search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • ஆண்டுக்கு 30 ஆயிரம் வரை மின் கட்டணம் கட்டுவதாக வேதனை
    • மாவட்ட நிர்வாகத்தினம் மனு அளித்தனர்

    கரூர், 

    விவசாய மின் இணைப்புகளை, இலவச மின்சார திட்டத்தில் சேர்க்க கோரி, லாலாப்பேட்டை, பிள்ளபாளையம் மற்றும் மருதாண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர், மாவட்ட நிர் வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்க காலம் தாமதம் ஆகிறது. ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. விவசாய பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது, கூலி ஆட்கள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு போன்ற காரணங்களால் மின் கட் டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே எங்களது விவசாய மின் இணைப்புகளை, இலவச மின் இணைப்பாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

    • சித்திரைப்பெருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்தனர்.
    • மாநகராட்சி நிர்வாகம் கணிசமான நிதியை ஒதுக்கி கங்கை, காவிரி போல ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம், பேச்சியம்மன் பகுதிகளில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் இந்த மாதம் 23-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக மே 5-ந் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. விழாவை காண மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். விழாவையொட்டி வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

    கள்ளழகரை காண ஆற்றில் இறங்கிய பக்தர்கள், இருபுறமும் தடுப்புச் சுவர்கள் கட்டியதால் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. நடப்பாண்டு வைகை ஆற்றில் பக்தர்கள் ஏறி இறங்க வசதியாக ஓபுளா படித்துறை, ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் சிரமமின்றி ஆற்றுக்குள் இறங்கி அழகரை தரிசித்து கரையேற முடியும். முடி காணிக்கை செலுத்துபவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராடி வெளியேற இயலும். மாநகராட்சி நிர்வாகம் கணிசமான நிதியை ஒதுக்கி கங்கை, காவிரி போல ஓபுளா படித்துறை ஆழ்வார்புரம், பேச்சியம்மன் பகுதிகளில் படித்துறைகள் அமைக்க வேண்டும்.

    சித்திரை திருவிழாவை தேசிய விழாவாக பிரதமர் மோடி அறிவிக்க ஏதுவாக, மதுரையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அழகர் கோவிலில் இருந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடம், ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கும் பகுதி, வண்டியூர் மற்றும் அழகர் திரும்பிச் செல்லும் வழித்தடங்கள் ஆகியவை புனித பாதையாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர்.
    • வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ராம்.கண்ணையன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தனசீலன், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, செயலாளர் லாலா கணேசன், மாநகர தலைவர் ஜான்வல்தாரிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    பல்லடம் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவன ங்களுக்குள் திருநங்கைகள் புகுந்து கட்டாயமாக பணம் கேட்டு தொல்லை தந்து வருகின்றனர். அவர்களுக்கு பணம் தரவில்லை என்றால் கூட்டமாக வந்து மிரட்டுவது ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் வணிகர்கள் நிம்மதி இழந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 25ந் தேதி பல்லடத்தில் தள்ளு வண்டியில் துரித உணவு வியாபாரம் செய்து வரும் இசக்கிபாண்டி என்பவர் மீது திருநங்கைகள் கடுமையாக தாக்குதல் நடத்திபலத்த காயத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வியா பாரியை தாக்கியவர்க ளை கைது செய்ய வேண்டும். மேலும் பல்லடம் நகரில் உள்ள வியாபாரிக ளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற விதமாக, அனைவரையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்கள்
    • அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்கள்.

    பாபநாசம் தாலுகா வீரமாங்குடி கிராமத்தில் கரும்பு சாகுபடி அச்சு வெல்லம் தயாரிப்பில் தமிழக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த அச்சு வெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி.

    மேலும் அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடையிலும் விற்பனை செய்ய வேண்டும். பள்ளியக்ரஹாரம் முதல் கும்பகோணம் வரை சேதமடைந்து காணப்படும் சாலைகளை சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது.
    • ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அலகுமலை ஊராட்சி பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு வட்டம், அலகுமலை ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு விழாவானது நடைபெற்றது. இதனால் நாங்கள் பட்ட கஷ்டங்களை மனுவாகஎழுதி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து இருந்தோம்.

    ஆனால்25.3.2023 அன்று அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்றுதமிழ்நாடு செய்திதுறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். 22.3.2023 அன்றுநடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் அலகுமலை ஊராட்சியிலும் அலகுமலையை சுற்றிலும் குறிப்பிட்டதூரம் ஜல்லிக்கட்டுவிழா நடைபெற வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட வேலை செய்து வருகிறார்கள். இதனால் அலகுமலைமக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலைஉருவாகி உள்ளது. வரும் நாட்களில் மேலும் மக்களிடம் பதட்ட சூழ்நிலைஉருவாகும் சூழல் உள்ளது. எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு ஜல்லிகட்டு விழா தொடர்பான நடவடிக்கை யை நிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உண்டான பொருட்களை அப்புறப்ப டுத்த வேண்டும். மேலும் அலகுமலை ஊராட்சி கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என தெரிவித்து ள்ளனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில்இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது. 

    • அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
    • அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைத் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம் ஆனால் நாட்கள் ஓடியும் மீண்டும் பணம் தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். எனவே பிட் காயின் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் .

    விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கவேண்டும்.

    எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
    • அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை வகித்தார்.

    இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    இதைத் தொடர்ந்து அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • என்.எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் அனுமதி அளிக்க கூடாது மாநகராட்சி ஆணையரிடம் மனு
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பேட்டி

    திருச்சி,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் வணிகர் சங்க நிர்வாகி கள்,,தொழிலதிபர்கள் ஆகியோர் ஆணையர் வைத்திநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.பிறகு கோவிந்தராஜுலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். நடைபாதை மற்றும் சாலையோர கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபாதை கடைகளுக்கென பிரத்தியேகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் கடைகளை நடத்தி வருகின்றனர். அதே போன்று திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் வியாபாரம் செய்துகொள்வதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. எனினும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரதோப்பு, தேரடிக்கடை வீதி, பெரியகடை வீதி, நந்தி கோவில் தெரு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் சாலையோர' வியாபாரிகளுக்கென கடைகள் ஒதுக்கீடு செய்திடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். மேலும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். எங்கள் தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே அவர்களுக்கு இடம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் .பெரிய வணிக நிறுவனங்களுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

    • சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • கழிவுநீர் கால்வாய் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைத்து தரவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சி லரும், ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.நாகராஜ் மேயர் தினேஷ்கு மாரை நேரில் சந்தி த்து அடிப்படைவசதிகள் தொடர்பாகமனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- 24-வது வார்டுக்குட்பட்ட அம்மன் வீதிகள் முழுவதும் 4-வது குடிநீர்திட்ட குழாய் அமைக்கும் பணி நிறைவ டைந்துள்ள நிலையில் சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த பகுதியில் வீடுகளுக்கு இன்னும் பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க ப்படவில்லை.அந்த பணிகளும் நிறைவடை ந்தால் சாலைகள் மேலும் பழுதடையும். எனவே வீடுகளுக்கான பாதாள சாக்கடைஇணைப்பு பணியை விரைந்து முடித்து அம்மன் வீதிகள் முழுவது ம்சாலையை சீரமைத்து தர வேண்டும்.மேலும் அம்மன் வீதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து இருப்பதாலும், சாலைகள் குறுகிய சாலைகளாககாணப்படு வதாலும்கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல் வார்டுக்குட்பட்ட திருமலைநகர்,சத்யாநகர், அறிவொளிவீதி, டி.என்.சேஷன் வீதி,லட்சுமி தியேட்டர் பிரதான சாலை, ராமர் வீதி, சண்முகாநகர், ஆர்.பி.கே.கம்பெனி வீதி, முருங்கை தோட்டம், செல்லம்மாள் காலனி, திருநீலகண்டர்வீதி, அம்சவிநாயகர்கோவில் கிழக்கு பகுதி, ஆர்.ஜி.பி. குடோன் வீதி ஆகிய பகுதிகளில்கழிவுநீர் கால்வாய்பழுதடை ந்துள்ளதால்அதை சீரமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.முன்னதாக 24-வது.வார்டு க்குட்பட்ட பகுதிகளில் காணப்படும்அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை படத்துடன் கூடிய தொகுப்பாக கவுன்சிலர் நாகராஜ், மேயர், கமிஷனர் ஆகியோ ரிடம் வழங்கினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
    • முகாமிற்கு சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் 721 மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதில் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்களை கண்டறிந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரியதாழை, படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மனுக்கள் பெறும் முகாம் பெரியதாழையில் நடைபெற்றது. சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். வட்ட துணை ஆய்வாளர் மகராசி முன்னிலை வகித்தார். முகாமில் பெறப்பட்டமனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், பள்ளக்குறிச்சி சார் ஆய்வாளர் தேவிதா, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார், வருவாய் உதவியாளர் மாரியம்மாள், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், சங்க நிர்வாகி ஐசக் ஜோசப், பெரியதாழை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தியா,மாவட்ட மீனவரணி செயலர் ரமேஷ், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி பல கிராமங்கள் இருப்பதால் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

    கடந்த 2012 அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கடலாடி ஒன்றியத்தில் இருந்து சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை.

    சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


    கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்.

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதி-1 குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்்ந்த பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பட்டணம் காத்தான் பகுதி 1-ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் இளை ஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மேலும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருவதில் அச்சுறுத்தல் உள்ளது. சட்டவிரோமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×