என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோடு"
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது.
மாவட்டத்தில் மொடக்குறிச்சி, முள்ளாம்பரப்பு, அரச்சலூர், ஆனைக்கால் பாளையம், லக்காபுரம், பூந்துறை, பூந்துறை வாய்க் கால்மேடு, 46 புதூர், சோலார் ஆகிய பகுதிகயில் அதிக பட்சமாக 51 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர், வனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் காய்ந்து கிடந்த வனப்பகுதி புத்துணர்ச்சி பெற்று வருகிறது. இன்று அதிகாலை வரை பெய்த மழையால் மொடக்குறிச்சி ஈரோடு பகுதிகளில் உள்ள ரோடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கோடைமழையால் ஈரோடு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Rain
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டம் தேர்ச்சி வீகிதத்தில் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-ம் பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 94 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 305 மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.38 ஆகும்.
இதே போன்று ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 404 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 533 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 17 ஆயிரத்து 379 மாணவ-மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 பேர் தேர்வு எழுதினர்.
இதில் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 152 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 323 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 16 ஆயிரத்து 680 மாணவ-மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஈரோடு:
ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
ராமசாமி மகன்நாராயண மூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே சொத்து தொடர்பாக தந்தை-மகன் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு இது தொடர்பாக மீண்டும் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்க மணிக்கு எழுதிவைப்பதாக கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயண மூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை சராமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணிக்கு ராமசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.
அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயண மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் பறக்கும் படைகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு பவானி பி.பி. அக்ரஹாரா சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரிய வந்தது. காரை ஈரோட்டைச் சேர்ந்த தாவூத் (வயது 47) ஓட்டி வந்தார் இவர் தோல் ஷாப் உரிமையாளர் ஆவார்.
வியாபாரத்துக்காக இந்த பணத்தை கொண்டுவததாக அவர் தெரிவித்தார். எனினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பவானியில் இருந்து ஒரு லோடு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரூ1.40 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. அந்த வேனை பவானியை சேர்ந்த கந்தசாமி (56) ஓட்டி வந்தார். மிளகாய் வியாபாரத்திற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால அந்த பணத்தை பறிமுதல்செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதனை ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர். #LSPolls
ஈரோடு, மார்ச். 26-
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரவீன் தாஸ் (50) என்ற ஜவுளி வியாபாரி வந்தார். அவரிடம் ரூ.2 லட்சம் உரிய ஆவணமின்றி இருந்ததாக தெரிகிறது.
தான் ஜவுளி வாங்க வந்ததாக பிரவீன்தாஸ் கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் வில்லரசம் பட்டி நால் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அங்கு வந்த ஒரு காரை சோதனை நடத்திய போது காரில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணமின்றி ரூ.1 லட்சம் இருந்தது. அவரும் ஜவுளி வாங்க இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.
அதே சமயம் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த பணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls
ஈரோடு:
ஈரோடு, கருங்கல் பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் பாளையம், சித்தன் நகர், 4-வது வீதி அருகே வாய்க்கால் கரையோரம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வடிவேல், ராஜேஸ்குமார், வடிவேல், மணிகண்டன், மணி, குமார் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணமும், சீட்டு கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி, மாரப்பா வீதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 36). இவரது மனைவி பவித்ரா.
பிரகாஷ் லஞ்ச்பாக்ஸ் என்ற பெயரில் ஹோம் டெலிவரி சர்வீஸ் வைத்து போன் செய்பவர்களுக்கு சாப்பாடு, டிபன் போன்றவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் வேலை பார்த்து வந்ததார்.
இந்நிலையில் கடந்த 5 -ந் தேதி மதியம் வாடிக்கையாளர் ஒருவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு பிரகாஷ் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பி வரவில்லை. திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பிரகாஷ் மனைவி பவித்ரா சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
மாயமான அன்று பிரகாஷ் வெள்ளை சட்டையும், கருப்பு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரது இடது கால் பாதத்தில் பாம்பு கடித்த தடிப்பு உள்ளது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரகாசை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் லோகு சாமி (வயது 48) இவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் டிரைவராக பணி புரிந்தார்.
