search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கைகள்"

    உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுதனர். #koovagamkoothandavar

    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலி கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம், மும்பை, கல்கத்தா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

    திருநங்கைகள் புதுப்பெண்கள் போல அலங்கரித்து, பின்னர் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். கூத்தாண்டவரை கணவராக நினைத்து அவரின் அருமை பெருமைகளை குறித்து இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தேரோட்டம் நடைபெற்றது

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை)காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடங்கி வைத்தார். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக 11 மணியளவில் பந்தலடி வந்தது. பின்னர் அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி அறுத்து எறிந்தனர். பூக்களைப் பிய்த்து வீசி, நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்தனர். ஓப்பாரி வைத்து அழுதனர். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். #koovagamkoothandavar

    பழனியில் வீட்டு வாடகை கொடுக்க போதிய வருமானம் இல்லாததால் வாடகை கொடுக்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பழனி:

    திண்டுக்கல் மாவட்ட சமூகநலத்துறை, போகர் தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு, தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த முகாமுக்கு சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார்.

    போகர் தொண்டு நிறுவன இயக்குனர் கார்த்திகாயினி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, மாவட்ட சமூகநல அலுவலர் முத்துமீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சப்-கலெக்டர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:- பழனி பகுதியில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் வாழ்வாதாரத்துக்காக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் திருநங்கைகள் ஒன்றிணைந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தால், சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதையடுத்து திருநங்கைகளுக்கு வழங்கப்படும் உதவிகள், தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதன் பின்னர் சப்-கலெக்டரிடம் திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    அப்போது தாங்கள் அனைவரும் வாடகை வீடுகளில் வசிப்பதாகவும், போதிய வருமானம் இல்லாததால் வாடகை கொடுக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் பேசிய சப்-கலெக்டர் அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முகாமில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். #tamilnews
    சென்னை சூளைமேடு மற்றும் நுங்கம்பாக்கத்தில் திருநங்கைகளை உல்லாசத்துக்கு அழைத்த 25 இளைஞர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    சென்னை:

    சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதியில் திருநங்கைகளுடன் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக இளைஞர்கள் கூடுவது வழக்கம்.

    போதையில் மிதக்கும் இளைஞர்கள் பலர் நள்ளிரவு நேரத்தில் உற்சாக மிகுதியில் சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதிக்கு செல்வதுண்டு. அங்கு எப்போதும் சாலையில் திருநங்கைகள் அணி வகுத்து நிற்பார்கள். அவர்கள் காரில் வரும் வாலிபர்களிடம் சென்று அருகில் உள்ள இருட்டான பகுதிக்கு செல்லலாம் என்று கூறுவார்கள். இதில் மயங்கும் இளைஞர்களுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் வாங்கிக் கொள்வார்கள்.

    இது தொடர்பாக திருநங்கைகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் என்றும், அதில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்த கோடம்பாக்கத்தை சேர்ந்த குமார், கோயம்பேட்டை சேர்ந்த வருண்குமார், பாலா, ஆறுமுகம், ஆவடி சிவகுமார், சபரிநாதன், கொடுங்கையூர் ராஜேஷ்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல சூளைமேடு நெல்சன்மாணிக்கம் ரோடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடத்திய அதிரடி வேட்டையில் மேலும் 18 பேர் சிக்கினர். இவர்கள் 25 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இரவு நேரங்களில், இளைஞர்கள் யாரும், நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிக்கு திருநங்கைகளை தேடி வரவேண்டாம் என்றும் இதை மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். கைதான இளைஞர்கள் அனைவரும் 20 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

    திருநங்கைகளின் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்து வேல்பாண்டி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் சாலையோரமாக அணி வகுத்து நிற்பார்கள்.

    அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை அவர்கள் பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இதனை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் திருநங்கைகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் செல்வநாகரத்தினம், நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுமார் 100 திருநங்கைகள் கலந்து கொண்டனர். அப்போது சாலையோரமாக நின்று பாலியல் தொழிலுக்கு அழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதற்கு மாற்றாக உங்களுக்கு வேறு வேலை வாங்கி தருகிறோம் என்று திருநங்கைகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    அழகு கலை நிபுணராக, ஓட்டல் வரவேற்பாளராக வேலை வாங்கி தருவதற்கு தயாராக இருப்பதாக துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட திருநங்கைகள் ஒன்று கூடி பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகளில் பலர் என்ஜினீயரிங் முடித்திருந்தனர். எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்.சி., டிப்ளமோ படிப்புகளை முடித்துள்ளனர். இவர்களில் பலர் நிறுவனங்களில் வேலையும் செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக 15 நாள் கழித்து மீண்டும் ஒரு கூட்டம் நடத்துவதற்கும் போலீசார் முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகே கூத்தாண்டவர்கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் திருநங்கைகள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு திரு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அதன் பின்னர் 25-ந் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாயணம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர்.

    மேலும் மும்பை, கொல்கத்தா, புனே, டெல்லி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் ஏரளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களை புதுபெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். கோவிலில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் திருநங்கைகள் அனைவரும் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


    இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர்கள் தில்லை கோவிந்தன், ராஜேந்திரன், சிவராஜ் ஆகியோர் செய்துள்ளனர். அந்த பகுதியில் பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×