search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106312"

    • 48 பள்ளிகளிலிருந்து 326 ஆய்வுக்கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.
    • 33 ஆய்வுக்கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டக்கிளை சார்பில் 30-வது மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இயக்கத்தின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.

    டி.என்.எஸ்.எப். மாநில த்துணைத்தலைவர் மற்றும் என்.சி.எஸ்.சி மாநில ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சுகுமாரன் என்.சி.எஸ்.சி தொடர்பாக அறிமுக உரையாற்றினார் .

    பெரியார் பல்க லைக்கழகப் பதிவாளர் பேராசி ரியர் ஸ்ரீவித்யா, பல்கலைக்கழக முதன்மையர் பேராசிரியர் விஜயலெட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஸ்டீபன் நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வாழங்கினர்.

    ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு தொடர்பான நடுவர்குழுவிற்கு என்.சி.எஸ்.சி மாவட்டஒருங்கி ணைப்பாளர் பேராசிரி யர் மாரியப்பன் மற்றும் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்ம னோகர். ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து சர்.சீ வி.ராமன் துளிர் இல்லம்.

    அரசு மற்றும் மெட்ரிக் , சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளிட்ட 48 பள்ளிகளிலிருந்து 326 ஆய்வுக்கட்டுரைகள் மாணவர்களால் சமர்ப்பிக்க ப்பட்டன.

    இதிலிருந்து 33 ஆய்வுக்கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

    பள்ளிகளிலிருந்து மாணவ ர்களுடன்வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்துகொ ண்டனர்.

    மேலும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்க ட்டுரைகள் சமர்ப்பித்த பள்ளி மாணவர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் திருமலை சமுத்திரம் கிளை மேலாளர்.

    சிவக்குமார் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், அரியலூர் மாவட்ட செயலர் ஞானசேகர், திருவாரூர் மாவட்டத் தலைவர் பொன்முடி, தஞ்சாவூர் மாவட்ட துணைத்தலைவர்கள் முருகானந்தம், தியாகராஜன், அருணாதேவி, மாவட்ட துணை செயலர் மஞ்சுளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கும்பகோணம் செந்தில்குமார், பூஞ்சேரி முருகானந்தம், திருமகள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கமலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    விடைத்தாள் திருத்துவதில் முறைகேடாக மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளதையடுத்து 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினார்கள்.

    இதில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் விடைத்தாள்களில் அசல் மதிப்பெண்களுக்கு பதிலாக முறைகேடாக தேர்ச்சிக்குரிய 50 மதிப்பெண்கள் போடப்பட்டு இருந்ததை தேர்வுத்துறை கண்டுபிடித்தது. அதன்பிறகு விடைத்தாள்கள் முழுமையாக மீண்டும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்திருந்தது.

    இதன் அடிப்படையில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்த 188 ஆசிரியர்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் 112 பேர் என 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    1 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடவில்லை. வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தபால் ஓட்டு போடும் வசதி உள்ளது. துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலில் வாக்களிக்க வேண்டும்.

    கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியிலும் தபால் ஓட்டை போடலாம் அல்லது எந்த வாக்குச்சாவடியில் பணியில் உள்ளாரோ அந்த பூத்திலும் கடைசியாக வாக்களிக்கலாம். இப்படி ஓட்டு போட 3 விதமான வசதிகள் உள்ளன.

    இந்த தேர்தலில் 1 லட்சம் போலீசார் தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் 2 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகள் தான் பதிவாகி உள்ளது.

    இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் வர வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடாமல் உள்ளனர். வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர்.

    இவர்களுக்கு 23-ந்தேதி காலை 8 மணி வரை ஓட்டு போட கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்னும் ஓட்டு போடாதது ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது.

    இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி கொடுக்கும் போதே தபால் ஓட்டு போடுவதற்கான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. எந்த வாக்குச் சாவடியில் பணியாற்ற செல்கிறாரோ அங்கேயே தனது வாக்கை பதிவு செய்யலாம் என்ற விவரத்தையும் சொல்லி கொடுத்துள்ளோம்.

    சிலர் வாக்குச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலிலும் வாக்களிக்கும் முறையை எடுத்து கூறி உள்ளோம்.

