search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியம்"

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர் தர்ஷன் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். #Election2019 #Vote
    கோவை:

    கோவை கணபதியை சேர்ந்த சக்திவேல், அனிதா தம்பதியின் மகன் தர்ஷன் (வயது 8). இவர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைய திட்டமிட்டார். இதையடுத்து தனது தந்தையின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைய தொடங்கி 14-ந் தேதி முடித்தார். இதில் அவர் மொத்தம் 1,050 ஓவியங்கள் வரைந்தார்.

    இந்த ஓவியத்தில் விரலில் அழியாத மை வைப்பது போன்றும், அதை சுற்றிலும் தேசிய கொடியில் உள்ள நிறங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஓவியங்களில் வாக்களிக்க தயார், உனது ஓட்டு, உனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், நல்ல இந்தியா அமைய வாக்களியுங்கள், உங்கள் விரலின் வலிமை உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து சிறுவன் தர்ஷன் தனது ஓவியங்களுடன் கலெக்டர் ராஜாமணியை பார்த்தார். அப்போது கலெக்டர் சிறுவனின் திறமையை பாராட்டினார். இதுகுறித்து சிறுவன் தர்ஷன் கூறியதாவது:- எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் 1,050 வரைந்து உள்ளேன். இதற்கு 8 நாட்கள் ஆனது. வலிமையான நாடு அமைய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    புதுடெல்லி:

    பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சொகுசு கார்களையும், 173 ஓவியங்களையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான அனுமதியை மும்பை தனிக்கோர்ட்டு வழங்கியது.



    இதையடுத்து அவற்றை அடுத்த சில தினங்களில் மத்திய அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளன. ஓவியங்கள் மட்டுமே ரூ.57 கோடியே 72 லட்சம் மதிப்புடையவை என தகவல்கள் கூறுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ், போர்ஸ், மெர்சிடஸ், டயோட்டா பார்ஜூனர் என 11 சொகுசு கார்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றின் விற்பனை தொகை, அரசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும்.    #NiravModi #ArtCollection #Auction #PNBFraud
    சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்தநாளையொட்டி 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena
    மும்பை:

    சிவசேனாவின் நிறுவனத் தலைவரான பால் தாக்கரே 23-1-1926 அன்று பிறந்து கடந்த 17-11-2012 அன்று காலமானார். இன்று அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் மிக எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

    மும்பையில் உள்ள மேயர் ஹவுஸ் இல்லத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர அரசை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தார்.

    அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  மேயர் ஹவுஸ் இல்லத்தின் சொத்து பத்திரங்களை மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார்.



    இதற்கிடையில், மும்பையில் உள்ள சிவசேனா கட்சி தலைமையகத்தில் பிரபல ஓவியர் ஒருவர் சுமார் 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena 
    அகில இந்திய அளவில் தென்னக ரெயில்வேயில், மதுரை ரெயில்நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக விருது வழங்கப்பட உள்ளதாக முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
    மதுரை:

    இந்திய ரெயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில் பயணிகளை கவருவதற்காக ரெயில்நிலைய வளாகங்கள், பிளாட்பாரங்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை கோட்ட ரெயில்வேயில் மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ரெயில்நிலையங்களிலும் பயணிகளை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கு தற்போது ரெயில்வே மந்திரியின் விருது கிடைத்துள்ளது.

    இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:-

    ரெயில்வே துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் பயணிகளை கவரும் வகையிலான ஓவியங்கள் அனைத்து மண்டலங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ரெயில்வே வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதில் இந்திய ரெயில்வேக்கு உள்பட்ட 16 ரெயில்வே மண்டலங்களில் இருந்தும் ரெயில்நிலையங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் மதுரை ரெயில்நிலையத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ரெயில்வே அமைச்சகத்தின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை ரெயில்நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் தானியங்கி படிக்கட்டு பகுதியில் வரையப்பட்ட ஓவியத்துக்காக கண்ணன் என்ற ஓவியருக்கும், ரெயில்நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட கட்டண காத்திருப்பு அறையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக ரமேஷ் என்பவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ரெயில்வே மந்திரி தலைமையில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இதற்காக இந்த ஓவியர்கள் 2 பேரும் டெல்லி செல்கின்றனர். இந்த ஓவியம் குறித்து முதன்முதலாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அழகிய மதுபானி ஓவியத்தை வாங்கி அதற்கான பணத்தை ‘ருபே கார்ட்’ மூலம் செலுத்தினார். #ModiInSingapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய அன்னியச் செலாவணிக்கு மாற்றான ‘பிம், ருபே, எஸ்.பி.ஐ.’ மொபைல் ஆப்களை கடந்த 31-ம் தேதி சிங்கப்பூர் மக்களிடையே அறிமுகம் செய்து வைத்தார்.



    இந்நிலையில், சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கேம்ப்பெல் சாலையில் அமைந்துள்ள இந்திய பாரம்பரியக் கலைகள் கண்காட்சி கூடத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த அழகிய மதுபானி ஓவியத்தை வாங்கி அதற்கான பணத்தை ‘ருபே கார்ட்’ மூலம் செலுத்தினார்.

    நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மிதிலை நகரில் மதுபானி ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. #ModiInSingapore

    ×