search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110052"

    • திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று உள்ளூர் விடுமுறை.
    • சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 27.08.2022 அன்று பணி நாள்.

    44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு செயலாளர் டி.ஜகந்நாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

    மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு 28.07.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 28.07.2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேற்காணும் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று (நான்காவது சனிக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

    மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
    • செஸ் ஒலிம்பியாட் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடைபெறுகிறது.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் நேற்று சென்னை விமானநிலையம் வந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரியனியனா, ஹெரிடியனோ, டொவினா, சார்லி மகானிகஜா ராஜெரிசன், ராகோடாமகரோ, ராமலன்சனோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களை வரவேற்ற அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் ஓட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று தங்க வைத்தனர்.

    உஸ்பெகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹாங்காங், வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இன்று சென்னை வருகிறார்கள். இதேபோல் போட்டியை நடத்தும் முதன்மை நடுவர் உள்பட 90 பேர் சென்னை வந்துள்ளனர்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    • இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பாபநாசம் கீழ கஞ்சிமேடு மெயின் ரோட்டில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 30) மனைவி கவிதா (22) சேர்க்கப்பட்டார்.

    இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கவிதாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவிதா இறந்த போய்விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த கவிதாவி னன் உறவினர்கள் மருத்து வமனை முன்பு திரண்டனர். கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் துணை சூப்பிரண்ட் பூரணி, பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் - இன்ஸ்பெக்டர் இளமாறன், மண்டல துணை தாசல்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா இறப்பு குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொ ண்டனர்.

    உறவினர்கள் திரண்டு வந்து கவிதாவின்உடலை வாங்க மறுத்து மருத்துவம னையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இறந்த கவிதாவை பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
    • 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன.

    திருப்பூர் :

    தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுஓட்டுப்பதிவு எந்திரங்களை 6 மாதங்களுக்கு, சட்டசபை தொகுதி வாரியா, அனைத்து ஆவணங்களுடன் பாதுகாக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக இவற்றை பயன்படுத்துவது வழக்கம்.

    தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஏப்., 6-ந் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, மே 2-ந் தேதியும் நடந்தது. அடுத்த 6 மாதங்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஆவணங்களுடன் பாதுகாக்கப்பட்டன. இடையே ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அந்த காலகட்டத்தை நீக்கி 2022 மே 31 வரை, கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்பட 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன. அவற்றை மாவட்டம் வாரியாக இருப்பு வைக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பழுதான எந்திரங்களை தனியாக பிரித்து வைத்து, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேதியில்அவற்றை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. இளைஞர் அணியினர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
    • கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர்அணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதற்கிடையில் தடையை மீறி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி செல்வதற்காக பா.ஜ.க. இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்றதாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
    • இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மணிரத்தினம், பரமகுரு உள்பட 15 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.

    வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு அக்கரைப்பேட்டை வழியே நாகை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர். அப்போது டிக்கெட்டை கண்டக்டர் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

    டிக்கெட்டை ஏன் தூக்கி வீசுகிறீர்கள் என மணிரத்தினம், பரமகுரு மற்றும் அவருடன் வந்தவர்கள் தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிரத்தினம் தரப்பினர் கண்டக்டரை தாக்கியதாக தெரிகிறது.

    இதை பார்த்த பஸ்சில் இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மணிரத்தினம், பரமகுருவை கத்தியால் குத்தினர்.

    இதனால் ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து மற்ற பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    சென்னை:
     
    கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி மாரிமுத்து கூறுகையில்,  ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றதும் நான் பயற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார். #AsianAthleticChampionships #Gomathi #Stalin
    அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #LSPolls #ADMK #Manisfesto
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை நேற்று அறிவித்தது.

    இந்நிலையில், அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #LSPolls #ADMK #Manisfesto
    சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அம்பத்தூர்:

    ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டும் தேவை யான முன்னேற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். மது போதையில் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத் தில் சென்று பைக் ரேசில் ஈடு படுபவர்களை கட்டுப்படுத் துவதற்காக முக்கிய சாலை களில் தடுப்புகளும் அமைக் கப்பட்டிருந்தன.

    100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது. இருப்பினும் இதையும் மீறி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நெற்குன்றம் நியூ காலனி பெருமாள் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் நர சிம்மன் (40). போர்வெல் மெக்கானிக். இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நரசிம்மன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த நர சிம்மன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தில் பாலத்தின் நடுவே உள்ள தடுப்பில் மோதி அபிலேஷ் என்ற வாலிபர் பலியானார். தண்டையார்பேட்டையை சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகி இன்னும் ஒராண்டு கூட முடியவில்லை.

    புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய போது நள்ளிரவு 12.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

    இதேபோல் கொரட்டூரில் பிஞ்சிஸ்படேல், வினோத், தரமணியில் பாஸ்கர், கோடம்பாக்கத்தில் ஜெய சுதன், வேளச்சேரியில் புருஷோத்தமன் ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    120-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    சென்னையில் கடந்த 53 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.10.45 குறைந்து நேற்று ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது. #Petrol #Diesel
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.05-க்கு விற்பனையானது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி உச்சத்தின் உச்சமாக பெட்ரோல் விலை ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ந் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1.50-க்கு குறைத்தது. இதனால் மராட்டியம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான தங்களது வரியையும் சற்று குறைத்தன. இதனால் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.

    சென்னையில் கடந்த அக்டோபர் 4-ந் தேதி ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 53 நாட்களில் ரூ.10.45 குறைந்து நேற்று ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று ரூ.79.79-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.7.02 குறைந்து ரூ.72.77-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தற்போது தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
    தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சுமார் 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். #Diwali #TNSTC #SETC
    சென்னை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். 

    நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். #Chennai #CarAccident
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று பிற்பகலில் சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. கார் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    ×