என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 111010
நீங்கள் தேடியது "slug 111010"
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். #Congress #RahulGandhi #AgricultureBudget
லக்கிம்பூர் கேரி:
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய இடங்களில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஒரு பொது பட்ஜெட்டும், ஒரு விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம்.
தற்போது, ரூ.20 ஆயிரம் வங்கிக்கடனை திரும்ப செலுத்த தவறினால் கூட விவசாயிகளை ஜெயிலில் தள்ளுகிறார்கள். விவசாய பட்ஜெட், இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்டும். விவசாயிகள் கவுரவமான முறையில் வாழலாம்.
அதுபோல், 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளோம். என்ன விலை கொடுத்தாவது அதை நிறைவேற்றுவோம்.
ஆனால், பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறி ஏழைகளை ஏமாற்றி விட்டார். அவர் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டை பெரிதும் பாதித்துள்ளது. வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவோம் என்ற வாக்குறுதி வெறும் பேச்சு என்றாகி விட்டது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் 3 ஆண்டுகளுக்கு வியாபாரிகள் எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டி இருக்காது. நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருகிறது. “காவலாளி ஒரு திருடன்” என்று குஜராத் மக்கள் கூட கூறத்தொடங்கி விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார். #Congress #RahulGandhi #AgricultureBudget

விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரிமூலம் அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்திசெய்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.
வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் தேவைப்படும்போது மீண்டும் வடவாறு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வீராணம் ஏரி பாசன பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கிறது. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், விழுப்பணங்குறிச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை துணைச் செயலாளர் முருகேசன், கலிய மூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கட்சியினருக்கு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி கட்சியின் மாவட்ட முடிவுகளை விளக்கியும் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார்.
மேலும் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நிதியை வரும் 25-ந் தேதிக்குள் வசூல் செய்து மாவட்ட கமிட்டியிடம் கொடுப்பது, விழுப்பணங்குறிச்சியில் இருந்து பாட்சா நகர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும், விவசாயத்தை அளிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.
நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். #PaddyCultivation
சென்னை:
கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.
நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
நடப்பாண்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. மேலும் நெல் சாகுபடி அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.
இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.
கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதையடுத்து மேட்டூர் அணை நிரம்பியதால் கடந்த ஜூலை 22-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பின்னும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியதால் தண்ணீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்முரமாக இறங்கினர்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் ஜூன் 12-ந்தேதிக்கு திறக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டாலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நடப்பாண்டில் மழை மற்றும் காவிரி நீரால் இதுவரை தமிழ்நாட்டில் 5.432 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு உயர்வாகும். கடந்த ஆண்டு 2.895 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக விவசாய துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவாரூரில் 1.70 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகையில் 81 ஆயிரம் ஹெக்டேர், தஞ்சாவூரில் 55 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பாசன நிலங்கள் காவிரி நீரால் பயன் அடைந்துள்ளன.
இதே போல் பலத்த மழையால் ஈரோடு, கோவை, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டு விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.
2016-17ம் ஆண்டு 35.54 லட்சம் டன் நெல் உற்பத்தியும், 2017-18ம் ஆண்டு 72.77 லட்சம் டன் நெல் உற்பத்தியும் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அதிகளவில் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PaddyCultivation
#CauveryWater #MetturDam
இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கல்லம்பாளையத்தில் நடந்த நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் இன்னசென்ட்திவ்யா பேசினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா ஊராட்சி ஒன்றியம் கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூட்டுப்பண்ணைய திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசியதாவது:-
நீலகிரி பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முயற்சி எடுக்க வேண்டும். அதற்கான செலவு மிகவும் குறைவு தான். மேலும் நுண்ணீர் பாசன முறையில் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே, விவசாயிகள் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் ஒரு நல்ல நிலையை அடைந்து உங்களுக்கும், சமுதாயத்துக்கும் பயன் உள்ளவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின பயனாளி ஒருவருக்கு செங்கல் சூளை வைப்பதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேருக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகள், மானிய திட்ட கையேடுகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லம்பாளையம் அரசு உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் காவல்துறை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அந்த பகுதியில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? என்று கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கல்லம்பாளையம், அல்லிமாயார் பகுதியில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள 3 ஆழ்துளை கிணறுகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். அப்போது, 2017-2018-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 27 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்பிரமணியம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் காசிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் பசுபதி, கோத்தகிரி தாசில்தார் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண் டனர்.

தாராபுரம் அருகே படிப்பு செலவுக்காக விவசாய கூலி வேலைக்கு வந்த நர்சிங் மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:
திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் ஏராளமானோர் வந்து தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் சரஸ்வதி (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
படிப்பு செலவுக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு 80 கி.மீட்டர் தூரமுள்ள தாராபுரம் அலங்கியம் பகுதிக்கு அந்த ஊரை சேர்ந்த பெண்களுடன் வேனில் விவசாய கூலி வேலைக்கு வந்தார். 4 நாட்களாக சின்ன வெங்காய அறுவடை வேலை செய்தார். வேலை முடிந்ததும் தோட்ட உரிமையாளர் ஒதுக்கி கொடுத்த ஒரு குடிசையில் தூங்கினார்.
சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தூங்கிய போது சரஸ்வதியின் காலில் பாம்பு கடித்தது. அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள் அவரை நாட்டு வைத்தியரிடம் அழைத்துச்சென்றனர். அங்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. இருந்தாலும் நிலைமை மோசமடைந்தது.
இதனையடுத்து சரஸ்வதியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குண்டம் அருகே வந்தபோது வரும் வழியிலேயே நர்சிங் மாணவி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று ஏரியில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமில்லாமல் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது.
பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1400 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவை விட 50 கன அடி குறைவாகும். நேற்று ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவு உள்ளது. தற்போது ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 76 கன அடி அதிகமாகும். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அந்த அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் நோக்கத்துடன் தான் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMmodi
புதுடெல்லி:
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
அதன்படி இன்று 600 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, 2017 - 18ம் ஆண்டில் 280 மில்லியன் டன் உணவு பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது 10.5 சதவிகித கூடுதல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு மண் வளம் காப்பது குறித்தும் மண்ணின் தரம் குறித்து அறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லிகளை உபயோகம் செய்வது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான விலையை எவ்வித இடைத்தரகரும் இன்றி நேரடியாக பெறுவதற்காக இ-நாம் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்தவே மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான நிதி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #PMmodi
×

X