search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • முதல்வர் குறித்து அவதூறு பேச்சு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதியப்பட்டது.
    • சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளியில் நடப்பாண்டு ஜன.22-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா நடந்தது. அதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சப்-இன்ஸபெக்டர் நாகைய்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
    • அம்மா உணவகம் அருகே கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை கமிஷனர் தாணு மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின் பேரில் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாஜலம், சிந்து முருகன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக குறைந்த செலவில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் விதமாக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.

    தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த உணவகங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தரமற்ற உணவுகள் வழங்குகின்றனர். பாளை மண்டலத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்பவர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே மனித கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். உடனடியாக இந்த கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், நெல்லை பகுதி துணைச் செயலாளர் மாரிசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பாளை ரமேஷ், பாறையடி மணி, சம்சுல்தான், பக்கீர் மைதீன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றியுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விளாங்குடி 1-வது வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. வட்ட செயலாளர் மலைச்சாமி தனது குடும்ப உறுப்பினர்கள் 30 பேருடன் வந்தார். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சினேகபிரியா மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மலைச்சாமி மற்றும் அவரது குடும்பத்தி னரை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மலைச்சாமி கூறுகையில், விளாங்குடி பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். மேலும் நாங்கள் வளர்த்து வரும் மரங்கள் மற்றும் இடத்திற்கு உரிய வரி செலுத்தி வருகிறேன். ஆனால் தற்போது நீர்நிலை தொட்டி கட்டுவதாக கூறி இடத்தை கையகப்படுத்தி மரத்தையும் வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

    இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சம்பவத்தன்று போலீசார் எனது வீட்டுக்கு வந்து வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி யுள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றார்.

    • பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • ஆய்வின்போது பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆலோசனை குழு அமைத்து நிர்வாகிகளை சந்திப்பது, பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதன்பேரில் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குருக்கள்பட்டி செல்வம், இளைஞர் அணி நிர்வாகி மேல இலந்தைக்குளம் செந்தில் குமார், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக முத்துக்குமார் நியமனம்
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ஆரல்வாய்மொழி :

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் குமரி சட்ட மன்றத்தொகுதி உறுப்பின ருமான தளவாய்சுந்தரம் பரிந்துரையின்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான முத்துக்குமாரை நியமனம் செய்தார். இதையடுத்து புதியதாக நியமனம் செய்யப்பட்ட முத்துக்குமார் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, பெருமாள்புரம் காமராஜர் சிலை, வடக்கூர் வ.உ.சி.சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் ஆரல்வாய்மொழி நகர செயலாளராக அறி விக்கப்பட்டுள்ள சுடலை யாண்டி, பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பால கிருஷ்ணன், கவுன்சிலர்கள் மோகன், மணி, கிளை செயலாளர்கள் அய்யப்பன், ராமலிங்கம், வக்கீல் லட்சுமி நாராயணன், இணை செயலாளர் பேச்சியம்மாள், தொழிற்சங்கம் மாசாணம், கச்சேரி நாகராஜன், சிவ சங்கரன், எபநேசர், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட் டார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமினம் செய்துள்ளார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் நியமிக்கப்பட்டுள் ளார். அண்ணா தொழிற் சங்க செயலாளர் வைகுண்ட மணி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் பா லமுருகன், சிறுபான்மை யினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ரசாக், அமைப்பு சாரா ஓட்டுநர் மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சந்திரன், கலை பிரிவு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மணி கண்டன் ஆகியோர் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளராக முத்துக்குமார், அகஸ்தீஸ்வ ரம் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஜெஸீம், தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளனர். பொதுக்குழு உறுப்பி னராக மகாராஜா பிள்ளை, ராஜாக்கமங்கலம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளராக சிவ கந்தன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயலாளராக சுடலையாண்டி, தென்தா மரைகுளம் பேரூராட்சி செயலாளராக டானியல், மாநில மகளிர் அணி துணை செயலாளராக ராணி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் தாணு பிள்ளை, மாநில இலக்கிய அணி இணை செயலாளராக சந்துரு என்ற ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட் டுள்ளனர். நாகர்கோவில் மாநக ராட்சி வடக்கு பகுதி செய லாளராக ஸ்ரீலிஜா நிய மிக்கப்பட்டுள்ளார். வடக்கு பகுதியாளராக நியமிக்கப் பட்டுள்ள ஸ்ரீலிஜா தமிழ கத்திலேயே அ.தி.மு.க.வில் முதல் பகுதி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.

