என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 113362"
- மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
- இப்பணிக்காக 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டன.
கோவை,
கோவை அவிநாசி சாலையில் மேம்பால தூண்கள் அமைக்கும் பணியின் காரணமாக லட்சுமி மில் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை அவினாசி சாலையில் உப்பிலி பாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ.1.621 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்ம ட்டப் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டன. தற்போது வரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூண்கள் அமைக்க ப்படும் முக்கிய சந்திப்பு களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது லட்சுமி மில் சந்திப்பில் தூண்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்து றையினர் கூறும் போது, நவஇந்தியா சந்திப்பு, புலியகுளம் சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல் லும் வாகனங்கள், லட்சுமி மில் சிக்னல் அருகே சில மீட்டர் தூரம் தள்ளி உள்ள சர்க்கியூட் ஹவுஸ் சாலையில் உள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து காந்திபுரம் செல்ல லாம். காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு வழியாக புலிய குளம், அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகன ங்கள் லட்சுமி மில் சந்திப்பை அடைந்து அவி நாசி சாலையில் இடதுபுறம் திரும்பி, சில மீட்டர் தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ள இடை வெளி வழியாக யூடர்ன் செய்து செல்ல வேண்டிய இடங்க ளுக்கு செல்ல லாம்.
இதே யூடர்ன் வழியாக குப்புசாமி நாயுடு மருத்து வமனை சந்திப்பில் இருந்தும்,புலியகுளம் செல்லும் வாக னங்களும் செல்ல லாம். நவஇந்தியா சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு நோக்கி வருபவர்கள் மீண்டும் நவஇந்தியாவுக்கு யூடர்ன் செய்து செல்லவும் வழி வகை செய்யப்ப ட்டுள்ளது.
போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவா ணன் கூறும்போது, அவி நாசி சாலையில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், சிக்னலுக்காக காத்திருக்காத வகையிலும், யூடர்ன் செய்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்ப ட்டுள்ளன. இதனால் வாக னங்கள் நெரிசலில் சிக்கா மல் சீராகசென்று வருகின் றன என்றார்.
- நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை,
கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் இருந்து சேரன்மாநகர் 3-வது பஸ் நிறுத்தம் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, 24-வது வார்டு கவுன்சிலர் பூபதி, மாநகராட்சி பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது குமுதம் நகரில் உள்ள குறுக்கு சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் அதனை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.
- கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் மகள், 5 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார்.
அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
பின்னர் அவர் பேரூர் போலீஸ் நிலையத்தில் தன்னை தவிக்க விட்டு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- பாலாஜி தனது வேலையின் சிரமத்தை பற்றி அடிக்கடி அவரது சகோதரியிடம் கூறி வந்தார்.
- செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை செல்வபுரம் அருகே செட்டி வீதியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா (29). இவரது சகோதரர் பாலாஜி (வயது25). இவர்கள் இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் பாலாஜி தனது வேலையின் சிரமத்தை பற்றி அடிக்கடி அவரது சகோதரியிடம் கூறி வந்தார்.
மேலும் வாழ்கையில் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் அவரது தாயும், அவரது சகோதரியும் பாலாஜிக்கு ஆறுதல் கூறி வந்தனர். சம்பவத்தன்று பாலாஜி அவரது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து சாப்பிட்டார். பின்னர் 3 பேரும் தூங்க சென்றனர்.
சிறிது நேரத்தில் லட்சுமிபிரியா எழுந்து பார்த்தபோது, படுக்கை அறையில் பாலாஜி இல்லாததை கண்டார். அவரை வேறொரு அறையில் தேடி பார்த்தபோது, அந்த அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்த போது, பாலாஜி தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுபோதையில் இருந்த மணிமாறன் அருண்குமாரை கத்தியால் குத்தினார்.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள புளியமரத்து பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (40).
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் கிடா வெட்டு போடுவதற்காக இவர்கள் 2 பேரும் மதுபோதையில் கறி வெட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன் தான் வைத்து இருந்த கத்தியால் அருண்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
- மாணவர்கள் அனைவரும் தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் பயணித்து வருகிறார்கள்.
நீலாம்பூர்,
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் எண்ணற்ற தனியார் கல்லுரிகள் உண்ணன.
இங்கு திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். இதுதவிர தனியார் ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் காலை நேரத்தில் பஸ்கள் மூலம் வேலைக்கு சென்று, மாலை நேரத்தில் வீடு திரும்புகின்றனர்.
இதனால் காலை, மாலை நேரங்களில் கோவை மாநகர பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதும். கூட்டம் எவ்வளவு தான் அதிகமாக காணப்பட்டாலும் அரசு பஸ்கள் மிகவும் குறைந்த அளவு இயக்கப்படுகிறது. இதனால் அனைத்து பஸ்களிலுமே கூட்டம் அதிகமாக இருக்கும்.
குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் பயணித்து வருகிறார்கள்.
