search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    • மே 16-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
    • தேரோட்டம் மே 30-ந் தேதி நடக்கிறது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி கொடிக்கம்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தலுக்கான கம்பத்திற்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரமேற்சவ விழா கொடியேற்றம் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதியும், தேரோட்டம் மே 30-ந் தேதியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி மே 31-ந் தேதியும், தெப்ப உற்சவ விழா ஜூன் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    • பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    • பூத வாகனத்தில் நடராஜர் கைலாய வாத்திய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

    மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 3-வது நாள் நிகழ்ச்சியாக பூத வாகனத்தில் நடராஜர் கைலாய வாத்திய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மீஞ்சூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். மீஞ்சூர் வட்டார நாடார் சங்க தலைவர் அன்பழகன், செயலாளர் லிங்கராஜ், பொருளாளர் சிவசுப்பிரமணியம், துணை தலைவர் முனுசாமி, துணை செயலாளர் ஆனந்த சங்கர், பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் கனகராஜ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கணேஷ், துணை தலைவர் ராஜ், துணை செயலாளர்கள் சதீஷ், முருகன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
    • இன்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சங்கு, சக்கரம், வில், அம்பு, கவுமோதகி, நந்தகம் வாள் ஆகிய பஞ்சாயுதங்களை ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைதொடர்ந்து இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ராவண அவதாரம் உற்சவம் 30-ந்தேதி நடக்கிறது.
    • 5-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. பஞ்சபூத தலங்களில் மண் தலன் என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழா 14 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. தினமும் காலையும், மாலையும் இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சீபுரத்தில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராவண அவதாரம் உற்சவம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. 31-ந்தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று மாலை வெள்ளி தேர் உற்சவமும் நடைபெற உள்ளது.

    அடுத்த மாதம் 3-ந்தேதி இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவையும், 5-ந்தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசை யாக நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • இன்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9,30 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் கோதண்டராமர், 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் கருட சேவை நிகழ்ச்சி தொடங்கியது. அதில் உற்சவர் கோண்டராமர் தங்கம், வைர நகைகள் அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி இரவு 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை மடாதிபதிகளான பெரிய ஜீயர், சின்ன ஜீயர், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கங்கணப்பட்டர் ஆனந்தகுமார் தீட்சிதர், கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ், சலபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கில் கோதண்டராமர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இரவு சிகர நிகழ்ச்சியாக கருட வாகனத்தில் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி திருப்ராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் சீதா, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • 26-ந்தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடக்கிறது.

    விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடக்கிறது.

    இதனையொட்டி நேற்று கோவில் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் சுதா, குமார், ராமலிங்கம். ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஸ்ரீதரன் வரவேற்றார். கூட்டத்தில் வியாபாரிகள் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தேர் செல்லும் கிழக்குத் தேரோடும் வீதி, வடக்கு தேரோடும் வீதி, ஆகிய சிமெண்டு சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க வேண்டும். இரு புறமுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி தேர் செல்வதற்கு இடையூறு இல்லாமல் பணிகளை முடிக்க வேண்டும். தேர் காலை 9 மணி புறப்பட்டு தேர் நிலை நிறுத்தும் செய்யும் வரை தீயணைப்பு வீரர்கள் உடனிருந்து பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டும், மருத்துவ வசதிகள், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பஞ்ச மூர்த்திகள் வீதி உலா செல்லும்போது இடையூறாக உள்ள மின் கம்பிகளை அப்புறப்படுத்தி கொடுத்தல் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் தினசரி சுவாமி வீதி உலாவின் போது உடனிருந்து மின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது,.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.நித்யா ஆய்வாளர் சுரேஷ்குமார், கோயில் செயல் அலுவலர் கோ ஸ்ரீதரன், மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

    • கோதண்டராமர், சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9.30 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத் தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து பகல் 12 மணி வரை கல்யாண மண்டபத்தில் கோதண்டராமர், உற்சவர்களான சீதா, லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.

    இரவில் ஹம்ச வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது.
    • இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாமி வீதி புறப்பாடு நடந்தது.
    • தீபாராதனை நடந்தது.

    ஏரல் அருகே பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், நவதிருப்பதி கோவில்களில் 6-வது ஸ்தலமாகும். இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.

    அதேபோல் நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம், திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு சாமி மாயகூத்தர் பெருமாள் தாயாருடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதனை தொடர்ந்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு பரங்கி நாற்காலியில் சாமி வீதி புறப்பாடு நடந்தது. திருவிழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ குளந்தை வள்ளி தாயார் கைங்கர்யம் சபாவினர் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×