    சில ஊழியர்கள் வாக்குச் சாவடியில் பணியாற்றாமல் பறக்கும் படையில் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் ‘பூத்’துக்கு செல்ல முடியாததால் தபால் மூலம் தான் வாக்களிக்க இயலும். அவர்களுக்கும் விதிமுறைகளை எடுத்து சொல்லி உள்ளோம்.

    ஆனாலும் சிலர் வாக்களிக்க முன் வராமல் இருப்பது அவர்களது மனநிலையை பொருத்த முடிவாகும்.

    தபால் ஓட்டுகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக துணை ஆட்சியர் மேற்பார்வையில் தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தபால் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் என்று தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தி வந்தாலும் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் வாக்களித்தார்களா? என்பதை கண்டறிய தேவையான முயற்சி எடுக்காதது உண்மைதான்.

    சில அரசு ஊழியர்களுக்கு சொந்த ஊரில் ஓட்டு இருக்கும். பணிபுரியும் இடம் வேறொரு இடமாக இருக்கும். இவர்கள் ஓட்டு போட சொந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று வர வேண்டும் அல்லது அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வாக்களிக்க வேண்டும்.

    இதற்காக லீவு போட்டு சென்று வர வேண்டுமா, என நினைத்து சிலர் வாக்களிக்காமல் இருக்கலாம்.

    ஆனாலும் தினமும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்துக்கும் தினமும் தபால் ஓட்டு வந்து கொண்டிருக்கிறது. 23-ந்தேதி தான் எவ்வளவு தபால் ஓட்டுகள் வந்துள்ளது. எத்தனை பேர் ஓட்டு போடவில்லை என்பது முழுமையாக தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 3½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    இவர்கள் ஓட்டு போடுவதற்கு தபால் ஓட்டு வழங்கப்படுவது வழக்கம். உயர் அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபால் ஓட்டுக்கள் போடுவார்கள். அல்லது தபாலில் அதை அனுப்பி வைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டது.

    ஆர்வம் மிக்க ஊழியர்கள் உடனே அதை பூர்த்தி செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தபால் ஓட்டுகளை அனுப்பி விட்டனர். ஆனால் இன்னும் சில ஊழியர்கள் தபால் ஓட்டை போடாமல் கையில் வைத்துள்ளனர். 40 சதவீத அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான கால அவகாசம் ஓட்டு எண்ணும் நாள்வரை அதாவது மே 23-ந்தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தபால் வாக்கை பதிவு செய்யலாம்.

    இதற்காக 3 கடிதம் அரசு ஊழியர்களிடம் இருக்கும். வாக்குசீட்டு, தேர்தல் பணிக்கான கடிதம், அதிகாரியின் கையெழுத்திட்ட படிவம் இவற்றை இணைத்து வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அரசு ஊழியர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் இன்னும் கால அவகாசம் இருப்பதால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    கடத்தூர் அருகே பட்டப்பகலில் ஆசிரியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    கடத்தூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது49). ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயமணி ஆசிரியை ஆவர்.

    இருவரும் வெவ்வேறு ஊர்களில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது மாமியார் ராஜேஸ்வரி, மாமனார் சுப்பிரமணி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருந்த உறவினர்களின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், வெளியே சென்றவர்கள் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 17 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். #KSAzhagiri

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி என்றாலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன் வைக்கிற நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்காமல் புறக்கணிக்கிற காரணத்தினால் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எஸ்மா சட்டம் ஏவி விடப்பட்டு ஒடுக்கப்பட்டதை எவரும் மறக்க முடியாது. அந்த பாரம்பரியத்தில் வந்த இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அதே அடக்கு முறையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக கையாண்டு வருகின்றனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

    இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பள்ளிக்கு வராதவர்கள், தேதி வாரியாக கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாராகி வருவதாக கல்வித்துறை இயக்குநர் மிரட்டல் தொனியில் கருத்து கூறியிருக்கிறார்.

    தங்கள் மீது ஏவிவிடப்பட்ட கடுமையான நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து முறையிட முயன்றனர். ஜனநாயக நாட்டில் போராடுகிற அரசு ஊழியர்களை சந்திக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்? மன்னர் ஆட்சியாக இருந்தால் மறுக்கலாம்.

