என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107602"
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், லட்சுமேஸ்வரா வட்டம், கோனாலா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது28), இவரது மனைவி நிர்மலா (25), இவர்களது 6 மாத ஆண் குழந்தை நந்தீஷ்.
மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நிர்மலாவுடன் ரமேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் கோடாலியால் நிர்மலா, குழந்தை நந்தீஷை வெட்டி உள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இதையடுத்து லட்சுமேஸ்வரா காவல் நிலையத்தில் ரமேஷ் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 47).
கவரிங் வியபாரியான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவி காமதேனு (45) மற்றும் 2 குழந்தைகளுடன் சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்.
இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவும் 8 மணியளவில் மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த திருமுருகன், மனைவி காமதேனுவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் கால் உள்பட பல பகுதிகளில் படுகாயம் அடைந்த அவர் கதறி துடித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருமுருகனை பிடித்த போலீசார் எதற்காக அவர் மனைவியை தள்ளி விட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெக்சிகோ நாட்டின் போர்டோ பெனஸ்கோ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கிறார். இருந்தபோதும் தனது மனைவி மீதான சந்தேகப்பார்வை குறையவில்லை. இதனால் தனது மனைவி என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்க திட்டமிட்ட அவர், மனைவியின் வீட்டின் அடியில் துளையிட்டு உள்ளே நுழைய முயற்சித்துள்ளார்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டனர். சுமார் 24 மணி நேரம் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #MexicoMan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியை சேர்ந்தவர் மணி(வயது55). இவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு திருமலாபுரம் பிரிவு பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். தேனி பொம்மணம்பட்டியை சேர்ர்ந்தவர் சின்னராஜ்.
இவரது மனைவி மணியிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை பார்க்கும் சாக்கில் அவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த சின்னராஜ் இளம்பெண்ணின் சகோதரர் செல்வம் ஆகியோர் மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சின்னராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த மணி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் சின்ராஜ், செல்வம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் மணி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை எழுமலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைபாண்டி (வயது 33). இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பிச்சை பாண்டிக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தது.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாரதி கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பிச்சை பாண்டி மனதை மிகவும் பாதித்தது.
மனைவியின் சாவுக்கு குடிப்பழக்கம் காரணமாகி விட்டதே? என்று மனவேதனை அடைந்த பிச்சைபாண்டி மனைவி இறந்த 2 நாளில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிச்சைப்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள எடுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ஜெனீபர் அகல்யா (வயது 26). கணவன்- மனைவி இருவரும் தென்னம் பாளையம் அவினாசி மார்க் கெட்டில் வாழைப்பழம் மற்றும் வாழை இலை வியாபாரம் செய்து வருகின்றனர்.
சின்னராஜூக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேம் ஏற்பட்டது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சின்னராஜ் தனது மனைவியை மேட்டுப்பாளையம் பாரதி நகரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். இரவு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து ஜெனீபர் அகல்யாவின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜெனிபர் அகல்யாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத்(வயது 57). இவரது மனைவி சேனாலி. இவரது வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விஜய்குமார் பக்வத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். அவரது மனைவி சேனாலி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.
போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விஜய்குமார் பக்வத் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சேனாலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் விஜய்குமார் பக்வத் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம் நகரை சேர்ந்தவர் ரஜினி (40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பாட்டி வீட்டில் படித்து வருகிறார்கள்.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் செல்வி வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் வாலிபர் வீரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது.ரஜினி வேலைக்கு சென்ற சமயத்தில் வீரமணி செல்வி வீட்டுக்கு வந்து அவரிடம் பேசி செல்வதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9 மணியளவில் வீரமணியும், செல்வியும் தனிமையில் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ரஜினி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த வீரமணியை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது.
இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரஜினி வயிற்றில் குத்தினார். அதன் பின்னர் தப்பி ஓடி விட்டார்.
கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த ரஜினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரஜினி மனைவி செல்வியிடம் விசாரித்த போது தனக்கும் வீரமணிக்கும் கள்ள தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார்.
வீரமணியை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான் பல்வேறு தகவல்கள் தெரிய வரும். இக்கொலை திருப்பூர் வசந்தம் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தர்மபுரி நெடுமாறன் நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் உமா (வயது 35). பி.இ. பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்கிற கருணாநிதி என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கருணாநிதி ரியல் எஸ்டேட் தொழிலும், சினிமா துறையில் பைனான்ஸ் வழங்கும் தொழிலும் செய்து வருகிறார். கருணாநிதி-உமா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக உமா தனது கணவரை பிரிந்து தர்மபுரியில் உள்ள தனது தாயார் வீட்டில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக கருணாநிதியும், உமாவும் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த வழக்கு தர்மபுரி நீதிமன்றத்தில் நடத்து வருவதாக தெரிகிறது.
வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய 2 நாட்களில் கருணாநிதி தர்மபுரிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் குழந்தைகளை பார்க்க கருணாநிதி தர்மபுரி நெடுமாறன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது கருணாநிதி தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து, சுட்டு விடுவதாக உமாவை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன உமா கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கருணாநிதியை பிடித்து வைத்து கொண்டு தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடனே அங்கு விரைந்து கருணாநிதியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கருணாநிதியிடம் இருந்தது ரப்பர் குண்டு போட்டு சுடப்படும் ஏர்கன் என்று அழைக்கப்படும் கை துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இந்த துப்பாக்கியை அவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த துப்பாக்கியை தர்மபுரி டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பைனான்ஸ் அதிபர் கருணாநிதியை கைது செய்து தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்தி ரேட்டு உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் சமீபத்தில் குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் நிரவ் மோடி மோசடி செய்த பணத்தில் அவரது மனைவி ஆமி மோடி நியூயார்க்கில் உள்ள சென்டரல் பார்க் பகுதியில் சொத்து வாங்கி இருப்பது அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு நிரவ் மோடியின் மனைவி ஆமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டனர். #PNBFraud #NiravModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்