search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரீத்"

    எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியானது.
    எம் 10 புரொடக்க்ஷன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரித்து ஜெகதீசன் சுபு இயக்கி விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’.

    இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது.



    தற்போது இப்பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் ஜூன் மாதம் முதல் வெளியாக இருக்கிறது.
    ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படக்குழுவினரின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
    விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ஆலங்குருவிகளா என்ற பாடல் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் இசையை மே 17ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    வேலூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி கஸ்பா, ஆர்.என்.பாளையம் ஈத்கா மைதானங்களில் ஏராளமான இஸ்லாயமிர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    வேலுரில் பக்ரீத் சிறப்பு தொழுகை

    வேலூர்:

    வேலூரில் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.

    செட்டியப்பனூர், வளையாம்பட்டு, நேதாஜிநகர், ஜாப்ராபாத் ஆகிய ஈத்கா மைதானங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைநடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பரிமாறிக் கொண்டனர்.

    இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியார்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். வாணியம்பாடி பெரியப்பேட்டை மசூதியில் இஸ்லாமியா பெண்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    மெளலவி அப்துர் ரஹமான், முப்தி இக்பால், வாணியம்பாடி வாணிடெக் நிர்வாக இயக்குனர் படேல் முகமது யூசூப், தமிழக காங்கிரஸ சிறுபான்மை துறை மாநில தலைவர் ஜெ.அஸ்லம்பாஷா, உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல், திருவண்ணாமலை, ஆம்பூர், ஆலங்காயம், ஜாப்ராபாத், உதயேந்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    கவுரவம், அகந்தையை விட்டுவிட்டு கருணை, பெருந்தன்மையுடன் நடக்க தீர்மானிக்க வேண்டும் என தமிழக கவர்னர் தனது பக்ரீத் வாழ்த்தை தெரிவித்துள்ளார். #TamilnaduGovernor #BanwarilalPurohit #Bakrid
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் நமது அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை கூறுகிறேன்.

    நமக்கு இறைவன் தந்த நன்மைகளை ஏழைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்த பண்டிகை கற்றுத்தருகிறது. நம்மிடையே உள்ள ஈகோ என்ற கவுரவம், அகந்தை ஆகியவற்றை விட்டுவிட்டு, பிரார்த்தனை பாதையில் சென்று அனைவருடனும் கருணை மற்றும் பெருந்தன்மையுடன் நடக்க வேண்டும் என்று இந்த புனிதத் திருநாளில் நாம் தீர்மானிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Governor #BanwarilalPurohit  #Bakrid

    பக்ரீத் மற்றும் முகூர்த்தநாள் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குறைந்த அளவு காய்கறிகளே அனுப்பி வைக்கப்பட்டன. தினசரி 80 லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகள் செல்லும். ஆனால் கடந்த ஒரு வாரமாக 25 லாரிகளில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக காய்கறிகளின் ஆர்டர்களும் குறைந்தது. இதனால் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் கிடைத்த விலைக்கு காய்கறிகளை விற்று சென்றனர்.

    தற்போது கேரளாவில் மழை முற்றிலும் நின்றுவிட்டதால் நேற்று முதல் வழக்கம்போல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் நாளை பக்ரீத் பண்டிகை வருவதாலும் அடுத்து 2 நாட்கள் முகூர்த்த நாளாக இருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது.

    எனவே கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த காய்கறிகளுக்கும் கூடுதல் விலை கிடைத்துள்ளது.

    கிலோ ரூ.17-க்கு விற்ற வெண்டை ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45, பல்லாரி ரூ.30, தேங்காய் ரூ.45, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.120, கத்தரிக்காய் ஒரு பை ரூ.450, தக்காளி ஒரு பெட்டி ரூ.150, புதினா ரூ.50, மல்லி ரூ.30, எலுமிச்சை ரூ.30, பீட்ரூட் ரூ.15, பீன்ஸ் ரூ.40, முருங்கைக்காய் ரூ.18, பச்சை மிளகாய் ரூ.50 என கொள்முதல் செய்யப்பட்டது.

    பெரும்பாலான காய்கறிகளின் விலை 2 மடங்கு அதிகரித்தது. இதனால் விவசாயிகளிடமும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு நிலமை சீரடைந்துள்ளதால் கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தை அடுத்து விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘பக்ரீத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். #Vikranth #Bakrid
    விக்ராந்த் நடிப்பில் தற்போது ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மிஷ்கின், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தை அடுத்து சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு படத்தில் நடிக்கிறார் விக்ராந்த். 

    இந்த புதிய படத்திற்கு ‘பக்ரீத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பக்ரீத் திருநாள் முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.



    ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இதில் விக்ராந்த்திற்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
    தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.#Bakrid
    சென்னை:

    பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இறைவனுக்கு அஞ்சிய தூய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை இப்ராஹிம் அவர்கள் இறைவன் தனக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட முன்வந்த உன்னத நாளை நினைவுகூறும் நாள் தான் “பக்ரீத்” எனப்படும் தியாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறைவனை அஞ்சி, அவரது கட்டளைக்கு ஏற்ப வாழ்வோர் என்றென்றும் நிறை வாழ்வு பெற்றிருப்பார்கள் என்பது தான் இத்திருநாள் நமக்குக் கூறும் பாடம். போற்றுதலுக்குரிய இப்பெருநாளில், இறைவன் திருவுள்ளத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் வாழ உறுதி ஏற்போம்.

    அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தியாகத் திருநாளாம் “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    மனிதருக்கு மனிதர் சுய தேவைகளை குறைத்து, சிறு தியாகங்கள் செய்து, பிறருக்கு உதவி, மத, மொழி, இனப் பாகுபாடுகளை அகற்றி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு என்று நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்ற இத்தியாகத் திருநாளில் சூளுரைப்போம். மதநல்லிணக்கம் ஒற்றுமை காப்போம். சிறுபான்மை மக்களின் நலன் காத்திட செயல்படுவோம்.

    இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தியாகத் திருநாளான பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரீத் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது.

    கேரளத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதில் கூட இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஈகைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பக்ரீத் திருநாளை கொண்டாடாமல் அதற்கான செலவுக்காக வைத்திருந்த தொகையை கேரளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கி பக்ரீத் திருநாள் வலியுறுத்தும் தத்துவங்களுக்கு வலிமை சேர்த்துள்ளனர்.

    மதசார்பற்ற தன்மையின் பாதுகாப்பில்தான் அனைத்து சமய மக்களின் நல்லிணக்கமும், அமைதி வாழ்வும் நிலைநிறுத்தப்படும். அண்மைக் காலமாக மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர் கொண்டு முறியடிக்க இத்திருநாளில் உறுதி கொள்வோம்.

    தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

    விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    ‘குர்பானி’ கொடுக்கும் இந்நாளில் ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை இஸ்லாமியர் நிறைவேற்றுவதுடன் 5 வகை கடமைகளுள் ஒன்றான ‘ஹஜ்’ என்னும் புனிதப் பயணம் செல்லும் கடமையையும் இந்தப் புனித நாளில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    இஸ்லாமிய சமுதாயத்தினர் சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையோடு பழகுவது சாலச்சிறந்தது.

    நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பக்ரீத் பண்டிகையும் உந்துதலாக இருப்பது இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

    இறைப்பற்றிலும், கொண்ட கொள்கையிலும் உறுதியாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பது போற்றுதலுக்குரியது. எனவே பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டும்.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த்:-

    இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டுமென இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன். மனித உறவுகள் உன்னதம் பெற்றிட அன்பை விதைப்போம். பல ஆண்டு காலமாக நான் தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத் திருநாளை கொண்டாடி வருகிறேன்.

    அதே போல் இந்த ஆண்டு கோயம்பேடு தலைமை கழகத்தில் நாளை மாலை 5 மணியளவில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்களோடு குர்பானி வழங்கி பக்ரீத்தை கொண்டாட உள்ளேன். இதேபோல் தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளும்,‌ தொண்டர்களும் குர்பானி வழங்கி “இயன்றதை செய்வோம், இல்லாதவற்கே” என்ற கொள்கையோடு பக்ரீத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.

    நமது நாட்டு மக்களிடையே சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. கேரளா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த் திப்போமாக. துயருற்று நிற்கும் அம்மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன் வருவோமாக.

    உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை மேற்கொள்ளுவதுடன், விலங்குகளை இறைவனுக்கு பலியிட்டு பின்னர் அதில் ஒரு பகுதியை தங்களுக்கும், மற்றொரு பகுதியை உறவினர், நண்பர்கள், அண்டை அயலார் மற்றும் ஏழை எளியோர்க்கு அளிப்பது வழக்கமாகும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிப்பதே ஈகை. இந்த பக்ரீத் ஈகை திருநாள் என்றே இஸ்லாமியர்களால் அழைக்கப்படுகின்றது. ஈகை செய்வதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனின் பேரன்பை பெறலாம் என்பது இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கையாகும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார்:-

    "தியாகத்திருநாள்" எனப்போற்றப்படும் இந்தபுனித பக்ரீத் பண்டிகை தினத்தில் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

    நபிகள் நாயகத்தின் போதனையை மனதில் கொண்டு உலகெங்கும் சமத்துவம் நிலைத்திட, சகோதரத்துவம் தழைத்திட ஒற்றுமையுணர்வுடன் வாழ்வோம்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #Bakrid
    தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். #DMK #MKStalin #Bakrid
    சென்னை:

    தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரது வாழ்விலும் எல்லா வளமும், நலமும் பெருகிட ஈகைத்திருநாள் எனப்படும் பக்ரீத் பெருநாளையொட்டி எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    தி.மு.க. ஆட்சியிலிருந்த நேரத்தில் இஸ்லாமிய பெரு மக்களுக்கு பல சாதனைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது; எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதெல்லாம் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்திருக்கிறது. அந்தப் பணியை தி.மு.க. என்றைக்கும் தொடரும் என்று தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில், ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை பக்ரீத் பெருநாளில் ஏழை எளியோரின் இன்னல் தீர மனமுவந்து வழங்கி மகிழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மீண்டும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #Bakrid
    பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். #Bakrid #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “பக்ரீத்” வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இப்பக்ரீத் திருநாள் ஆகும்.

    இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

    இந்த இனிய நாளில், தியாகத்தின் சிறப்பினை மனதிலே நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அறவழியைப் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Bakrid #TNCM #EdappadiPalaniswami
    ×