search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளியல்"

    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல்.
    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சிலர், சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் எனப் பல மணி நேரம் குளியல் அறையிலேயே தவம் இருப்பார்கள். உண்மை அதுவல்ல. சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

    குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பதும், வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடலுக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம் ஆனால், அவை நம் சருமத்தைப் பாதிக்கும். இரண்டுமே நம் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியாக்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.

    சிலர் அதிக நேரம் குளித்தால்தான் உடல் சுத்தமாக இருக்கும் என நினைப்பார்கள். இது, தவறான நம்பிக்கை. உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமானது. சோப்பு மற்றும் ஷாம்பூ போடும்போது ஷவரை திறந்துவைக்கக் கூடாது. இதனால் மேனியையும் பாதுகாக்கலாம்; தண்ணீரையும் சேமிக்கலாம்.

    தலையில் அழுக்குப் படியாமல் இருப்பதற்கும், தலைமுடியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் தலை மற்றும் முடியின் வேர்களில் மட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் போதுமானது. கண்டிஷனரை முடிகளில் மட்டும் தடவுவதால், முடி வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும். மாறாக, இதைத் தலையில் தேய்த்தால், தலை எண்ணெய்ப் பசையோடு இருக்கும்; அழுக்கு படிவதற்கும் வழிவகுக்கும்.

    அதிக நுரை தரும் சோப்பு நம் சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். சோப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ரசாயனப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். கூடுமானவரைக்கும் ஆர்கானிக் சோப் அல்லது உடலின் எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

    உடலில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் ஸ்க்ரப்பரை நன்கு அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது புதிய ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இயற்கையான ஸ்க்ரப்பர் என்பது நம் கைகளே; அவை பாதுகாப்பானதும்கூட.

    குளித்து முடித்ததும் உடலில் உள்ள ரோமங்கள் சுத்தமாகவும் மிருதுவாகவும் இருக்கும். அப்போது ஷேவ் செய்வதும் சுலபமாக இருக்கும்.

    குளித்த பிறகு, உடலை, தூய்மையான துண்டால் துடையுங்கள். அழுத்தித் துடைக்காமல், மிருதுவாகத் துடையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துண்டை துவைப்பது கிருமிகள் உங்கள் உடம்பில் தொற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும்.

    குளித்துவிட்டு, உடலைத் துவட்டியதும் கட்டாயமாக பாடி லோஷனைத் தடவ வேண்டும். இது, நாள் முழுவதும் உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைத்திருக்கும். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெயை நான்கு முதல் ஐந்து சொட்டுக்களை உள்ளங்கையில் எடுத்து, நன்கு தேய்த்துத் தடவிக்கொள்ளலாம்.

    இதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் சருமம் என்றும் இளமை மிளிர ஜொலிக்கும்!

    கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மகன் விவேக் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது விவேக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

    இதைப்பார்த்த நண்பர்கள், விவேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் விவேக் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய விவேக்கின் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த விவேக்கின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    கும்மிடிபூண்டி அருகே மாயமான பள்ளி மாணவன் எண்ணூர் கடற்கரையில் பிணமாக கிடந்தான். நண்பர்களுடன் குளிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கும்மிடிபூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ரவி என்பவரின் மகன் செல்வம் என்கிற சாமுவேல்(19). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி, பள்ளியில் நடைபெறும் தனி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்ற செல்வம் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.

    அவரது நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித பலனும் இல்லை. மாணவர் செல்வம் மாயமானது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று எண்ணூர் கடற்பகுதியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவர் செல்வம் என்பது தெரியவந்தது.

    கடந்த 13-ந்தேதி நண்பர்களுடன் சென்னை விம்கோ நகரையொட்டி உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று செல்வம் குளித்து உள்ளார். அப்போது கடல் அலையில் சிக்கி மூழ்கி இருக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அதியமான்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்தான்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்துள்ள பூதனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் மகேந்திரன் (வயது12). இவர் தருமபுரி தொழில்மையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் மகேந்திரன் தனது நண்பர்களுடன் பூதனஅள்ளி அருகேயுள்ள மூடப்பட்ட கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார். அப்போது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த போது மகேந்திரனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். 

    இதை கண்ட சக நண்பர்கள் உடனே கல்குவாரி குட்டையில் இருந்து மேலே வந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனே அவர்கள் வந்து நீரில் மூழ்கிய மகேந்திரனை மீட்டு நல்லம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மகேந்திரன் உடலை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர். 

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் பூதனஅள்ளி கிராமத்திற்கு சென்று கல்குவாரி குட்டையில் பலியான மாணவர் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லித்துறை பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலிக்கோட்டை கிட்டியா கவுண்டனூரை சேர்ந்தவர் கணேசன் (48). இவரது மனைவி அன்னக்கிளி.இவர்களுக்கு தீபக் கிருஷ்ணன்(21), அன்பு(10) என்ற 2 மகன்கள் உள்ளனர். தீபக் கிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3 -ஆம் ஆண்டு படித்து வந்தார். 

    கணேசன் தனது குடும்பத்தினருடன் சோமனூர் கருமத்தம்பட்டியில் உள்ள உறவினர் முத்துசாமி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார். தீபக் கிருஷ்ணன் தனது கல்லூரி நண்பர்கள் கூறியதை மனதில் நினைத்து மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக தனது தம்பி அன்பு. மற்றும் நண்பர்கள் அருண்(16) ஜேம்ஸ்(19)தினேஸ்(19) ஆகியோருடன் வந்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நீச்சல் தெரியாது. அப்போது திடீரென தீபக்கிருஷ்ணன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தத்தளித்த அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். எந்த நோயாளிகள், எதனால் சுடுநீரில் குளிக்கக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளையும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

    சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.

    ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும்.

    எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.



    சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.

    நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

    அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
    குறிப்பு

    சில நோயாளிகள் வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள், ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும், எனவே வெந்நீரில் குளிப்பது நல்லது.
    ×