என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முளைப்பாரி"
- வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
- தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருகிற 8ந்தேதி கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று மாலை அல்லாளபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் ஊர்வலமாக வந்து யாக சாலைக்கு சென்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை நடத்தினர்.
தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை பல்லாக்குஒலியுல்லா குடியிருப்பு பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள், தாங்கள் வளர்த்த பாரியை தலையில் சுமந்து கிராமத்தைச் சுற்றி மேளதாளத்துடன் வந்தனர். பின்னர் அதனை கடலில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை அருகே முளைப்பாரி திருவிழா நடந்தது.
- இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெரிய கோட்டை அருகே உள்ள தெக்கூரில் உலகுடைய அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்க்க தொடங்கினர்.
தினந்தோறும் இரவு தெக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில், பாரம்பரிய முறைப்படி பெண்கள் மற்றும் சிறுமிகள் கும்மிபாட்டு பாடி ஆடியபடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியும், கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர்.
மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முளைப்பாரிகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக சுமந்து கொண்டு கைலாசநாதர் கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோவில்களில் இறக்கி வைத்து வழிபாடு செய்த பின்னர் அருகில் உள்ள உப்பாற்றில் சென்று கரைத்தனர்.
- விவசாயம் செழிக்க அம்மனுக்கு முளைப்பாரி விழா நடந்தது.
- இதில் ஆயிரக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் அழியாதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி கிராமமக்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். மேலும் தினமும் இரவு வழிபாடு நடந்தது. நேற்று இரவு பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று மந்தைச்சாவடியில் வைத்தனர்.
பின்னர் காலை மீண்டும் மந்தைச்சாவடியில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அழியாத நாயகி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
முளைப்பாரிகளை சுற்றி பெண்கள் கும்மி கொட்டினர். அதன்பிறகு ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஊருணியில் அலசினர். இதில் ஆயிரக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த திருவிழா குறித்து கிராம மக்கள் கூறும்போது, விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி வளர்த்து அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தனர்.
- முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைதான் முளைப்பாரி விழா என்று கூறப்படுகிறது.
- அம்மன் கோவில்களில் ஆடிமாதம் முளைப்பாரி விழா நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் வறட்சி நீங்கி மழை நன்றாக பெய்யவும், விவசாயம் நன்றாக விளையவும் நெற்பயிர்களின் முளைப் புத்திறனை கண்டறிய ஆடி மாதங்களில் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மனுக்கு திருவிழாக்கோலம் களைகட்டிவிடுவதும், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் விளையும் தானியத்தில் ஒருபங்கை விதையாக எடுத்து பாதுகாத்து வைத்து அந்த விதைகளின் முளைப்புத்திறனை கண்டறிய இந்த முளைப்பாரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அம்மன்கோவில்களில் முளைப்பிறை எனப்படும் கீற்றுகொட்டகை அமைத்து காப்பு கட்டி விழா தொடங்கும். அந்த நாளில் கீற்று கொட்டகையில் முளைப்பாரி போடுவார்கள்.
இந்த முளைப்பாரியை சூரிய ஒளி படாமல் மூடி வைத்து கடும் விரதத்துடன் பெண்கள் தினமும் தண்ணீர் தெளிப்பார்கள். முளை வளரும் 9 நாட்களும் பெண்கள் இரவில் கூடி கும்மி கொட்டி அம்மனை வணங்கி முளைப்பாரி நன்கு வளரவேண்டும் என்று வேண்டி பாடுவார்கள். 9 நாட்கள் வளர்ந்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து 10-ம் நாள் மேள தாளத்தோடு அம்மனை தொழுது பாடி குலவையிட்டு ஊர்வலமாக சென்று குளத்தில் கரைப்பார்கள்.
வேளாண்மையை செழிப்பாக்க முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைதான் முளைப்பாரி விழா என்று கூறப்படுகிறது. முளைப்பாரி எடுப்பதால் நீர்நிலைகள் நிறைந்து உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பது ஐதீகம். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக செழித்து வளர அனைத்து அம்மன் கோவில்களில் ஆடிமாதம் முளைப்பாரி விழா நடைபெற்று வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 211 கோவில்களில் முளைப்பாரி விழா நடைபெற்றது. இதற்காக கிராமங்கள் தோறும் அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. விழாவையொட்டி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வழுதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.
- பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகை அபிேஷக, ஆராதனை நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வழுதுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முளைக்கொட்டு திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி வழுதூர் அருளொளி நகர், ரெயில்வே கேட் உள்ளிட்ட தெருக்களில் முத்து எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
5-ம் நாளில் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைக்கப்பட்டது. பின்னர் பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகை அபிேஷக, ஆராதனை நடந்தது.
இரவில் முளைக்கொட்டு, ஒயிலாட்டம், ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு, கும்மிப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு மாரியம்மன் கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பா ரிகளை ஆண்கள், பெ ண்கள் சுமந்து வழுதூர் கிராமத்தை சுற்றி ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதையடுத்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க கரகத்துடன் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். ஏராளமானோர் அக்னி சட்டி எடுத்தனர்.
உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடந்த ஆடிப்பூர முளைக்கொட்டு உற்சவ விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.
- அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
- பக்தர்கள் முளைப்பாரியை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கள்ளத்தெருவில் உள்ள ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலத்தை கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் தொடங்கி வைத்தார்.
பின்னர் சாமி சன்னதி, மேலவீதி, மயிலாடுதுறை சாலை வழியாக சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் ஊர்வலம் கதிராமங்கலம் காவிரி ஆற்றை வந்து அடைந்தது. பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த முளைப்பாரியை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர் ஓடக்கரையில் கல்கத்தா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தை முன்னிட்டு மயான சூரை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று மயான சூரை நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு அபிஷேக ஆராதனையும், கரகம் புறப்பாடு நடந்தது. அப்போது பக்தர்கள் காளி வேடம் அணிந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கல்கத்தாகாளி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு மயான சூரை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையார் போலீசார் செய்திருந்தனர்.
- விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரி எடுத்தனர்.
சீர்காழி தென்பாதியில் கருப்பண்ணசுவாமி, ஏழைகாத்தஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை உப்பனாற்றில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரிகளை தலையில் சுமந்து திட்டை ரோடு, தென்பாதி வழியாக உப்பனாற்றை வந்தடைந்தனர்.
பின்னர் ஆற்றில் முளைப்பாரியை விட்டனர். தொடர்ந்து ஏழு கன்னி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகள் திருப்பூர் மக்கள் நல அறக்கட் டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில் இரவு, பகலாக நடைபெற்று வரு கிறது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பிரசன்னாபிஷேகம், அக்னிஸங்க்ரஹணம், தீர்த்தஸங்க்ரஹணம், பரிவார கலாகர்ஷணம், யாகசாலை அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள் ளிட்ட சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. மாலை 4 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது.
அணைபாளையம் மாகாளி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத் தில் 1000 பெண்கள் முளைப் பாரி மற்றும் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வல மாக வந்து கந்தபெருமான் கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் முருகனுக்கு முதற்கால யாக பூஜை தொடங்கியது.
இதையடுத்து அங்குரார்ப் பனம், ரஷாபந்தனம், கும் பாலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை கும்பாபிஷேக விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா ஆய்வு செய்தார்.
அப்போது விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர் களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்