search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107099"

    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • நாளை காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து நாளை காலை 8.45 மணியில் இருந்து காலை 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2-வது நாளான நாளை காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 3-வது நாளான வருகிற 19-ந் தேதி இரவு அதிகார நந்தி சேவையும், 5ம் நாள் 21-ந் தேதி இரவு ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி தரிசனம், 23-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் தீர்த்தீஸ்வரர் காலை 9 மணிக்கு சப்பரம் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார், இரவு சிம்ம வாகன வீதி உலா நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.

    தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பூத வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ராவணேஸ்வர வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.

    2-வது நாளான நாளை காலை உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்ச வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 3-வது நாளான வருகிற 19-ந் தேதி இரவு அதிகார நந்தி சேவையும், 5ம் நாள் 21-ந் தேதி இரவு ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி தரிசனம், 23-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. முக்கிய விழாவான வருகிற 24-ந்தேதி இரவு தீர்த்தீஸ்வரருக்கும், திரிபுரசுந்தரிக்கும் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராம சாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 22-ந் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ந் தேதி கருட சேவை, 25-ந் தேதி அனுமன் வாகனம் நடக்கிறது.

    31-ந்தேதி சீதாராமர் திருக்கல்யாணம், 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை ராமநவமி உற்சவமும், ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது.

    கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர், மோர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுவாமி யானை ஊர்வலத்துடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தது.
    • பக்தர்கள் வீதி உலாவின் போது சாமிக்கு தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.

    சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூரில் என்னைப் பெற்ற தாயார்பக்தவாசலப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயம். புகழ்பெற்ற 108 திவ்ய தேசத்தின் 58-வது திவ்யதேச மாத அமையப்பட்டுள்ளது, இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இன்று மூன்றாவது நாள் விடியற்காலை 5.30 மணி அளவில் தங்க கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட மாலை, சிறப்பு அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.

    கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சுவாமி யானை ஊர்வலத்துடன் நான்கு வீதிகளிலும் வீதி உலா வந்தது. பக்தர்கள் வீதி உலாவின் போது சாமிக்கு தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஆரத்தி எடுத்தும் பெருமாளை பய பக்தர்களின் வழிபட்டனர்.

    ஆங்காங்கே பக்தர்களுக்கு ராமானுஜம் டிரஸ்ட் மற்றும் பக்தர்களும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பிரமோற்சவ திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட திருநின்றவூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 18-ந்தேதி தங்கரதம் வடம் பிடித்தலும், தீர்த்தவாரியும் நடக்கிறது.
    • 21-ந்தேதி அன்னப்பெரும்படையலும், புஷ்பயாகமும், விடையாற்றியும் நடக்கிறது.

    கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன்கோவில் என்னும் வேங்கடாசலபதி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா 12 தினங்களுக்கு நடைபெறுவது வழக்கம்.. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி உற்சவர் பெருமாள், பூமிதேவி தாயாருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது

    தொடர்ந்து கொடிமரத்திற்கும், பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந்தேதி தங்கரதம் வடம் பிடித்தலும், புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 21-ந்தேதி மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், புஷ்பயாகமும், விடையாற்றியும் நடக்கிறது.

    • 17-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் சிறு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று சுவரொட்டிகள், சிறு புத்தகங்களை வெளியிட்டார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 19-ந்தேதி பிரம்மோற்சவத்துக்காக அங்குரார்ப்பணம் நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கின்றன.

    இதேபோல் ராமநவமி விழா 30-ந்தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரையிலும், தெப்போற்சவம் ஏப்ரல் மாதம் 3-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    • கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதி நடக்கிறது.
    • ஊர்வலத்தில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணியளவில் நடக்கிறது. 41 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசாமி திரிபுரசுந்தரி தாயாருடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

    இந்தநிலையில் தேரோட்டத்தின்போது பயன்படுத்தப்படும் தேங்காய் நாரிலான வடக்கயிறு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதாகி விட்டது.

    இதையடுத்து திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக சேவகரான உத்தண்டராமன் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் இருந்து ரூ.2 லட்சம் செலவில் 160 அடி நீளம், 5.5 இஞ்ச் அகலமுள்ள 500 கிலோ எடையுள்ள புதிய வடக்கயிறு பிரத்யேகமாக ஒருமாத காலமாக தயாரிக்கப்பட்டு திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வடத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் பொருத்தப்பட்டது.

    விழாவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதி நடக்கிறது. இந்த திருக்கல்யாணத்தை காண 3 நாட்களுக்கு முன்பு சென்னை மண்ணடி, பவளக்கார தெருவில் இருந்து தண்டாயுதபாணி சாமி வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை மண்ணடி பவளக்கார தெருவில் இருந்து வெள்ளி மற்றும் மரத்தேரில் அலங்கரிக்கப்பட்ட பழைய மற்றும் புதிய தண்டாயுதபாணி சாமிகள் ஊர்வலமாக திருவொற்றியூருக்கு வந்தனர். ஊர்வலத்தில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ஊர்வலம் திருவொற்றியூர், தெற்கு மாடவீதியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் முடிந்தது. அங்கு 5 நாட்கள் தண்டாயுதபாணி சாமியுடன் தங்கியிருக்கும் நகரத்தார் சமூகத்தினர் அனைவருக்கும் அன்னதானம் அளித்து திருக்கல்யாணம் கண்டு திரும்புவர்.

    • கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.

    வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா பந்தகால் நடும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வாகன உற்சவங்களின் முன்னோட்டமாக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனம், தங்கமயில் வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி மேளதாளம், மங்கள வாத்தியம் முழங்க மாட வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.

    6-ம் நாளான நேற்று யானை வாகன பெருவிழா நடைபெற்றது. காலை முதலே விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசாமி தனி சன்னதியில் அமைந்துள்ள வள்ளியம்மை மற்றும் மலைக் குகை கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டது.

    யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர் அலங்காரத்தில் எழுந்தருளி மின் அலங்காரத்துடன் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மேலும் இசைக்கச்சேரியும் நடந்தது. இதில் டி.வி. புகழ் மூக்குத்தி முருகன் மற்றும் நடிகைகள் ஆதித்யா, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தினர். அதன்பின்னர் சிறப்பு வாண வேடிக்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யானை வாகனம் முதல், தேர் நிலைக்கு வந்து சேரும் வரை 5 நாட்களுக்கு தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை வன்னிய குல ஷத்திரிய மரபினர்கள் மற்றும் 6 நாள் யானை வாகன பெருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது.
    • 27-ந்தேதி நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    24-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    27-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7-ந்தேதி சாயாஅபிஷேகம், 8-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 28-ந்தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. மார்ச் மாதம் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 19-ந்தேதி இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    20-ந்தேதி கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை சின்னசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

    24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கருட வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, யானை வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 28-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    ேமற்கண்ட வாகன வீதிஉலா காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணனுடன் இணைந்தும் வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த 13-ந்தேதி பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. 13-வது நாளான நேற்று முன்தினம் இரவு ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு ஏகாந்த சேவை நடந்தது.

    முன்னதாக உற்சவமூர்த்திகளை சிறிய பல்லக்குகளில் வைத்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் இருந்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

    கோவிலின் நடை சாத்தும் நேரத்தில் இரவு 9.30 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் உற்சவரை பல்லக்கில் வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் உற்சவரை அதே பல்லக்கில் வைத்து ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சயன மந்திரம் அருகில் கொண்டு வந்தனர்.

    அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊஞ்சலில் (படுக்கை) சாமி-அம்பாளை வைத்து தீப, தூப நெய்வேத்தியங்கள் சமர்பித்து வேத மந்திரங்கள் முழங்க கதவுகள் சாத்தப்பட்டதும் ஏகாந்த சேவை நடந்தது.

    இந்தநிலையில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பரத்வாஜ் முனிவருக்கு (உற்சவர்) சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது. வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா பூஜை முறைகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள், வேத பண்டிதர்கள் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.

    கங்காதேவி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாா், விநாயகர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர், திரிசூலம் மற்றும் பரத்வாஜ் முனிவர் உற்சவர்களுக்கு வேதப் பண்டிதர்கள் பல்வேறு சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்து தீப, தூப, நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர்.

    முன்னதாக அர்ச்சகர்கள் கலசம் ஏற்பாடு செய்து யாகம் வளர்த்தனர். அதைத்தொடர்ந்து அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • சந்திரசேகரர் திருத்தேரோட்டம் 4-ந் தேதி நடக்கிறது.
    • கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந்தேதி நடக்கிறது.

    திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தியாகராஜ சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்னர் கொடிமரம், மஞ்சள், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சாம்பிராணி தூபமிட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைதொடர்ந்து பிரமாண்ட கொடி மரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், தியாகேசா ஒற்றீசா என, விண்ணதிர பக்தி ேகாஷம் முழங்கினர். பின்னர் தியாகராஜ சாமி, பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.

    மாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் உற்சவர் சந்திர சேகரர் மற்றும் திரிபுர சுந்தரி தாயார், சூரிய, சந்திர பிரபை, சிம்மம், நாகம், பூதம், ரிஷபர், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லாக்கு, இந்திர விமானம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் 4-ந் தேதியும், கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் 6-ந் தேதியும் நடைபெற உள்ளது. வருகிற 7-ந் தேதி கடலாடு தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கம், 8-ந்தேதி இரவு தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன், திருவிழா நிறைவடைகிறது.

    ×