இவரது மனைவி பெயர் ராதா மணி (35) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.
இதனால் மன வேதனையில் இருந்த லோகு சாமி வீட்டில் விஷம் குடித்து விட்டார் உடனடியாக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டது. டிரைவராக பழனிசாமியும், கண்டக்டராக சந்திரசேகரும் இருந்தனர்.
இந்த பஸ் சென்று கொண்டிருக்கும்போது முன்னே ஒரு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அதை ஈரோடு கொல்லம்பாளையம் கோபாலநாதபுரத்தை சேர்ந்த பிரதீஸ் (வயது 28) என்பவர் ஓட்டிச் சென்றார்.
பஸ்சுக்கு மோட்டார் சைக்கிள் வழிவிடாததால் டிரைவர் ஆரன் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பஸ் ஈரோடு கொல்லம்பாளையம் ரவுண்டானா அருகே வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த பிரதீஸ் பஸ்சின் முன்னே பைக்கை மறித்து பஸ்சை நிறுத்தினார். அவருடன் கொல்லம் பாளையம் எல்.ஜி.எஸ்.காலனியை சேர்ந்த இம்தியாஸ் (27), மோகன் (28) ஆகிய 2 வாலிபர்கள் வந்திருந்தனர்.
மொத்தம் 3 பேரும் அரசு பஸ்சை மறித்து டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டக்டர் சந்திரசேகர் அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 இளைஞர்களும் கண்டக்டரை தாக்கினர். மேலும் பஸ்சின் முன்புற முகப்பு விளக்குகளை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கொல்லம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டக்டர் பேக்கில் இருந்த ரூ.2 ஆயிரத்தையும் அவர்கள் பறித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பஸ்சை மறித்து கண்டக்டரை தாக்கி ரூ.2 ஆயிரம் பறித்ததாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.
இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.
உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.
அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார். #Karunanidhi #DMK
பழைய பென்சன் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடத்த சென்ற ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஈரோடு மாவட்டத்திலும் சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட செயலாளர் சுகுமார் நெடுஞ்சாலை துறை சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாவட்ட துணை செயலாளர் சிவகுமார், அந்தியூர் ஒன்றிய செயலாளர் நிக்கோலஸ் சகாயராஜ் மற்றும் தங்கராஜ், அண்ணாதுரை, மோகன், அண்ணாமலை உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று குடியரசு தின விழாவையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று பங்கேற்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.
மேலும் குடியரசு தின விழாவை புறக்கணித்தால், ஆசிரியர்கள் மீது ‘17-யு’ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் இன்று பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளில் நடந்த குடியரசு தின விழாவிலும் கலந்து கொண்டனர்.
பல பள்ளிகளில் 4 நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியர்-ஆசிரியர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மாணவ- மாணவிகள் கைத்தட்டி வரவேற்றனர். #JactoGeo
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும்.
தென் தமிழகத்தில் நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு இப்போது வட தமிழகத்திலும் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு கோவையில் பாலக்காடு மெயின் ரோட்டோரம் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டு ஈரோட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோட்டில் முதன்முறையாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் வரும் 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது.
இதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் தயார் செய்யப்பட்டு வாடிவாசலும் அமைக்கப்பட்டு உள்ளது.
மாடுகள் பாய்ந்துவரும் இடமும் தயாராகி இரு புறமும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை பார்த்து மகிழவும் இடம் தயாராக அமைக்கப்பட்டு தடுப்பு கம்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோட்டில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடக்க இருப்பதையொட்டி மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்க பெயர் கொடுத்து உள்ளனர். இவர்கள் தற்போது அதற்கான பயிற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் ஜல்லிக்கட்டு முதன்முறையாக ஈரோட்டில் நடக்க இருப்பதையொட்டி அதை நேரில் காண பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.
ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.
மேலும் மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்கிறார்கள். #Jallikattu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்