    தென்காசி:

    அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி தொழிலதிபரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றாக இணைந்து கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதசுவாமி கோவிலின் பூரண கும்பம் மரியாதை உடன் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.

    • மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • குளச்சல் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

    குளச்சல் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குளச்சல் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், குளச்சல் தொகுதி முன்னாள் செயலாளரும், குளச்சல் நகராட்சி கவுன்சிலருமான ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், ஆனக்குழி சதீஸ், நகர துணைச்செயலாளர் செர்பா, நகர ஜெ.பேரவை செயலாளர் வினோத், முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார்
    • அண்ணாமலையை நீக்குமாறும் இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் இதற்கு காரணம் என அக்கட்சியில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சித்தாந்த தலைவர்களில் முக்கியமானவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை குறித்து கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

    இது மட்டுமல்லாமல், "மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி" எனும் அ.தி.மு.க.வின் முழக்கத்தையும் அண்ணாமலை ஏற்க மறுத்தார். 

    இதை தொடர்ந்து அண்ணாமலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை தலைமை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், அக்கூட்டணி முறிந்ததாகவும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

    மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பற்றியும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

    இந்த செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட்கிழமை) கழகப் பொது செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சி தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என தீர்மானம் இயற்றி அ.தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்களை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி" என்பதற்கு பதிலாக "பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி" என வாசகங்கள் இடம் பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கையில் ரெயில் மறியல் போராட்டம் போராட்டம் என்று எப்படி கூற முடியும்? சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது விரைவு ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல ஏன் நடவ டிக்கை எடுக்க வில்லை?

    அனைத்து விரைவு ெரயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவ கங்கை வழியாக ராமேசு வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் ெரயில்வே மண்டல மேலா ளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட் டம் நடத்துவோம்.

    அ.தி.மு.க. கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது, இண்டியா கூட்டணி சார் பில் நடத்தப்படுவதாக தெரிவித்து விட்டு அனைத்து கட்சி சார்பில் போராட்டம் என்று நோட்டீஸ் கொடுத் துள்ளனர். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
    • கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் நாடார் திருமண மண்டபத்தில் ஆலங்குளம் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கிளை செயலாளர்களுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலங்குளம் நகர செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு வாக்காளர்கள் பெயர் அடங்கிய பூத்கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இருளப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மப்பாண்டி, ஆலங்குளம் நகர துணை செயலாளர் சாலமோன்ராஜா, ராமலிங்கம், புதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பால் விநாயகம், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வீரபாண்டியன், பூலாங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிக்சன், தங்கசாமி முத்தையா, தனபால், குமரன், செந்தில் முருகன். பெரியபாண்டியன், முத்துராஜ், ஐசக் சேகர், சத்தியராஜ் உள்பட அ.தி.மு.க. நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • விழாவில் அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து கொடுக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகியும், தொழில் அதிபருமான அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊத்துமலை இளைய ஜமீன் குமரேசராஜா, பழனிச்சாமி, பூலோகராஜ், சுபிக்ஷா கருப்பசாமி, பண்பொழி கவுன்சிலர் கணேசன், பேச்சிமுத்து ஆனந்த், செல்வராஜ் மற்றும் பால அருணாசலபுரம் தேவேந்திர குல வேளாளர் நாட்டாண்மைகள் மாதவன், மகேஷ் மற்றும் கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல்ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன், அரவிந்த் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×