search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பத்திருவிழா"

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரைத் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை மாத தெப்பத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டமும், சப்தா வர்ண நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.

    இதனையொட்டி இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தட்டுவாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர்.

    தொடர்ந்து தெப்பக்குளத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

    3-வது சுற்றின் முடிவில் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
    சுசீந்திரம் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர்.
    சுசீந்திரம் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர். ஜனத்திரள் மத்தியில் வீதிகளில் உருண்டோடி வரும் தேர் போன்று, தண்ணீரில் மிதக்கின்ற நீளமான மரத்தடிகள் மீது சட்டங்கள் பொருத்தி தேர் போன்று அதை அமைத்து மின்விளக்குகள் மற்றும் பூமாலைகளால் அலங்காரம் செய்வித்து உமா-மகேஸ்வர் மற்றும் திருமால் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச்செய்து நாதஸ்வர மேளதாளங்கள் இசைக்க காக்கமூர் மற்றும் சுசீந்திரம் இளைஞர்களால் வடம்பிடித்து தண்ணீரில் இழுத்து வரப்படுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி நான்குபுறமுள்ள படிக்கட்டுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு தெப்பக்குள மண்டபத்தில் மின்விளக்குகள் அமைத்து தீபஅலங்கார திவ்விய தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடம்தோறும் காணுகின்ற வகையில் தெப்பத்திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய தெப்பத்திருவிழா இதுவேயாகும். சித்திரை திருவிழா சிறப்பு அம்சம் மார்கழி திருவிழா நடக்கும் 5, 7, 9 ஆகிய நாட்களில் மட்டும் மகா விஷ்ணு சிவபெருமானோடு வீதியுலாவிற்கு வருகின்றார்.

    ஆனால் சித்திரை தெப்பத்திருவிழா நடக்கும் 10 நாட்களிலும் சிவனோடு, விஷ்ணுவும் வீதியுலா வருகை தந்து பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவின் போதும் தெப்பத்தில் எழுந்த ருளுகிறார். ஆக, மகா விஷ்ணுவிற்கும் முக்கியத் துவம் கொடுக் கின்ற விழாவாக சித்திரை திரு விழா அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். சித்திரை, மார்கழி திருவிழாவின்போது தேரோட்டத்தில் பங்கேற்காத மகாவிஷ்ணு தெப்பத் திருவிழாவில் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். தரணியில் பரணிபாடும் இவ்விழா பரணிநட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

    மார்கழியை போல் சித்திரை திருவிழாவிலும் 10 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்கழி திருவிழா முடிந்து 3 மாத இடைவெளிக்குப்பிறகு சித்திரை திருவிழா நடக்கின்றது. இது தாணு மாலயசாமி திருக்கோவிலின் 2-வது பெரிய திருவிழாவாகும். சுசீந்திரம் கோவில் நிர்வாகத்தோடு புகழ்பெற்ற ஆதீன மடங்களும், குறிப்பாக சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடமும் துணையாய் இருந்து திருவிழாவினை சிறப்பிக்கின்றன. இம்மடத்தின் சார்பில் 4 நாட்கள் சமய வளர்ச்சி மாநாடும், தேவார பாடசாலை ஆண்டுவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    வ ருடம் தோறும் சித்திரை திருவிழா 10-ம் நாள் இரவு சிவனும், விஷ்ணுவும் தெப்பத்தில் அமர்ந்து தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருகின்றனர். ஜனத்திரள் மத்தியில் வீதிகளில் உருண்டோடி வரும் தேர் போன்று, தண்ணீரில் மிதக்கின்ற நீளமான மரத்தடிகள் மீது சட்டங்கள் பொருத்தி தேர் போன்று அதை அமைத்து மின்விளக்குகள் மற்றும் பூமாலைகளால் அலங்காரம் செய்வித்து உமா-மகேஸ்வர் மற்றும் திருமால் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச்செய்து நாதஸ்வர மேளதாளங்கள் இசைக்க காக்கமூர் மற்றும் சுசீந்திரம் இளைஞர்களால் வடம்பிடித்து தண்ணீரில் இழுத்து வரப்படுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி நான்குபுறமுள்ள படிக்கட்டுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு தெப்பக்குள மண்டபத்தில் மின்விளக்குகள் அமைத்து தீபஅலங்கார திவ்விய தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் வருடம்தோறும் காணுகின்ற வகையில் தெப்பத்திருவிழா பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப்பெரிய தெப்பத்திருவிழா இதுவேயாகும்.

