search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போதுவை என்ற இடத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகனும், 3 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் கணவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருநங்கை ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிற்கு வராமல் திருநங்கையுடன் வசித்து வந்தார். இது குறித்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் நாகராஜை அழைத்து அறிவுரை வழங்கி அவரது மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னரும் இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 3 மாத பெண் குழந்தையுடன் மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் 3 மாத கைக்குழந்தையுடன் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இளம்ெபண்ணின் கணவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் டிரைவர் ஜெயபாலை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவி நகரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை 6 மணியளவில் இளம்பெண் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது மேல் வீட்டில் வசித்து வரும் டிரைவர் ஜெயபால் (வயது 47) என்பவர் மறைந்து இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். உடனடியாக ஜெயபால் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து இளம்பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த டிரைவர் ஜெயபாலுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.

    • ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
    • இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு (வயது22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவரிடம் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65) மற்றும் அவரது மகன் விவேக் (35), ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளோம்.

    அதனை மீட்க பணம் வேண்டும் என கேட்டனர். சம்பவத்தன்று வங்கிக்கு சென்ற விசு அவர்களின் நகையை ரூ.68 ஆயிரம் கொடுத்து மீட்டு கொடுத்தார். பின்னர் தந்தை, மகன் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து விசு அவர்கள் கொடுத்த நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார். அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரியவந்தது. ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது.
    • இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மேலும் எஸ்.பி.கே. நகர், அருண் நகர், எம்.ஜி.ஆர் நகர், ராகவேந்திரா நகர், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதியில் மரம் விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் மருதமலை சாலையில் உள்ள தனியார் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட தகரம் சாய்ந்தது.

    இதனால் வடவள்ளி சுற்றுவட்டார பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல வானங்கள் செல்ல வழி இல்லாமல் தவித்தனர். இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
    • மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கோவை போலீசார்கள், பெண்கள் அதிகம் கூடி நிற்கும் பஸ் நிறுத்தங்களுக்கு சென்று, காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை பூ மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர்.

    அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். உதாரணமாக பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் 1098 என்ற எண்ணில் அழைக்கலாம். பொதுவான அழைப்புகளுக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதியோர்களுக்கு இது ஏதும் பிரச்சினை என்றால் 14567 என்ற எண்ணில் அழைக்கலாம்.

    மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பெண்கள் அனைவரும் விரும்பி கவனித்தனர்.

    • கூட்டத்திற்கு தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிபையன் தலைமை தாங்கினார்.
    • முதல்வர் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பதற்காக ரூ.68 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    வடவள்ளி,

    தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நரசிபுரத்தில் நடந்தது. தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சாமிபையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் முதல்-அமைச்சர் பாகுபாடு இன்றி செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் சிறப்பு திட்டத்தின் கீழ் இதுவரை கோவை மாவட்டத்திற்கு ஊராட்சிகளில் சாலைகள் அமைப்பதற்கான ரூ.68 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். முதல்-அமை்சர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்து செயல்படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. நாகராஜன், துணை மேயர் வெற்றிச்செல்வன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • சேர்க்கை தொடர்பான விவரங்களை www.gascpollachi.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    பொள்ளாட்சி,

    பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாட்சி அரசு கல்லூரி முதல்வர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), பி.எஸ்.சி.(கணிதம்), பி.காம், பிபிஏ, பி.காம் (சிஏ) உள்ளிட்ட இளநிலை பாடப்பிரிவுகள் கல்லூரியில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 60 இடங்கள் உள்ளன. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    மாற்றுதிறனாளிகள், விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அதற்கான ஆதாரச் சான்றிதழ்கள், நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 25-ந் தேதி காலை வெளியிடப்படும். வருகிற 26-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜுன் 2-ந் தேதி வரை பிற பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வும் நடைபெறும்.

    சேர்க்கை தொடர்பான விவரங்களை www.gascpollachi.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • மாநில அளவில் கோவை 4-ம் ரேங்க் பட்டியலில் உள்ளது.
    • 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை ெவறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதியதில், 339 பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு பின் முழுமையாக பள்ளிகளை இயக்கி நடத்தப்பட்ட முதல் தேர்வு என்பதால் பிளஸ்-2 தேர்வு முடிவில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதில், ஆப்சென்ட் பட்டியல் நீண்டதோடு முக்கிய பாடங்களில், கடின வகை கேள்விகளே அதிகம் இடம்பெற்றிருந்தது.

