என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 109979"
நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல வருகிற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்.
நோட்டீசு அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச் செல்வன், இருவரும் இதற்கு முன்பு அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்தனர். சசிகலா தலைமையில் ஒரு அணியாக செயல்படுவதற்கு 20 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் கையெழுத்து போட்டு கொடுத்ததில் இவர்கள் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் இரு எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர். இப்போது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அ.ம.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். எனவே இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது சபாநாயகர் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது.அதையும் மீறி தகுதிநீக்கம் செய்தால் 6 மாதத்தில் தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர். அதன் பலன் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. வுடன் தேர்தல் கூட்டணி அமைந்தது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில் 17-வது மக்களவை தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதால் வருகின்ற மே 19-ந் தேதி மீதியுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து சபாநாயகரை சந்தித்து இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிகழ்வு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என்பதில் அ.தி.மு.க.வை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் கவர்னரும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது.
சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரை பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் சபாநாயகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகர்களை எச்சரித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் முதல்-அமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் சபாநாயகர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் மீது தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.
ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.
அதேபோல், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.
அதனை தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.
அதேசமயம், பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ், அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது” என்றார்.
மேலும் அவர், “எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஓட்டுபோடும்படி அவர்களை கேட்க முடியாது” என கூறினார்.
சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
இதற்கிடையில், சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்திரி சபையை கூட்டி தெரசா மே அவசர ஆலோசனை நடத்தினார். #BrexitDeal #TheresaMay #JohnBercow
இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்க மறுப்பதாக அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் அறிவித்தனர்.
இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவு உறுப்பினர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.
அவரது பேச்சை ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் பாராளுமன்றத்தில் கூச்சலும், குழப்புமும் நிலவி வருகிறது.
இருதரப்பு எம்.பி.க்களும் ஒருவரையொருவர் திட்டியும், மிரட்டியும் கைகலப்புக்கு தயாராகி வருவதால் பாராளுமன்றம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. #MahindaRajapaksa #Srilankaparliament
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் இன்று பாஜகவில் இணைந்துள்ளேன். மிசோரமில் அடுத்த ஆட்சி பாஜக தலைமையிலான ஆட்சிதான். கிறிஸ்தவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை நான் அனுபவபூர்வமாக சொல்கிறேன். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில், அரசியலமைப்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நாட்டை வழிநடத்தும் சக்தியாக மதச்சார்பின்மை நீடிக்கிறது. அதனால் அச்சுறுத்தல் எங்கே உள்ளது?
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது, மாரா தன்னாட்சி மாவட்டக் குழுவிற்கு அதிக அதிகாரம் வழங்குவதாக இருவரும் உறுதி அளித்துள்ளனர்.
அரசியல் உணர்வைப் பொருத்தவரை காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், மிசோரம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வரின் செயல்பாடுகள் என்னை காயப்படுத்தின. போட்டியிட சீட் கிடைப்பது முக்கியமல்ல, மரியாதைதான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
50 ஆண்டுகளாக கட்சிப்பணியாற்றிய ஹிபேய் விலகியது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5 தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி உள்ளனர். #MizoramSpeaker #MizoSpeakerResigns
தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள விடுதியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி வீடு உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வரை இந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம். இரண்டு படுக்கை அறைகொண்ட விசாலமான இந்த வீட்டுக்கு மாதவாடகை ரூ.200 ஆகும். எம்.எல்.ஏ.பதவி காலியான பிறகு வீட்டை காலி செய்யாமல் இருந்தால் மாத வாடகை ரூ.5375 கொடுக்க வேண்டும்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், வெற்றிவேல் உள்பட 18 பேர் சபாநாயகரால் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள 18 பேரின் வீடுகளை அதிகாரிகள் பூட்டி விட்டனர்.
மதுரை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் மதுரையில் 2 தினங்களாக தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தினகரனை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்றிரவு சந்தித்து பேசினார்.
அப்போது தினகரனுக்கான ஆதரவு நிலைப்பாடு, இதற்காக அ.தி.மு.க. நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.
பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரது அங்கீகாரம் போதும்.
கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தை ஒன்றாக இணைக்கவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தொடங்கினேன். இதற்கான வாய்ப்பாக சட்டசபையில் நுழைந்தேன். அது நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுகிறது.
ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. அணி, அணியாகத்தான் உள்ளது. அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை.
சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விளக்க நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீசு வந்தால் அதை நான் சந்திக்க தயார்.
எனக்கு எதிராக செயல்படுவதற்காக பல்வேறு அமைப்பினருக்கும் அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் பணம் கொடுத்து தூண்டி விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #Karunas #TTVDhinakaran
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அதிமுக எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, டிடிவி தினகரனை ஆதரித்த 18 எம்எல்ஏ-க்களும் பதவியை இழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிமுகவில் இருந்து கொண்டே அதிமுக அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார்கள்.
இதனால் அவர்கள் பதவியை பறிக்க அதிமுக மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அந்த மூன்று எம்எல்ஏ-க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அதிமுக தலைவர்கள் முயன்றனர். ஆனால் மூன்று எம்எல்ஏ-க்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருந்து பின் வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 எம்எல்ஏ-க்கள் மீதும் எந்த நேரத்திலும் தகுதி நீக்கம் நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் 3 எம்எல்ஏ- க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ‘‘கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ADMK #Karunas #Kalaiselvan #Prabhu #RathinaSabapathy
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.
இவர் அ.தி.மு.க. குறித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சனம் செய்ததால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கருணாஸ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த மனு சபாநாயகரின் ஆய்வில் உள்ளது.
இதற்கிடையே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள கருணாஸ், சபாநாயகரை பதவி நீககம் செய்யகோரி தனது வக்கீல்கள் மூலம் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
இந்த மனு சட்டசபை கூடும்போது முதல் அஜண்டாவில் வைக்கப்படும். 35 பேர் மெஜாரிட்டி இருந்தால் விவாதம் நடைபெறும். இல்லை என்றால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:-
சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தனித் தீர்மானம் யார் கொண்டுவர நினைத்தாலும் எழுத்துப் பூர்வமாக 14 நாட்களுக்குள் முன்னறிவிப்புடன் சட்டசபை செயலாளருக்கும், அதன் பிரதியை சபாநாயகரிடமும் கொடுக்க வேண்டும்.
இதை சட்டசபை கூடும்போது முதல்நாள் பட்டியலில் சேர்ப்போம். சட்டசபையில் இதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தரவேண்டும். போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும்.
உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் 7 நாட்களுக்குள் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும். அப்போது துணை சபாநாயகர் இந்த சபையை நடத்துவார்.
சட்டசபையில் தி.மு.க.வுக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம் கேட்டதற்கு கருணாஸ் தி.மு.க.விடம் ஆதரவு கேட்டால் அந்த நேரத்தில் கட்சி மேலிடம் இதை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். #Karunas #Speaker
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்