ஒருசில வழித்தடங்களில் தனியார் பஸ்களும் குறைந்த அளவே இயங்கி வருகிறது. எனவே பஸ்களில் கூட்டத்தை தவிர்க்க முடிவில்லை. இதனால் மாணவர்கள் வேறுவழியின்றி படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு தனி யார் பஸ் சென்றது. அதில் கல்லூரி மாணவர்கள் கடைசி படிக்கட்டில் ஒற்றைக்காலை படியில் வைத்த படி பயணம் செய்தன.
கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்பவே அவர்களின் பயணமானது இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால், சாலையில் ெசல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒரு அச்சத்துடனேயே செல்கின்றனர்.
எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பள்ளி-கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பஸ் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
- 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
- 4 பேரும் இளம்பெண் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர்.
கோவை,
கோவை அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், கொண்டையாம் பாளையத்தை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயம் செய்யப்பட்டது.
சம்பவத்தன்று தனது வருங்கால மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் ஜார்ஜ் அவரை சரவணம் பட்டியில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று ஆடை வாங்கி கொடுத்தார்.
பின்னர் அவர் சுவாதியை அவரது வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் கீரநத்தம்- அத்திப்பாளையம் ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தென்னை மட்டையால் ஜார்ஜை தாக்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் சுவாதி கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 4 பேரையும் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து ஓடி விட்டனர்.
இது குறித்து ஜார்ஜ் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி அவரது வருங்கால மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
- ராஜ்குமார் கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை மர்ம நபர் திருடி சென்றார்.
- போலீசார் 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
காரமடை அருகே உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவர் அந்த பகுதியில் லான்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை யாரோ மர்ம நபர் திருடி சென்றனர்.
இது குறித்து அவர் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இஸ்திரி பெட்டியை திருடிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மோகன் (24), சந்துரு (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- அன்னூர் போலீசார் குழந்தையின் சித்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஸ்ரீகையா (4) என்ற பெண் குழந்தையும், ஸ்ரீ ஜேஸ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. பபிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
பின்னர் ராஜேஷ் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கீர்த்தனா (23) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவரது பராமரிப்பில் ஸ்ரீ ஜேஸ் இருந்து வந்தார். சம்பவத்தன்று குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது. அதற்கு கீர்த்தனா மருந்து கொடுத்து உள்ளார்.
பின்னர் ஸ்ரீஜேஸ் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்து இடது கை முட்டியிலும், வாயிலும் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானது. இதனையடுத்து கீர்த்தனா குழந்தையை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். இடது கை மனிக்கட்டில் காயம் உள்ளது.
ஏதோ கடித்தது போல காயம் இருப்பது தெரியவந்தது. கீர்த்தனாவிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். எனவே போலீசாருக்கு 2 வயது ஆண் குழந்தையின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சித்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- போட்டியிட விரும்புவோர், 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 என 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்-17, மாநகராட்சி உறுப்பினர்கள்-100, ஏழு நகராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-198, மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-513 என 825 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இவர்களில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, தாளியூர் பேரூராட்சியில் ஒன்று என மூன்று காலியிடங்கள் உள்ளன. அதனால் 822 உறுப்பினர் கள் ஓட்டுப்போட தகுதியானவர்களாக இருக்கின்றனர்.
இதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் சமீபத்தில் வெளியிட்டார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
போட்டியிட விரும்புவோர், வருகிற 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். 12-ந் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 14-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.
போட்டி இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில், 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
கலெக்டர் அலுவலக பழைய கட்டிடம், இரண்டாவது தளத்தில் அறை எண் 1-ல், மாலை 4 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்படும்.
தேர்தல் நடவடிக்கைகள் 24-ந் தேதி முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 28-ந் தேதி நடத்த வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருக்கிறது.
- கே.ஜி.மில் அருகே அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
- சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் கே.ஜி.மில் அருகே நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.
எனவே மின்கம்பியில் பயங்கர தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்தனர்.
அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் சாலையில் கடந்த வாரம் அதிகாலை கர்நாடக பஸ்- ஜீப் மோதி விபத்து நடந்தது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை இல்லை. எனவே அங்கு அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதனால் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைத்து, வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றுகின்றனர்.
- 70 போதை மாத்திரைகள், ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை,
கோவை மாநகரில் வாலிபர்களிடம் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக, பெரிய கடைவீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். எனவே அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் போதை மருந்து, ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. எனவே அவர்களை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பி (எ) அக்பர் அலி (வயது 27), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தொழிலாளி ரியாஷ் கான் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து போதை மருந்தாக மாற்றி, ஊசி மூலம் உடம்பில் செலுத்துவது தெரிய வந்தது.
எனவே போதை மாத்திரை, மருந்துகள் விற்றதாக, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 70 போதை மாத்திரைகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ. 1,400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணசாமி ரோட்டில் கஞ்சா விற்றதாக, தெற்கு உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த மீன் கடை தொழிலாளி ஷாஜகான் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்