    அரசுப்பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவும் குறைந்ததால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என்ற கருத்து எழுந்தது. ஆனால் தேர்வு முடிவு மாணவர்களுக்கு சாதகமாகவே இருந்ததோடு, தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது. கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியதில் 97.57 சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றது.

    மாநில அளவில் 4-ம் ரேங்க் பட்டியலில் இருந்தாலும், 0.28 சதவீதத்தில் தான், முதலிடத்தை தவற விட்டது. ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் இப்படியிருக்க, 90 சதவீதத்திற்கும் மேல், தேர்ச்சி அடைந்த பள்ளிகள் மட்டுமே 339 என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், 89-80 சதவீத தேர்ச்சியை 21 பள்ளிகளும், 79 சதவீத தேர்ச்சியை ெவறும் மூன்று பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன.

    இதன்மூலம், மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளித்ததற்கு, கை மேல் பலன் கிடைத்ததாக, ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பி நடத்தப்பட்டது. இதில் கேள்விகள் சிந்தித்து எழுதும் படியாக இருந்தது.

    பொது வினாத்தாள் முறையில் பதிலளிக்க, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இது பொதுத் தேர்வு முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் வினாத்தாளை பிரிண்ட் அவுட் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்தால் இத்திட்டம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்றனர்.

    • நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர் உள்ளே நுழைந்துள்ளார்.
    • மராத்தாள் மகன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    வெள்ளியங்கிரி தனது 68 வயது தாய் மாராத்தாள் என்பவரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். மாராத்தாள் தனியாக ஒரு அறையில் படுத்து இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை அவருக்கு தெரியாமல் கழற்றி தப்பிச் சென்றனர்.

    மறுநாள் செயின் மாயமானது கண்டு மராத்தாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் வீட்டை ஆய்வு செய்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடத்த 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    • மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
    • சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் ரெயில்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    கோவை,

    கோவை மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 7 ெரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை-பாலக்காடு ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மதுக்கரை ெரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளன. எனவே சொர்ணூரில் இருந்து 11-ந் தேதி காலை 8.20 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ெரயில் (எண் 06458), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ெரயில் (எண் 16324) ஆகியவை பாலக்காடு-கோவை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

    கோவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு சொர்ணூர் புறப்பட்டுச் செல்லும் ெரயில் (எண்.06459) கோவை-பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது. இது தவிர, திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு பாலக்காடு புறப்பட்டு வரும் ெரயில் (எண் 16843), போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    சொர்ணூரில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ரயில் (எண் 06804), மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 11.05 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் ெரயில் (எண் 22609) ஆகியவை பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

    கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு பாலக்காடு நகரம் புறப்பட்டுச் செல்லும் ெரயில் (எண் 06807) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கீர்த்தியை ஆகாஷ் தனது நகைக்கடையில் வேலைக்கு சேர்த்தார்.
    • இரவு 8 மணியளவில் கீர்த்தி திடீரென மாயமானார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27).

    இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு கீர்த்தி (27) என்ற இளம்பெண் வேலை கேட்டு வந்தார். அவரிடம் கடையின் உரிமையாளர் அடையாள அட்டை கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அந்த இளம்பெண் நாளை தருவதாக கூறினார். இதனையடுதத்து இளம் பெண்ணை ஆகாஷ் தனது நகைக்கடையில் வேலைக்கு சேர்த்தார்.

    இரவு 8 மணியளவில் கீர்த்தி திடீரென மாயமானார். அவரை கடை உரிமையாளர் தேடினார். அப்போது அவர் கடையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து நகைக்கடை உரிமையாளர் ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நகைக்கடையில் 8 பவுன் தங்க செயினை திருடி மாமாயன இளம்பெண்ைண தேடி வருகிறார்கள்.

    • நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் பிரவீன் குமார் அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
    • இதுகுறித்து பிரவீன் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவரது தோழி கோவை மீனா எஸ்டேட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 4-ந் தேதி தோழிக்கு பிறந்தநாள் என்பதால் பிரவீன் குமார், அவரது அறைக்கு சென்றார். பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் மறுநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு பிரவீன் குமார் தனது தோழியின் அறையிலேயே தங்கினார்.

    நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்து அங்கு இருந்து தம்பி சென்றனர்.

    இதுகுறித்து பிரவீன் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தைப் படித்து சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    தலை மறைவாக உள்ள கஸ்தூரி ரங்கன், கருப்பு என்கிற தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.  

    ×