search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • மதுபான கடையை மூட வேண்டும் என கலெக்டரிடம் பாஜக வக்கீல் அணியினர் மனு கொடுத்தனர்
    • மது குடிக்க செல்பவர்கள் டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திரும்பி வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருச்சி:

    பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சென்னை செல்லும் பைபாஸ், சர்வீஸ் ரோட்டில் நடத்தப்பட்டு வந்த டாஸ்மாக் கடையானது, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் மூடப்பட்டது. தற்போது டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழி பாதையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மது குடிக்க செல்பவர்கள் அதே வழியில் திரும்பி வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அது மட்டுமல்லாமல் அந்த கடைக்கும் டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் ஸ்டாப்பிற்கும் 200 மீட்டர் அளவே தூரம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் அந்தப் பகுதியில் உள்ள மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பஸ்களில் ஏறி இறங்குகின்றனர். மேலும் அந்த கடைக்கு பக்கத்தில் பக்தர்கள் வழிபடும் சங்கிலியாண்டவர் முத்து மாரியம்மன் கோவில் ஐயப்ப சேவா சங்கம் இருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை.

    ஆகவே பொது மக்கள், கல்லூரி மாணவர்கள், பயணிகள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையி டி.வி.எஸ். டோல்கேட், தஞ்சாவூர் வழி பஸ் நிறுத்தத்திற்கு அருகாமையில் ஒருவழி சாலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை முற்றிலுமாக அகற்றி விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






    • 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை.
    • நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வக்பு வாரிய நிலம் என கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வடுகபாளையம் கிராமத்தில் ராமமூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசுவதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை. இந்த பிரச்சினையால் நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • வாராந்திர சிறப்பு முகாமில் நேரடியாக சந்திப்பு
    • உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன.

    இதற்காக போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் கீழ் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு காலை முதல் மதியம் வரை இன்ஸ்பெக்டர் தலை மையில் 3-க்கும் மேற்பட்ட போலீசார் புகார் மனுக்களை பெறுகின்றனர். மேலும் அவ்வப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார்.

    இவ்வாறு பெறப்படும் புகார் மனுக்கள் சம்பந்த ப்பட்ட போலீஸ் நிலை யங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் ஒரு சிலர் தங்களுடைய புகார் தொடர்பாக நடவ டிக்கை எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் வந்து மனு கொடுக்கின்றனர்.

    எனவே அதுபோன்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், நிலுவையில் உள்ள புகார் மனுக்களை விரைந்து விசாரணை நடத்தும் வகையிலும் புதிய நடைமுறையை தற்போது அரசு அமல்படுத்தி உள்ளது.

    அதாவது ஏற்கனவே மனு அளித்தும் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி அடையாதவர்களிடம் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மனுக்கள் பெற்று 15 நாட்களுக்குள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை தோறும் நடை பெற்று வருகிறது.

    இன்று நடந்த சிறப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உறுதி அளித்தார்.

    இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு வழங்கினார்கள்.மேலும் போலீசார் தங்களது குறை களை தெரிவிப்ப தற்காக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் உள்ள மனுக்களையும் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் எடுத்து பார்வை யிட்டார்.

    • கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட புனல்வாசல் அரசு பள்ளி மாணவர் விடுதி , தஞ்சாவூர் அரசு கல்லூரி மாணவியர் விடுதி , தஞ்சாவூர் அரசு கல்லூரி மாணவியர் விடுதியின் இடைநிலைக்காப்பாளர், பட்டதாரி காப்பாளனிகளுக்கு பரிசுத்தொகை சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஸ்ரீகாந்த் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் பணி நிரந்தரம் செய்ய கோரி தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்
    • கரூர் மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ள தாவது:கரூர் மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற னர். ஆனால், தற்போதைய நிலவ ரப்படி 500 பேருக்கும் குறைவாகவே பணியாற்றுகின்றனர். இவர்களில் தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி குப் பைகளை தரம்பிரித்து இயற்கை உரம் தயாரித்தல், சுகாதார மேற்பார்வை யாளர்கள், குடிநீர் விநியோகிப்பவர் கள், பிளம்பர்கள், கணினி இயக்குப வர்கள், தரவு உள்ளிட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். விரைந்து இவர்களில் 300 பேர் நிரந்தரப்படுத்தப்படாத தொழிலாளர்களாவார்கள்.இதேபோன்று குளித்தலை, பள்ளப்பட்டி புகலூர் ஆகிய நகராட்சிகள் அரவக்குறிச்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், நங்கவரம், புலியூர்,உப்பிடமங்கலம் பேரூராட்சிகளிலும் பணியாற்றுகின்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்டத்தில் நகர்ப் புற உள்ளாட்சிகளில் நிரந்தர தொழி லாளர்களைவிட நிரந்தரம் இல்லாத தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர வயது மற்றும் அதிக வயதை கடந்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு என பணி வாய்ப்பு என்பது வேறு எங்கும் சென்று தேட இயலாத நிலையில் உள்ளனர். எனவே, தொழிலாளர்களின் நிலையை கருதி பணி நிரந்தரம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







    மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை திருப்பூர் நிட்மா சங்க இணை செயலாளர் கோபி, டையிங் சங்கம் இணை செயலாளர் செந்தில்குமார், டிப்சங்க தலைவர் அகில் மணி, எம்பிராய்டரி சங்கம் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜன்பாபு, பிரிண்டிங் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன்,வசந்த்குமார் உள்ளிட்ட பனியன் தொழில் துறையினர் சந்தித்தனர். அப்போது மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

    • உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கோரிக்கை மனு அளித்தார்.
    • பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட முனிசிபல், டவுன் பஞ்சாயத்து , பஞ்சாயத்து பொதுபணியாளர்கள் சங்கம், கிராம பஞ்சாயத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளாட்சி சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நல்லம்பள்ளி பி.டி.ஓ. கவுரியிடம் உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவில் பஞ்சாயத்துகளில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வும், நிலுவை தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    15 ஆண்டுகளாக அடிசனல் டேங்க் ஆப்ரேட்டர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு அரசு குறிப்பாணைப்படி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.பணி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

    தூய்மை காவலர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மற்றும் பணி நேரம் தெரிவிக்க வேண்டும்.மேலும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, உபகரணங்கள், கையுறை, மாஸ்க், மழை கோட்டு வழங்க வேண்டும்.

    பணியாளர்களுக்கு பணி பதிவேடு தொடங்கி பராமரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    மனு அளித்த போது ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நிர்வாகிகள் தேவன், லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வருகை தந்த, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மற்றும் குழு உறுப்பினர்கள் நாகூர் சில்லடி கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, நாகூர் நகருக்கு பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் அதற்கேற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மேலும் நாகையில் அரசு மேல் நிலைப்பள்ளி அமைப்பது, சட்டக்கல்லூரி தொடங்குவது, புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது, திருமருகல் தனி தாலுகா அமைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்து, பொதுக் கணக்குக் குழு தலைவரிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ மனு அளித்தார்.

    இந்தக் கோரிக்கைகளை அரசுக்கு பொதுக் கணக்குக் குழு பரிந்துரைக்கும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
    • மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார்.

     அவினாசி:

    அவினாசி அருகே மயான சாலையை மீட்டுத்தர வேண்டி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் இராமநாதாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி தாலுகா அலுவல்கத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால மயானத்திற்கு செல்லும் வழியில்லாத நிலை ஆகிவிட்டது. எனவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மயான சாலையை மீட்டுத் தரவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாற்காலியில் உட்கார வைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்
    • வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அலுவல கத்தில் வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் பொது மக்களை நேரடி யாக சந்தித்து மனுக்களை பெற்றார்.

    ஏராளமானோர் தங்க ளின் புகார் மனுக்களை கொடுக்க வந்த னர். மாற்றுத் திறனாளி ஓருவரும் இன்று மனு கொடுக்க வந்தார். அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுபடை போலீசார் நாற்காலியில் அமரவைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளியான அவர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் மனு கொடுத்துச் சென்றார்.

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து மனுக்களை விசாரித்து பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஊன்று கோலினை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • ஒரு பயனாளிக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சாந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு , கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கலெக்டர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1,70,000 மதிப்பில் தொகுப்பு நிதி கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வட்டத்தை சார்ந்த 1மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொ கைக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முப்படை வீரர் வாரிய உப தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக நல அமைப்பாளி இளங்கோவன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×