search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில்"

    போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செல்லம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது62). விவசாயியான இவருக்கு சொந்தமான 1 அரை ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இவரது மகன் கோவிந்தசாமி (26). கடந்த 21-ந்தேதி அன்று அன்பழகன் தென்னந்தோப்பில் தேங்காய் பறித்து கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த கோவிந்தசாமி தனது தந்தையிடம் இது எனக்கு சொந்தமாக தென்னந்தோப்பு. அதனால் நீங்கள் இந்த தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கோவிந்தசாமி தனது தந்தை என்று கூட பார்க்காமல் அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கினார். இதில் அன்பழகனுக்கு வலது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. 

    இது குறித்து அன்பழகன் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தந்தையை தாக்கிய கோவிந்தசாமியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    பாவூர்சத்திரம் அருகே பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகை பறித்து சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்த வேலாயுதம் மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் ஆலங்குளத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர். அது கவரிங் நகையாகும்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பாவூர்சத்திரம் செட்டியூர் ரோட்டில் சந்தேகப் படும்படியாக நின்றிருந்த நபரை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரும், அவரது நண்பரும் சேர்ந்து லட்சுமியிடம் நகைபறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து நண்பரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் கடையநல்லூர் புளியமுக்கு தெரு அயூப்கான் மகன் யாசிர்முகமம் (வயது18), கடையநல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நத்தங்கர்பவா மகன் முகமதுஜமீன் (வயது 17) என்பதும் தெரியவந்தது.

    இருவரும் நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு தூத்துக்குடியில் உள்ள நண்பரை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மாலையில் ஊருக்கு திரும்பும் வழியில் முறப்பநாடு ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துள்ளனர். அது கவரிங் நகை ஆகும்.

    இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்து நகை பறிக்க முடியவில்லை, பின்னர் தென்காசி வரும் வழியில் பழைய பேட்டையில் ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற போது அந்தப் பெண் இவர்களை கீழே தள்ளியுள்ளார். இதனால் அந்த பெண்ணிடமும் நகை பறிக்க முடியவில்லை.

    பின்னர் கடையநல்லூர் வரும் வழியில் பாவூர்சத்திரத்தில் லட்சுமியிடம் கவரிங் நகையை பறித்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இருவருக்கும் வயது குறைவு என்பதால் அவர்களை பாளையங்கோட்டை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    காங்கயத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் அருகே திருப்பூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் கடந்த மாதம் 23-ந்தேதி அவரது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த4 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர். இந்நிலையில் நேற்று (23-ந்தேதி) அதிகாலை நடைபயிற்சி வந்த விஜயகுமார் என்பவரிடம் இரு வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் ரூ.1500-ஐ பறித்து தப்பினர்.

    இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்று அங்குள்ள நால்ரோட்டில் பஸ் நிறுத்ததில் 2 பேர் நின்றனர். போலீசை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உஷாரான காங்கயம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்ற பல்லன் (வயது 27), சேலம் வாழப்பாடியை சேர்ந்த மற்றொரு கார்த்திக் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பூங்கொடியிடம் நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயகுமாரிடம் பறித்த பணத்தையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் பல்லன் (எ) கார்த்திக் மீது ஏற்கனவே 18 திருட்டு வழக்குகள் 3 வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் மீது 3 முறை குன்டாஸ் போடப்பட்டுள்ளது. அதே போல் மற்றொரு கார்த்திக் மீதும் பல வழக்குகள் உள்ளன. இருவரையும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி ராஜமகேஷ் உத்தரவுப்படி 2 கொள்ளையர்களையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ரூ.300 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு டாக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 2005-ம் ஆண்டு டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மனைவி நல்லம்மாள். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நல்லம்மாள் தலையில் காயம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று ஸ்கேன் எடுப்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக வேலை பார்த்த டாக்டர் ரமேஷ் பரிந்துரைக்க வேண்டுமாம்.

    இதனால் ஜோதிராஜன், டாக்டர் ரமேசை அணுகினார். டாக்டர் ரமேஷ், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஸ்கேன் பார்ப்பதற்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜோதிராஜன், இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதைதொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி ஜோதிராஜன், ரமேசிடம் ரூ.300-ஐ கொடுக்க சென்றார். ராஜபாளையம் சிவகாமிபுரத்தில் உள்ள தனது மருத்துவமனையில் இருந்த டாக்டர் ரமேசிடம், ஜோதிராஜன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து ரமேசை கைது செய்தனர்.

    இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், லஞ்சம் பெற்ற அரசு டாக்டர் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #arrest

    திருவண்ணாமலை:

    செய்யாறு தாலுகா சின்ன ஏழாச்சேரியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சுதாகர். இவர்களது குடும்ப நண்பர் காஞ்சீபுரம் மாவட்டம் வேதாசலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்.

