என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107583"
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அடுத்த சூர்யாபேட்டையை சேர்ந்தவர் மாதவி (வயது 34). இவருக்கு கார்த்திக் (18) என்ற மகன் உள்ளார். மாதவி கடந்த 2 ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிபட்டு வந்தார்.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாதவி தன்னுடைய மகன் கார்த்திக்குடன் ஸ்ரீசைலம் மலை பகுதியில் உள்ள சாட்சி கணபதி கோவிலுக்கு நேற்று வந்தார்.
பின்னர் தான் தயாராக கொண்டு வந்த பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தன்னுடைய மகன் கார்த்திக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார்.
பின்னர் தனது உறவினர்களுக்கு போன் செய்து எனக்கு கேன்சர் நோய் உள்ளதால் நான் இனி பிழைக்க மாட்டேன். அதனால் நானும் என்னுடைய மகனும் பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.
இதுகுறித்து உறவினர்கள் ஸ்ரீசைலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவம் இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சின்னய்யா மற்றும் போலீசார் விரைந்த வந்து மயங்கி கிடந்த தாய் மகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இவர்களை சோதனை செய்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப் பாடல் உலகின் மன்னரான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் (வயது 20) என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என 2 மகன்களும் உள்ளனர்.
மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சினை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் இதற்கு முன் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிஸ் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
‘லீவிங் நெவர்லேண்ட்’ என்கிற ஆவணப்படத்தில் மைக்கேல் ஜாக்சன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் பாரிஸ் ஜாக்சன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி பொய்யானது என பாரிஸ் ஜாக்சன் டுவிட்டரில் தெரிவித்தார். இந்த தகவலை பரப்பியவர்கள் ‘பொய்யர்கள்’ என அவர் சாடியுள்ளார். #MichaelJackson #ParisJackson
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக விஷ்ணுபிரியா இருந்தார். உயர் அதிகாரிகள் அவருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த ஐகோர்ட்டு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டும் ஐகோர்ட்டு அளித்த உத்தரவை உறுதி செய்தது.
இதையடுத்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏப்ரல் மாதம் கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், விஷ்ணுபிரியா, உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே இந்த வழக்கை கைவிடுவதாக கூறப்பட்டு இருந்தது. சி.பி.ஐ. அளித்த அறிக்கைக்கு எதிராக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்ததுடன், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் உள்பட 7 பேரிடமும் விசாரணை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியின் வக்கீலுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI #Investigation
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த அக்ரஹாரம் பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் கருவேலை மரம் நிறைந்துள்ளது. இந்த மரங்களை ஓமலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் டெண்டர் எடுத்து ஊட்டி பகுதியை சேர்ந்த நபருக்கு மொத்தமாக விற்பனை செய்தாக கூறப்படுகிறது.
இந்த மரங்களை வெட்ட 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏரி பகுதியில் குடிசை அமைத்து தங்கி வருகின்றனர். இவர்கள் மேச்சேரி, கொளத்தூர், கருகல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள். லாரிகள் வேலை நிறுத்தம் நடந்ததால் சில நாட்களாக மரம் வெட்டும் வேலை நிறுத்தபட்டது. மரம் வேலை தொடங்க நேற்று மாலை கருங்கல்லூர் பகுதியை சேர்ந்த மாது (60) என்பவர் அக்ரஹார ஏரிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மாது மட்டும் தனியாக இரவில் ஏரிபகுதியில் இருந்தாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் மரம் வெட்ட மற்றவர்கள் ஏரிக்கு சென்றார். அப்போது மாது வெள்ளை துணியில் மரத்தில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு அம்மாசி என்ற மனைவியும், சாமி என்ற மகன் உள்ளார். சாமி தீயனைப்புதுறையில் பணியாற்றி வருகிறார்.
சேலம்:
சேலம் கோரிமேடு ஜெயாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மகன் தினேஷ்பாபு (வயது 35). கார் டிரைவர். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. தினேஷ் பாபு நேற்று மது அருந்தி வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அருணா கோபத்தில் வீட்டின் வெளியே இருந்தார். அப்போது வீட்டை பூட்டி கொண்டு தினேஷ்பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அவரது மனைவி கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் லால்குடிக்கு காரில் 2 பேரை அழைத்து சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் பலியானார்கள். இந்த வழக்கு விசாரணை விரைவில் வர உள்ளது. இதற்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மும்பை கோரேகாவ் கிழக்கு, பிலிம் சிட்டி ரோட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணா (வயது 63). இவர் அந்தேரி, சக்காலா பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரது ஓட்டல் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும், அவர் சமீபத்தில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து டி.வி.யில் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தனது மகளிடம் அதிகம் விவாதித்து உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா வெகு நேரமாகியும் படுக்கை அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது, கிருஷ்ணா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதனால் பதறிப்போன அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்