search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர்"

    பொன்னேரி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் காட்டாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு 2 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    டிராக்டரில் மணல் கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. மணலுடன் டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அரசூர், காட்டாலூரை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் நாசமாயின.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 45). இவர் தனது டிராக்டரில் அருகாமையில் உள்ள கோவிந்தம் பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லை என்ற பகுதியில் வந்த போது டிராக்டரில் இருந்த வைக்கோல் தார் சாலையின் மேல் சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த செந்தில்குமார் டிராக்டரை நிறுத்தி டிப்பரிலிருந்து என்ஜினை கழற்றி வெளியே எடுத்து சென்றார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிப்பர் மற்றும் வைக்கோலில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் டிப்பரின் பாதி பாகம் தீயில் எரிந்தது. #tamilnews
    பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மினி லாரி ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கத்தின் மினி லாரிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் தங்களது லாரிகளை பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளில் பேட்டரிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் பேட்டரிகளை கழற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதில் ரஞ்சித்குமார் என்பவரின் லாரியில் பேட்டரியை திருடிய மர்ம நபர்கள் டீசல் டேங்கை திறந்து, அதில் இருந்த 200 லிட்டர் டீசலையும் திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் 2 லாரிகளில் பேட்டரி மற்றும் டீசலையும், ஒரு லாரியில் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் டிராக்டர் பழுது பார்க்கும் பட்டறையில் நின்று கொண்டிருந்த 2 டிராக்டர்களின் பேட்டரி களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது சம்பந்தமாக டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர். அதில், லாரிகளில் பேட்டரி, டீசலையும், டிராக்டர்களில் பேட்டரியையும் திருடிய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் 10 லாரிகள், 2 டிராக்டர்களின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட 12 பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
    சோழத்தரம் அருகே டிராக்டரை தனியார் நிறுவனத்தினர் எடுத்து சென்றதால் மனமுடைந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கருணாகரநல்லூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 45). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து டிராக்டர் ஒன்று விலைக்கு வாங்கி இருந்தார். அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழரசனால் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், தவணை தொகையை உடனே செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

    மேலும் அவர் டிராக்டரை ஒரு மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று தமிழரசனின் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த டிராக்டரை எடுத்து சென்று விட்டனர். இதனால் தமிழரசன் மனஉளைச்சல் அடைந்தார்.

    பின்னர் அவர் தவணை தொகையை தன்னால் கட்ட முடியவில்லையே என வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம் பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    தவணை தொகையை செலுத்த முடியாததால் தனியார் நிறுவனத்தினர் டிராக்டர் எடுத்து சென்றதால் விவசாயி மனம் உடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Accident #MadhyaPradesh
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரில் இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளாதாகவும், மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிகாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Accident #MadhyaPradesh
    உகாண்டாவின் வடக்கு பகுதியில் பேருந்து ஒன்று டிராக்டர் மற்றும் லாரியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #UgandaBusAccident

    கம்பாலா:

    உகாண்டாவில் சாலை போக்குவரத்து மிகவும் அபாயகரமானதாகும். அங்கு 2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் நடந்த சாலை விபத்துகளில் 9,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள் கிர்யாடோங்கோ என்னும் பகுதியில் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே டிராக்டர் ஒன்று விளக்கு இல்லாமல் வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் இருட்டில் அந்த டிரக்டருடன் பேருந்து மோதியுள்ளது. 



    அதோடு பின்னே பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீது அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் மரணமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #UgandaBusAccident
    ×