என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107099"
- மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
- பஜனைகள், பக்தி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது.
நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மதியம் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங் களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது. இரவு யானை வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பஜனைகள், பக்தி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை புண்யாஹவச்சனம், வசந்தோற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை யானை வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- உற்சவர்களுக்குநறுமண திரவியத்தால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு பல்லக்கு வாகன வீதி உலா நடந்தது. பல்லக்கில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பஜனைகள், பக்தி பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கருட சேவை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மதியம் உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியத்தால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இரவு பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- நேற்று இரவு கொடியிறக்கம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி 9-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகப் புறப்பட்டு கபிலதீர்த்தத்தில் உள்ள ஆழ்வார் தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. கபிலத்தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து தேவஸ்தான நிர்வாக கட்டிடம் எதிரே உள்ள பி.ஆர். தோட்டத்துக்கு உற்சவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 5 மணிக்கு பி.ஆர்.தோட்டத்தில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு கோவிந்தராஜசாமி கோவிலை அடைந்தனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.40 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
- 6-ந்தேதி வெள்ளி ரத புறப்பாடு நடக்கிறது.
- 7-ந்தேதி விடையாற்றி நடைபெறுகிறது.
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜபெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி வருகிற 6-ந்தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ந்தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
- இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது.
திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'ராஜகோபாலசாமி' அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகனத்துக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பக்தர்கள் பக்தி, பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது.
அதேபோல் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர், 'ராஜமன்னார்' அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன் பிறகு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு கல்யாணோற்சவம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- வைகாசி மாத பிரம்மோற்சவ விழாக்களில் கலந்து கொண்டு வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்!
- தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வைகாசி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடக்கும் தலங்கள் வருமாறு:-
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்,
திருவல்லிக்கேணி, ஸ்ரீபார்த்தசாரதி கோவில்,
ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வாருக்குப் பிரம்மோற்சவம்),
மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர்,
மகாபலிபுரம் ஸ்ரீஸ்தல சயன பெருமாள்,
திருநாராயணபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள்,
காஞ்சி ஸ்ரீவைகுண்ட பெருமாள்,
சென்னை அமைந்தகரை ஸ்ரீபிரசன்ன வரதராஜர்,
மதுரை ஸ்ரீகூடலழகர்,
மதுரை திருமோகூர் ஸ்ரீகாளமேக பெருமாள்,
திருநள்ளாறு ஸ்ரீதர்பரண்யேஸ்வரர்,
பட்டீஸ்வரம் ஸ்ரீதேணுபுரீஸ்வரர்,
திருக்கண்ணங்குடி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்,
திருப்பனையூர் ஸ்ரீசவுந்தரேஸ்வரர்,
கஞ்சனூர் ஸ்ரீஅக்னி புரீஸ்வரர்,
கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர்,
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி,
மயிலாடு துறை ஸ்ரீமயூரநாதர்,
திருச்செங்கோடு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர்,
பொள்ளாச்சி ஸ்ரீசுப்ரமணியர்,
சென்னை வடபழனி ஸ்ரீதண்டாயுதபாணி,
சென்னை ஸ்ரீகாளிகாம்பாாள்
ஆகிய கோவில்களில் வைகாசி மாதத்தில் உற்சவம் சிறப்புற நடைபெறுகிறது.
- உத்+சவம். இதில், சவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும்.
- பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி.
கோவில்களில் நடத்தப்படும் பிரம்மோற்சவ விழாக்களில் இதுவும் ஒன்று என்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் முக்கியமான விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். மற்ற விழாக்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், உற்சவம் என்பதே, உலக மக்கள் அனைவருக்கும் பலன் தரக்கூடிய, பலம் தரக்கூடிய முக்கியமான விழாவாகும்.
உத்+சவம். இதில், சவம் என்பது தோற்றத்தைக் குறிக்கும். தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோம். அதேபோல், எல்லாம் வல்ல பரம்ருபொருளின் சக்தி, ஆலயத்தின் கருவறையில் மூல மூர்த்தமாக எழுந்தருளியுள்ளது. அப்படி, மூல மூர்த்தமாக இருக்கிற இறைவனை உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து, உலக நன்மைக்காக, கோவிலில் இருந்து சுவாமி வீதியுலா வருகிற வைபவமே, உற்சவம்!
உற்சவங்கள், ஒரேயொரு நாளிலும் முடியும். அதிக பட்சமாக 27 நாட்கள் வரையும் நீண்டிருக்கும். எனினும், பெரும்பாலான ஆலயங்களில், 9 நாட்கள் நடைபெறும் உற்சவமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த ஒன்பது நாள் உற்சவத்தை, சவுக்கியம் என்று குறிப்பிடுவர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு... தீர்த்தவாரி. அந்த நாளில், புண்ணிய நதிகள் அனைத்தையும் தீர்த்தங்களாக ஆவாஹனம் செய்து, அனைத்து ஜீவராசிகளையும் அஸ்த்ர தேவரில் எழுந்தருளச் செய்வார்கள். அப்போது, நாம் தீர்த்த நிலையில் நீராடி கரைக்கு வரும்போது, மிகச் சிலிர்ப்புடன் இறையனுபூதி கிடைக்கும் என்கிறார் மணிவாசகப் பெருமான்.
வைகாசி மாத பிரம்மோற்சவ விழாக்களில் கலந்து கொண்டு வழிபட... இயற்கைச் சீற்றங்கள் குறையும், பசுமை கொழிக்கும். உலகில் அமைதி நிலவும், குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும், சகல செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்!
- திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
- பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. கோவில் சன்னதியில் தொடங்கிய தேரோட்டம் கர்னால வீதி, பேரி வீதி, காந்தி வீதி வழியாக கோவிலின் ரத மண்டபத்தை வந்தடைந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், சாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம் முடிந்ததும் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது.
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர், 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை சூரியபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதி உலா முடிந்ததும் காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பிறகு மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதி உலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை 'வேணுகோபாலசாமி' அலங்காரத்தில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஊஞ்சல்சேவை, இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
நாராயணவனம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 2-வது நாளான நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'முரளிகிருஷ்ணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாா்.
அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
- சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
- டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 3-ந்தேதி நடந்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதி உலா வந்தார். முன்னதாக சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று இரவு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் வருகிற டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
- இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி மிதுன லக்னத்தில் காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.
பின்னர் காலை 8.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 9 நாட்கள் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை மிதுன லக்னத்தில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்