search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரை அருகே பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பங்களா பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மாயக்காள் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சபரிமலை என்பவரது மகன் சுரேஷிடம் ரூ. 10 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் மாத வட்டியை சரியாக கொடுத்து வந்ததாகவும், ஆனால் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கந்து வட்டி கேட்டு தாக்கியதாக மாயக்காள் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை நடத்தினார். சுரேஷ், அவரது சகோதரர் முத்துக்குமார் மற்றும் மாரிச்சாமி ஆகிய 3 பேர் மீது கந்து வட்டி வழக்கில் வழக்குப்பதிவு செய்து சுரேஷை, போலீசார் கைது செய்தனர்.

    மதுரை அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், கருமாத்தூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கற்பகம் (வயது 19). செக்கானூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கற்பகம் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அந்த கல்லூரி அருகே டெய்லரிங் கடை நடத்தி வந்தவர் மான்சிங். உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த இவர், மாணவி கற்பகத்தை காதலித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருமண ஆசை காட்டி கற்பகத்தை மான்சிங் கடத்திச் சென்று விட்டார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

    செக்கானூரணி போலீ சில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவியையும், கடத்திய வாலிபரையும் தேடி வருகிறார்கள்.

    மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சண்முகப்பாண்டி (வயது 23).

    பிரபல ரவுடியான சண்முகப்பாண்டி மீது மதுரை நகரில் நகைபறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சண்முகப்பாண்டி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

    இதையடுத்து சண்முகப் பாண்டி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தனியார் வங்கி இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க வீரர்கள் தீவிர பணியில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் 100 அடி ரோட்டில் பிரபல வணிக வளாகம் அருகே உள்ள கட்டிடத்தில் 2-வது மாடியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் இன்சூரன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் தீப்பிடித்தது. இதனால் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக 3 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் ராட்சத ஏணியை பயன்படுத்தி 2-வது மாடிக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் நேரம், ஆக... ஆக... அங்குள்ள அலுவலகம் முழுவதும் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால் தீயை அணைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் 30-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனாலும் புகை மண்டலம் இன்னும் இருப்பதால் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த தீ விபத்து காரணமாக இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பர்னிச்சர் வகைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.


    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    2 மணி நேரமாக தீ பிடித்ததால் அங்குள்ள சேத மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள கட்டிடம் தீ பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு தீயை அணைக்கும் பணிக்கு உதவினர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #Tamilnews
    மதுரையில் செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த டவரில் செல்போன் சிக்னலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சக்தி வாய்ந்த 15 பேட்டரிகள் திடீரென காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.

    இதுதொடர்பாக அங்கிருந்த பாதுகாவலர் ரவிச்சந்திரன் மேலவளவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 52), ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த செல்வமூர்த்தி (17) ஆகியோர் இந்த பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை, மதுரை, கோவை மண்டலத்தில் என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன. ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம் புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.



    அதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இள நிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    எனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்தியது தொடர்பாக 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் மற்றும் முல்லை பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

    ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு கலெக்டர் அலுவலக மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது தேசிய கூட் டுறவு சர்க்கரை ஆலையில் 3 ஆண்டுகளாக அரவை செய்த கரும்பு கொள்முதல் தொகை ரூ. 212 கோடியை உடனே வழங்க வேண்டும்.

    தமிழக அரசு வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது. கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இந்த மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாய சங்கத் தலைவர்கள் பழனிச்சாமி, முருகன், அப்பாஸ் மற்றும் 75-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    மதுரையில் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தமுக்கம் மைதானம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தது.

    பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை.

    இதற்குள் அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டமும் வருவதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.

    இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்தப்பகுதி மக்கள் வங்கிக்கும், தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏ.டிஎம். மையத்தை ஆய்வு செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகரின் மையப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே இளம்பெண் கடத்தியதாக வாலிபர் உள்பட 6 பேர் மீது அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ஷாலினி (வயது 18).

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஷாலினி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து முருகேசன், அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சாக்ரடீஸ் மகன் சச்சின் என்பவர் கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு உடந்தையாக அவரது தாயார் சாரதா, உறவினர்கள் பிச்சை, முத்துப்பிள்ளை, பாசப்பிரியன், சசி ஆகியோர் உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    மதுரை அருகே ரூ.5 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தென்கரையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் மதுமிதா (வயது 20). விவசாய கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று செல்வம் வேலைக்கு சென்று விட, சாந்தி வங்கிக்கு சென்று விட்டார். வீட்டில் மதுமிதா மட்டும் தனியாக இருந்தார்.

    சிறிது நேரத்தில் சாந்தி வீட்டுக்கு வந்தபோது மதுமிதா மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சாந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகளை கடத்தி இருக்கிறோம். ரூ. 5 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் என்று மிரட்டி விட்டு செல்போன் அழைப்பை துண்டித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி மிரட்டல் குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மிரட்டல் வந்த செல்போன் எண் ஹரீஷ் என்பவரது முகவரியில் வாங்கியிருப்பது தெரியவந்தது. மதுமிதா உண்மையில் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஷால் அறிவித்துள்ளார். #Vishal #Sandakozhi2
    விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `இரும்புத்திரை'. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

    வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 



    விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரபேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசும்போது, 

    `சண்டக்கோழி-2' முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். சங்கத்திலும் அனுமதி கேட்க இருக்கிறோம் என்றார். #Vishal #Sandakozhi2

    மதுரையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 14).

    இவன், விராட்டிப்பத்து பகுதியில் உள்ள மர ஆலையில் வேலை பார்த்து வந்தான். கடந்த 12-ந் தேதி ராஜபாண்டி அங்கு பணியில் இருந்த போது கங்காராம் (50), பவானி ஆகிய 2 பேர் எந்திரத்தை சுத்தம் செய்யுமாறு கூறினர். அதனை செய்தபோது மின்சாரம் தாக்கியதில் ராஜபாண்டி தூக்கிவீசப்பட்டான்.

    அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்றவர்கள், மயங்கி விழுந்த ராஜ பாண்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி பரிதாபமபக இறந்தான்.

    இது குறித்து அவனது தந்தை கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காராம், பவானி ஆகியோரை கைது செய்தனர்.

    ×