடிகளை வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் வந்து கோயிலை அடைந்தனர்.

    அப்போது கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டம் எதிரே மாரியம்மன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்த ருளிய அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.

    இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சேனைத் தலைவர் மகாஜன சங்க தலைவர் முனுசாமி, நாட்டாண்மை இளங்கோவன் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    • அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே ஜோதி நகரில் வள்ளலார் கோவிலில் சித்திரை பௌர்ணமி திருவிழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் காலை 6 மணி அளவில் அகவல் பாராயணம், திருவிளக்கு பூஜை, சன்மார்க்க கொடியேற்றுதல், அருட்பா பாடல்கள் மற்றும் சன்மார்க்க சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வடலூர் மாநில தலைமைச் சங்க பொருளாளர் நஞ்சுண்டன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரியை சேர்ந்த சிவகுமார் தலைமை தாங்கினார். அரசு வழக்கறிஞர் முருகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநிலத் தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

    மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல் சொற்பொழிவு ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் மாரண்டஅள்ளி சன்மார்க்க சங்க துரைசாமி நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாரண்டஅள்ளி ஜோதி நகரை சேர்ந்த வள்ளலார் கோவில் நிர்வாகிகள் நஞ்சுண்டன் மாரியம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது.
    • பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெறுவதை குறித்து இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது. பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெற இருப்பதால் கோவில் மூலவர் சிலை ஈஸ்வரகண்டநல்லூரில் உள்ளது. இது சம்பந்தமாக 5-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததால் பெரியப்பட்டு கிராம பொதுமக்கள் கடலூர் உளுந்தூர்பேட்டை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் இருந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிடப் பட்டது. இருந்தபோதும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    முதல் நாள் திருவிழா சிங்கராஜாகோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 2-ம் நாள் திருவிழா சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 3-ம் நாள் திருவிழா பிள்ளைமார் சமூகத்தார் சார்பிலும், 4-ம் நாள் திருவிழா புதுப்பாளை யம் ஆசாரியர்கள் சமூகத் தார் சார்பிலும், 5-ம் நாள் திருவிழா பூபால்ராஜாபட்டி ஆசாரியர்கள் சமூகத்தார் சார்பிலும், 6-ம் நாள் திருவிழா மடத்துப்பட்டி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தார் சார்பிலும் நடந்தது.

    7-ம் நாள் திருவிழா புதுப்பாளையம் தேவர்கள் சமூகத்தார் ஆண்டதம்மன் கோவில் தெரு நாட்டாமை சார்பிலும், 8-ம் நாள் திருவிழா துரைச்சாமிபுரம் வணிக வைசியர்கள் சமூகத்தார் சார்பிலும், 9-ம் நாள் திருவிழா சாலியர்கள் சமூகத்தார் சார்பிலும் நடைபெற்றது.

    அம்மன் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூதவாகனம், தண்டியல் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம் போன்ற சப்பரங்க ளில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். 10-ம் திருவிழாவில் நாராயண ராஜா வகையறாக்கள் சார்பில் மேற்படியாளர்கள் மஞ்சள் பட்டு, சாலியர்கள் மஞ்சள் பட்டுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காப்பு கட்டிய குழந்தைகள் பெண்கள் உள்பட 5080 பக்தர்கள் அணிவகுத்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா தலைமையில் அறங்காவலர் குழுவினர் ரமேஷ்ராஜா, ராமராஜ் ராஜா, ஜெயக் குமார்ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் செய்தி ருந்தனர். டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.

    பள்ளிபாளையம்:

    கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.

    இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) புவனேஸ்வரி, பாதரை பள்ளி தலைமை ஆசிரியர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்றம் கருத்தாளர் குணசேகர் மற்றும் கண்டிப்புதூர் பள்ளியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள கலந்து கொண்டனர்.

    இதில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கற்பனையும் கைத்திறனும், சமையலறையில் அறிவியல் மற்றும் புதிர் கணக்குகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் அளிக்க ப்பட்டது.

    • அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
    • வானவில் மன்றம் சார்பில் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம், பள்ளி கல்வித்துறையின், அறிவியல் இயக்கம் வானவில் மன்றம் சார்பில் கிருஷ்ணராயபுரம் பகவதி அம்மன் கோவில் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. வட்டார தொடக்கக்கல்வி அலுவலர்கள் செந்தில்குமாரி, மனோகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சி எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்ற தலைப்பில் தொடர்ந்து 15 நாள் நடைபெற உள்ளது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு அறிவியலுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பினை குறித்து விளக்கப்படுகிறது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மல்லிகா, சுமதி , ஆசிரியர் பயிற்றுனர் கவிதா, செந்தாமரைச்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் ரேகா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • நாளை தேரோட்டம் நடக்கிறது

    திருச்சி:

    திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா நேற்று (புதன்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பூச்செரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாளை (5-ந்தேதி, வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம்.கே.காலனி வழியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் உலகநாதபுரம் அம்மன் கோவிலை நோக்கி வீதி உலா வருகிறது. இதில் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

    நாளை மறுநாள் (6-ந்தேதி) காலை 7 மணிக்கு காவேரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னிச்சட்டி எடுத்து வரப்படுகிறது. இதையடுத்து காலை 11 மணிக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடக்கிறது. 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு 2000 பேருக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் கிடா வெட்டு பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் அருகில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை முத்து மாரியம்மன் கோவில் வழிபடுவோர் நலச்சங்க தலைவர் ரெங்கராஜ் தலைமையில் பொறுப்பாளர்கள் சண்முகம், மதியழகன், பால்ராஜ், ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    ×