    ஜனநாயக ஆட்சியில் சந்திக்க மறுக்கலாமா? முதலமைச்சரை சந்திக்க மறுக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரைச் சந்தித்து பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை செவிமடுக்காமல் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைக்காக பட்டியல்கள் தயாராகி வருகின்றன. இந்த போக்கு நீடிக்குமேயானால் இதைவிட கொடிய அடக்குமுறை வேறு எதுவும் இருக்க முடியாது.

    ஜனநாயக நாட்டில் கோரிக்கை எழுப்புவது, குரல் கொடுப்பது, போராடுவது, வேலை நிறுத்தம் செய்வது அடிப்படை உரிமையாகும். அத்தகைய உரிமைகளை அ.தி.மு.க. அரசு பறிக்குமேயானால் கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழக மக்கள் 1996 சட்ட மன்றத் தேர்தலில் எத்தகைய பாடத்தை புகட்டினார்களோ, அதைவிட பலமடங்கு கூடுதலான படிப்பினையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்குவார்கள் என்பதை அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

    எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசின் அடித்தளமாக விளங்குபவர்கள். அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிட்டு ஒரு அரசு இயங்க முடியாது.

    அப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KSAzhagiri

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு ‘சஸ்பெண்டு’ ஆன அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட காலங்களில் வேறு வேலை பார்க்கவில்லை என்று சான்று கொடுத்தால் மட்டுமே பாதி சம்பளம் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.

    முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என்று சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

    போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பி உள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறைக்கு சென்றவர்கள் இன்று வேலையில் சேர முடியவில்லை.

    சென்னை தலைமை செயலகத்தில் ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு உள்ளான ஜாக்டோ-ஜியோ நிர்வாகி வெங்கடேசன் இதுபற்றி கூறியதாவது:-

    அரசு ஊழியர்களில் சஸ்பெண்டு ஆனவர்களில் நானும் ஒருவன். போராட்டத்தை தூண்டியதாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமை செயலகத்தில் நான் உள்பட 30 பேர் சஸ்பெண்டு ஆகி உள்ளோம். எங்களுக்கு பாதி சம்பளம் தான் கிடைக்கும்.

    எங்களைப்போல் சஸ்பெண்டு ஆனவர்கள் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் சுமார் 3500 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் கிடைக்காது.

    3 அல்லது 4-ந் தேதிகளில் தான் பாதி சம்பளம் கிடைக்கும். சஸ்பெண்டில் இருக்கும்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று எழுதி சான்று கொடுத்தால் தான் எங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்.

    கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 7 மாதம் பணியில் சேர முடியாமல் இருந்தோம். அதன் பிறகு தேர்தலுக்கு முன்புதான் எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். அதன் பிறகே வேலையில் சேர முடிந்தது.

    அதேபோல் இப்போதும் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதால் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.

    தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தால்தான் நாங்கள் பணியில் சேர முடியும். அப்போதுதான் முழு சம்பளத்தை பெற முடியும். அதுவரை பாதி சம்பளம் தான்.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் அதற்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று 9-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அர்ப்பணிப்பு உணர்வோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. இதில் வேலைநிறுத்தத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதில் இருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo


    திண்டுக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற மேலும் 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3228 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 38 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அதில் கைது செய்யப்பட்ட 27 ஆசிரியர்களின் பெயர் பட்டியலை காவல் துறையினர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்தனர்.

    அதன்படி கைது செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களான செல்லக்குட்டியூரைச் சேர்ந்த மணிகண்டன், தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், வெறியம்பட்டியைச் சேர்ந்த அண்ணாத்துரை உள்பட 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 36 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JactoGeo

    மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #Tamilisaisoundararajan #JactoGeo
    திருப்பூர்:

    பிரதமர் மோடி வருகிற 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி பங்கேற்கிறார்.