    இவர்களிடம் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பெரும்படுகைகண்டிகை கிராமத்தை சேர்ந்த 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு வட்டிக்கு பணம் கடன் வாங்கி உள்ளனர். கடனை அவர்கள் சரியாக திருப்பி கொடுக்காததால், 3 குடும்பத்தை சேர்ந்த 31 பேரையும் சின்ன ஏழாச்சேரியில் உள்ள கல்குவாரியில் ராஜகோபால், சுதாகர், சந்திரசேகரன் ஆகியோர் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி உள்ளனர்.

    அவர்களுக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.17 முதல் ரூ.25 வரை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு உதவி கலெக்டர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி கல்குவாரிக்கு சென்று 31 பேரையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார்.

    அதில், 31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த ராஜகோபால், சுதாகர், சந்திரசேகரன் ஆகியோருக்கு தலா 11 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். #arrest

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் `ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஜி.வி. அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Jail #GVPrakashKumar
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    விறுவிறுப்பாக நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அருமையான கதையை கொடுத்த இயக்குநர் வசந்த பாலனுக்கு நன்றி. படத்தை திரையில் பார்க்க ஆவோலடு இருக்கிறேன்.

    ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
     

    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், படப்பிடிப்பு தளத்தில் நிஜ சண்டையை பார்த்து பயந்து ஓடி இருக்கிறார். #GVPrakash
    வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘ஜெயில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாசுடன் அபர்ணதி, நந்தன் ராம், பாண்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கண்ணகி நகரில் நடைபெற்றது. கண்ணகி நகரில் அடிக்கடி அடிதடி தகராறு நடக்குமாம். படப்பிடிப்பின் போது நிஜமாகவே அரிவாள், கம்போடு ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை தாக்க உயிர் பிழைத்தால் போதும் என்று ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி ஆகியோர் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தனர். 



    நிஜ சண்டை சுமார் ஒரு மணி நேரம் முடிந்த பிறகு, மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார் வசந்தபாலன். இப்படத்தை ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார்.
    பேஸ்புக் வீடியோவில் போலி கற்பழிப்பு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய எகிப்து பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் அமல் பேதி. தனது பேஸ்புக்கில் 12 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் என்றும், தான் வங்கியில் பணிபுரிந்த போது பாலியல் கொடுமைக்கு ஆளானதாகவும், பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

    இது எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், அவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் இளம் பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 140 நாட்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்துவிட்டதால் எஞ்சிய நாட்களை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சுனில் (வயது 27), கார் டிரைவர். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி அருகே உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் நிதிநிறுவன அதிபர் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரியை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றார். உடனே அகிலாண்டேஸ்வரி சத்தம்போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சுனில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுனிலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து நீதிபதி லதா தீர்ப்பளித்தார். உடனே போலீசார் பலத்த பாதுகாப்புடன் சுனிலை அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 
    கேரளாவில் கள்ளக்காதலுக்காக குடும்பத்தினரை கொன்ற பெண் ஜெயிலுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் பினராய் பகுதியை சேர்ந்த சவுமியா (வயது 28) . இவர் கள்ளக்காதலுக்காக பெற்றோர் மற்றும் குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

    கைதான சவுமியா, கண்ணூர் ஜெயிலில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று இவர் நீண்ட நேரமாக அறைக்கு வரவில்லை.

    சக கைதிகள் அவர் ஜெயில் அறைக்குள் வரவில்லை எனக்கூறியதை தொடர்ந்து ஜெயில் ஊழியர்கள் அவரை தேடினர்.

    அப்போது ஜெயில் வளாகத்தில் உள்ள முந்திரி மரத்தில் சவுமியா தூக்குபோட்டு இறந்து கிடப்பதை கண்டனர். உடனே அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட சவுமியா ஜெயில் அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. நான் நிரபராதி. யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால் என் மீது வீண் பழி கூறி கைது செய்துள்ளனர். எனவே தற்கொலை செய்கிறேன் என்று எழுதி இருந்தார்.

    இதற்கிடையே சவுமியா இறந்து அவரது உடலை பல மணிநேரம் கடந்த பிறகே ஜெயில் ஊழியர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.இதுதொடர்பாக ஜெயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    சவுமியாவுக்கு தற்கொலை செய்ய சககைதியின் சேலை கிடைத்து எப்படி? என்பது பற்றியும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Jail #GVPrakashKumar
    `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என யதார்த்தமான படங்களை கொடுத்தவர் வசந்த பாலன். இவரது `வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.

    இந்த நிலையில், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
     
    சிங்கப்பூரில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இந்திய டாக்டரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜெகதீப் சிங் அரோரா (வயது 46). இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, தன் மனைவி மற்றும் 11 வயதான மகளுடன் சிங்கப்பூருக்கு சென்றார். பிரபல சுற்றுலா தலம் ஒன்றில் உள்ள ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார்.

    அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 4 பெண்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி நா பெங் ஹாங் உத்தரவிட்டார்.

    குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரோராவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது கசையடி அல்லது எல்லாம் சேர்த்து தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தான் பெரிய தவறு செய்து விட்டதாக கோர்ட்டில் அரோரா தெரிவித்தார்.

    ×