    சித்திரை திருவிழா சிறப்பு அம்சம்

    மார்கழி திருவிழா நடக்கும் 5, 7, 9 ஆகிய நாட்களில் மட்டும் மகா விஷ்ணு சிவபெருமானோடு வீதியுலாவிற்கு வருகின்றார். ஆனால் சித்திரை தெப்பத்திருவிழா நடக்கும் 10 நாட்களிலும் சிவனோடு, விஷ்ணுவும் வீதியுலா வருகை தந்து பத்தாம் நாள் தெப்பத் திருவிழாவின் போதும் தெப்பத்தில் எழுந்த ருளுகிறார். ஆக, மகா விஷ்ணுவிற்கும் முக்கியத் துவம் கொடுக் கின்ற விழாவாக சித்திரை திரு விழா அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். சித்திரை, மார்கழி திருவிழாவின்போது தேரோட்டத்தில் பங்கேற்காத மகாவிஷ்ணு தெப்பத் திருவிழாவில் மட்டும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

    தரணியில் பரணிபாடும் இவ்விழா பரணிநட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மார்கழியை போல் சித்திரை திருவிழாவிலும் 10 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மார்கழி திருவிழா முடிந்து 3 மாத இடைவெளிக்குப்பிறகு சித்திரை திருவிழா நடக்கின்றது. இது தாணு மாலயசாமி திருக்கோவிலின் 2-வது பெரிய திருவிழாவாகும். சுசீந்திரம் கோவில் நிர்வாகத்தோடு புகழ்பெற்ற ஆதீன மடங்களும், குறிப்பாக சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீன மடமும் துணையாய் இருந்து திருவிழாவினை சிறப்பிக்கின்றன. இம்மடத்தின் சார்பில் 4 நாட்கள் சமய வளர்ச்சி மாநாடும், தேவார பாடசாலை ஆண்டுவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாங்குநேரியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வானமாமலை பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள வானமாமலை பெருமாள் சுயம்பாக தோன்றியவர் ஆவார். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். இதன் படி இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று இரவில் நடைபெற்றது.

    இதையொட்டி வான மாமலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து இரவில் பெருமாள் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். ரதவீதிகள் வழியாக தெப்ப குளத்திற்கு வந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வானமாமலை பெருமாள் வரமங்கை நாச்சியாருடன் எழுந்தருளி சுற்றி வந்தார். விழாவை மதுரகவி வானமாமலை மடத்தின் ஜீயர் தொடங்கி வைத்தார்.

    விழாவை முன்னிட்டு தெப்பம் பல வண்ண மின் விளக்குகளாலும், மலர் களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் நாங்குநேரி மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் பிரசித்தி பெற்ற வஞ்சுளவல்லி தாயார் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை ஆண்டுக்கு இரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுக்கான முக்கோடி தெப்பத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சீனிவாச பெருமாள், வஞ்சுள வல்லி தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகங்களும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வருகிற 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கல்கருடன் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் வசந்த மாளிகை நெல்லை ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் காலையில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு விழா நடந்தது. நள்ளிரவு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் உள்ள தெப்பக்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அம்மன் சப்பர வாகனத்தில் எழுந்தருளினார். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், குளத்தின் கரையில் தெப்பத்திருவிழா நடந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    ×