    இதற்கான பொதுக்கூட்ட மேடைக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பாஸ்போர்ட்டு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

    இதனால் மோடி ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வருகிற 10-ந் தேதி திருப்பூர் வரும் மோடி ஏராளமான வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்திற்கு பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன்,ரவிசங்கர் பிரசாத், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆத்தியநாத் ஆகியோர் வருகிறார்கள்.

    இதனால் வாக்குச்சாவடி அளவில் பாரதிய ஜனதாவிற்கு பலன் அதிகரிக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இதில் தமிழகத்தின் பங்கு நிச்சயம் அதிகம் இருக்கும்.

    எதிர்கட்சிகள் விளம்பரத்துக்காக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலம் விட்டு பெண்களின் படிப்புக்காக செலவழித்து உள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் 10 லட்சம் போலி ரேசன் கார்டுகள் கண்டறியப்பட்டு உள்ளது. பல லட்சம் போலி லைசென்ஸ் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் 10 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது.

    கடந்த 1971-ம் ஆண்டு வறுமையே வெளியேறு என்ற கோ‌ஷத்துடன் தான் இந்திரா காந்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்படவில்லை.

    ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது ராகுல் காந்தி கூறி வருகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை. மோடி தொடங்கி வைத்த வங்கி கணக்கில் தான் ராகுல் பணம் போடுவதாக சொல்கிறார்.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்து விட்டு பின்னர் இது குறித்து ராகுல் பேசட்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் 800 விவசாயிகள் தான் பயன் பெற்றனர்.

    மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. என்ன பேச வேண்டும் என தெரியாமல் அவர் பதட்டத்துடன் இருக்கிறார்.

    தி.மு.க. 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்போது சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம். கூவத்தை சுத்தப்படுத்துவோம் என கூறினார்கள். ஆனால் அதனை செய்யவில்லை.

    தற்போது மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று பஞ்சாயத்து நடத்துகிறார். அவர் பொய் பிரசாரம் செய்கிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.



    மு.க.ஸ்டாலின், வைகோ, காங்கிரஸ் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாது. அவர்களை இலங்கை சம்பவத்தை கேட்டு மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேறுபாடு உள்ளது.

    தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார். இன்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    நான் கொடுக்கும் அறிக்கை, பேட்டியை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சரியாக படிக்காமல் பேசி வருகிறார். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசினேன்.

    அதற்கு திருநாவுக்கரசர் மற்ற 30 தொகுதிகளை விட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் 10 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தான் நடைபெற்றது.

    அந்த 10 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என தான் நான் பேசினேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு ரூ. 1300 கோடி மத்திய மந்திரி சபையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுக்கூட்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா பொது செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Tamilisaisoundararajan #JactoGeo
    ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 95 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் தீர்வாகாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதி நிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் தேர்தலும் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. பிடித்தம் செய்த தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



    முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் தேவை இல்லாதது. உயர்நீதிமன்ற வழிகாட்டலை மதித்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறோம். கோரிக்கைகளை முன்வைக்கட்டும், போராடட்டும். ஆனால் வேலை நிறுத்தம் தேவையில்லை. மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளது.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுக்கவே அ.தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி அ.தி.மு.க. என எந்த இடத்திலும் அவர்களும் சொல்லவில்லை. அ.தி.மு.க.வும் கூறியதில்லை. நட்பின் அடிப்படையில் பல கோரிக்கைகளை பா.ஜ.க. அரசிடம் முன் வைத்தோம்.

    குறிப்பாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டோம். தரவில்லை. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். அதுவும் வந்தபாடில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி என முதல்வர் கூறியுள்ளார். பா.ஜ.க. ஏதாவது நல்லது செய்துள்ளதா?. இதுவரை செய்யவில்லை.

    ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்குமா?. பா.ஜ.க. தமிழகத்தில் கட்சியை வளர்க்க திட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் திராவிடர்களின் கலாச்சாரத்தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்காகவே மாணவர்கள் என்று வந்து விட்டால் கல்வி சீரழிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK
    தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார். #JactoGeo
    தர்மபுரி:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர வேண்டும் அல்லது சேருவதாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் என்றும், அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.

    மேலும், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் யார் மீதும் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்து விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி கூறினார்.

    இன்று வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.  #JactoGeo


    ×